நம் நாட்டிலுள்ள அனைத்து அரசுகளுக்கும், கட்சிகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும் ஒரு எளிய இந்தியனின் விண்ணப்பம்: ஊடகங்களில் காண்பிக்கப்பட்ட ஒரே காரணத்தால், குடும்பப்பொறுப்பை ஒற்றையாய் சுமக்கும் ஏழை அம்மாவுக்கு உதவியாய் சாலையில் தேநீர் விற்ற பதின்வயது சிறார்களை கவர்ந்து சென்று, காப்பகத்தில் வைத்திருந்து, தாயின் + நல்மக்களின் எதிர்ப்பு கண்டு பின்வாங்கி, மீண்டும் தாயிடம் சேர்க்கின்றது ஒரு அமைப்பு, அரசின் உதவியோடு. 'இனிமேல் குழந்தைகளை வேலைக்கு அனுப்பமாட்டேன், நன்கு வளர்ப்பேன், பள்ளிக்கு அனுப்புவேன்' என அந்த அம்மா உத்தரவாதம் தந்தபிறகு. தேநீர் விற்ற சிறார்களுள் ஒருவர் ஆணுடை அணிந்த சிறுமி, சீர்குலைந்த சமூக ஆண்களின் விஷமப்பார்வையிலிருந்து மானம் காக்க ஆணுடை உதவும் என்கிற நம்பிக்கை... 'நீ வேலைக்குப்போய் பசங்கள காப்பாத்தவேண்டியதுதான? ஏன் இப்படி ரோட்ல டீ விக்க வைக்கிற?' என்ற கேள்வி அம்மாவிடம் வைக்கப்படுகிறது. 'குடிகாரர்களும் காம வெறியர்களும் நிறைந்த சமுதாயத்தில் யாரை நம்பி என் குழந்தைகளை தனியே வீட்டில் விட்டுவிட்டு உழைக்கச்செல்வேன்? அது இயலாத காரியம் என்பதால்தானே அவர்களை படிக்கவைக...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!