ரயில் வெடியும் பாம்பு மாத்திரையும்! ரயில் வெடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தீப்பெட்டியில் வெடி மருந்து திணித்து நுனியில் திரி சொருகப்பட்டிருக்கும். திரி இல்லாத மறுபக்கத்தில் குழல் போன்றதொரு அமைப்பு இருக்கும். அந்தக்குழலில் நூல் கோர்த்து இரு முனைகளையும் எதிலாவது கம்பத்திலோ ஜன்னல் கம்பியிலோ எதிரெதிராக இழுத்துக்கட்டி திரியில் பற்றவைத்தால் மருந்து தீரும் வரை நூல் கயிற்றில் புல்லட் ஒருபுறத்திலிருந்து ரயில் போல பறந்து மறுபுறம் போய் முட்டி திரும்பி என சாகசம் காட்டும்! அனுபவித்திருக்கிறீர்களா?! (இந்த ரயில் வெடி இப்போது எந்த வெடிக்கடைகளிலும் விற்கப்படுவதில்லை, தனி வீடுகளிலிருந்து பல்லடுக்கு குடியிருப்புகளுக்கு புலம் பெயர்ந்த நமக்கு அந்த நூல்கயிறைக்கட்டுவதற்கு இடமின்றிப்போனதால்...) கும்மோணத்தில் தீபாவளி வரப்போகிற பரவசத்தில் துணிக்கடையில் பெற்றோரின் விரல் பிடித்து வண்ணமும் வாசனையுமாய் விரியும் சட்டை டவுசர் துணிகளின் அழகில் சொக்கி எதையோ கை காட்ட அது வெட்டப்பட்டு வீடு வரும். தையல்காரர்களுக்கு மதிப்பிருந்த காலம் அது. அளவெடுக்கும்போதே புத்தாடை தரித்த கற்பனையில் ஒரு இஞ்ச் உயரம் கூடும். (ஒரே ஒரு ம...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!