சூரிச் நகரின் (Zuerich) ஒரு பரபரப்பான மதியப்பொழுதில் நாங்கள் நான்கு பேர் மெக்டோனால்ட்ஸ் ரெஸ்ட்டாரண்டுக்குள் நுழைந்தோம்.
உள்ளே இன்னும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தனர் பணியாளர்கள்.
பொறுமையாக எங்கள் முறை வரும்வரை கவுண்ட்டரில் நகர்ந்து, 'Ja?' என பணியாளர் வினவ, 'நாலு MacBurger menus, நாலிலும் மாமிசம் இல்லாம!' என கெத்துகாட்டினோம்.
'மாமிசம் இல்லாமல்? MacBurger ல அதுதானே மெயின்!' என்றாள் பணியாளி.
'Ja, மாமிசம் இல்லாம!' என்றோம் உறுதியாக.
'அதை எடுத்துவிட்டால் வெறும் சீஸும் சலாட் இலையும்தானே இருக்கும்!' என்றாள் வியப்பு கூடிப்போய்.
'Jawol, அது! அதுதான் வேணும். Full amount charge பண்ணிக்கோ!' என்றோம்.
திகைப்புடன் பார்த்தவள், 'ein moment' என்று மேனேஜரிடம் ஓடி கைகளை ஆட்டி ஆட்டி எங்களை சுட்டி ஏதோ சொன்னாள்.
மேனேஜர், கண்களை ரோல் செய்து, தோள்களை குலுக்கி, 'Ja, geben Sie so!' என்று உள்ளே போய்விட்டார்.
அன்று மகிழ்வாய் பர்கரை உருளை விரல் சிப்ஸ் stuff செய்து coke உடன் உள்ளே தள்ளினோம்.
அன்றிலிருந்து தினசரி மதிய உணவுக்கு இதே routine.
சில நாட்களில் அவள் எங்களை பார்த்ததுமே சிரித்துக்கொண்டு, 'MacBurger menu, மாமிசம் இல்லாமல்?' என்று பழகிவிட்டாள்.
அலுவலகம் சென்று நண்பர்களிடம் எங்கள் வெஜிடேரியன் சாகசங்களை பகிற, அவர்களும் macdee சென்று கெத்து காட்ட ஆரம்பித்தார்கள்.
சில மாதங்களில் MacDonald's Switzerland முழுவதும் Veggie Burger ஒன்றை புதிதாய் launch செய்தது!
வெஜி கட்லெட் மாதிரி குத்துமதிப்பாய் ஒரு லேயர், மாமிசத்துக்கு மாற்றாய்!
தெறி ஹிட்டு, இன்றுவரை!
பிசினஸ்னா Switzerlandதான்பா என நாங்கள் பெருமிதமாய் Zuerich தெருக்களில் காலரை உயர்த்தி (குளிர்ல!) சுத்தினோம்.
பின்னாளில் Macdee நம்ம மண்ணில் உருளை கிழங்கை பன்னுக்குள் திணித்து MacAloo என கல்லா கட்டியபோதுதான் உணர்ந்தோம், பிசினசுன்னா அமெரிக்காடா என்று!
ஒரு நாடு நல்லரசாவதும் வல்லரசாவதும் நம்ம வயிறு வளர்ப்பதிலே என கவியரசர் பாடலை மாற்றிப்பாடிக்கொண்டு 'என்னா கூட்டம்ப்பா நம்ம ஊர்ல!' என சரவணபவன் நோக்கி நகர்ந்தோம் :-)
கருத்துகள்
கருத்துரையிடுக