அந்த பதின்ம வயது சிறுமியின் பெற்றோர், சகோதரன் என அனைவருமே கேள்திறன் + பேச்சு திறன் இழந்தவர்கள். சிறுமி பேசத்தொடங்கிய நாள் முதலே அவள்தான் உலகின் குரல்களை அவர்களுக்கு ஒலி பெயர்த்து சைகை மொழி வழியே உணர்த்துபவள். மீனவ குடும்பம். சொந்த படகில் குடும்பமே அதிகாலையில் கடலில் இறங்கி மீன் பிடித்து காலைப்பொழுதில் விற்று என வாழ்வு நகர்கிறது. நேரத்திற்கு பள்ளி செல்லவும் படிக்கவுமே போராடுகிறாள் இந்தச்சிறுமி. பதின் வயதில் எல்லோருக்கும் தோன்றும் முதல் காதல், தான் யார் என அடையாளம் தேடும் தன்மை, தனக்கு என்ன தேவை என்கிற தேடுதல் அவளுக்கும் உண்டு. ஆனால் அவளது குடும்பம் வெளியுலகத்தொடர்புக்காக அவளை முற்றிலும் சார்ந்திருப்பதால் அவளுக்கு எதற்குமே நேரமில்லை. அதனால் அவளுள் நிகழும் ஏக்கங்கள், கோப தாபங்கள் எல்லாவற்றையுமே அவள் அவர்களுடன் சைகை மொழியில் மட்டுமே பகிர முடிகிறது. பாடல்கள் பாடுவதை அவள் நேசிக்கிறாள். அவளுக்கான சுதந்திர உலகம் அதுவே என உறுதியாக நம்புகிறாள். கல்லூரி படிப்பாக 'இசை'யை தேர்ந்தெடுத்து ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு அவளது பள்ளியின் இசை ஆசிரியர் வழியே கிடைக்க, கனவை நனவாக்க...
உலகம் ஃபுல்லா ரௌடிங்க தொல்லை தாங்கலபா! எவன பார்த்தாலும் "ஏய்!" "ஏய்!" னு சவுண்டு கிளப்பிகிட்டு திரியிராய்ங்க! ஒவ்வோரு "ஏய்" யும் பல ஆயிரங்கோடின்னு பெரும வேற... இன்னாதான் இர்க்குது இந்த "AI" ல பாத்தா காமெடியா கீதுபா! ஊர்ல ஒர்த்தன் ஓரு மெசினு பண்ணானாம். அது ஆய கலைங்க 64ஐயும் அப்டியே செய்யுமாம். அந்த மெசினை சண்டைக்கு விட்டானாம். அதுக்கு எதிராளியா நின்னது இன்னொர்த்தன் பண்ண 64 ஆய கலை மெசினாம். ஃபைட்டான ஃபைட்டாம். முடியவே இல்லையாம்! மெசினு இத்து போற வரை சண்டை போடுமே தவிர ரெண்டுக்கும் சமாதானம் பேசவே தெரியாதாம்! ஏன்னா சமாதானம்னா என்னான்னே ரெண்டுக்கும் புரியாதாம்! நம்ம மனுசப்பய எப்போ இன்னா செய்வான்னு அவனோட மானுஃபேக்சரருக்கே புரியாதாம். அவனோட வரலாறு பூகோளத்த எல்லாம் படச்ச கடவுளே வாயடைச்சி நிக்காராம்! இப்போ அவனே 'நாந்தான் கடவுள்'னு கெளம்பிருக்கானாம்! கடவுள்தான் 'டேட்டா'ன்னு வச்சிக்குவம். அவரு கோடானு கோடி அனுபவங்கள பொரட்டி பொரட்டி படிச்சி ஒவ்வொரு மனுசப்பயலயா உருவாக்கிக்கிட்டே இர்க்காராம். ஆனாலும் ஒர்த்தன் மாறி இன்னோர்த்தன் இல்லவே இல்லயாம். ...