(ராம்கியின் கதை தொடர்கிறது) மறு நாள் அதிகாலையில் மருத்துவமனையை அழைத்தோம். தூங்கிக்கொண்டிருக்கிறான், விரைவில் நலமடைவான் என அறிந்து கொண்டோம். அன்று முழுவதும் அவனது தூரத்து உறவுகளுடன் பேசியபோது மெல்ல மெல்ல காரணங்கள் புரியத்தொடங்கியது. கோவையின் மலைக்கிராம பள்ளி ஒன்றில் ராம்கி ஒன்பது-பத்து வகுப்புகள் படித்துக்கொண்டிருந்த காலம். அவனது வகுப்பு ஆசிரியை, பள்ளிக்கூட அலுவல்களுக்கு இடையில் ராம்கியை அவ்வப்போது கடைக்கு அனுப்பி (ஊர்க்கார பையன், இருவரது சொந்த ஊரும் ஒன்றே என்பதால்) மளிகைப்பொருட்கள், காய்கறிகள் என வாங்கச்சொல்லி, வாங்கியதை அவரது வீட்டில் சேர்க்கச்சொல்லி வேலை வாங்குவார். அவரது கணவரும் ஏதோ அலுவலகத்தில் வேலை. ராம்கி வயதை ஒத்த ஒரு மகள் அவருக்கு. பல நேரங்களில் ராம்கி அவரது வீட்டு கதவை தட்டும்போது அவள்தான் திறப்பாள். நட்பு மலர்ந்து, "அறியாத வயசு, புரியாத மனசு...ரெண்டும் சேர்ந்து காதல் செய்யுதே" என பழகத்தொடங்க, தாமதமாக தெரிந்துகொண்ட ஆசிரியை ராம்கியை கடுமையாக மிரட்டி பள்ளியிலிருந்து நீக்குகிறார். ஏனென்று கேட்க அப்பா என ஒருவரும் அவனது வீட்டில் இல்லை. ஆனாலும் சிறுசுகளின் தொடர்பு தொடர்...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!