ஒரு தனியார் வங்கி. இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்தானத்துக்கு போட்டி போடும் வங்கி. காசாளரிடம் ஒரு சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தேன். சலிப்புடன் விடை தந்துகொண்டே வேறு ஏதோ வேலையில் கவனமாயிருந்தார். திடீரென அவரது மேலாளர், வங்கிக்கிளையின் மேனேஜர், நேராக அவரது கேபினுக்கு வந்தார். வந்தவர், பள்ளிக்கூட குழந்தை ஒன்றிடம் பேசும் தோரணையில் குரலை உயர்த்தி, ஒற்றை ஆட்காட்டி விரலை நீட்டி, 'எத்தன முறை சொல்லிருக்கேன்? எல்லாத்தையும் செக் பண்ணதுக்கு அப்றமாதான் செக்குக்கு காசு தரணும்னு? இன்னொரு வாட்டி நடந்தா அப்றம் இமெயில் போட்றுவன், சரியா?' என சீறிவிட்டு, வாடிக்கையாளர்கள் எதிரே சக ஊழியரை அவமானப்படுத்தும் அவலம் பற்றிய துளி கவலையும் இல்லாமல் தனது கேபினுக்கு திரும்பினார். அந்த ஊழியருக்கு முப்பது வயது இருக்கலாம். வேதனையால் சினந்த முகத்தோடு மௌனமாக அமர்ந்திருந்தார். அவரது வீட்டில் கான்வென்ட் பள்ளியில் படிக்கும் குழந்தை இருக்கலாம். அன்று மாலை அவர் வீடு திரும்பியதும் அவரது குழந்தை, 'அப்பா, இன்னக்கி மிஸ் என்ன எல்லார் முன்னாடியும் திட்டிட்டாங்கப்பா' எனலாம், 'என்னையும்தான் என் மிஸ் இன்னக்கி அதே மாதிரி...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!