இயந்திரப்புரட்சியும் தொலைந்துபோன எங்கள் வரலாறும்... நெடுந்தொடர் - முன்னுரை -----++++-------+++++-------++++- என் அம்மா ஒரு தேர்ந்த கதை சொல்லி, நல்ல நினைவாற்றலும் உண்டு, வயது எண்பதை நெருங்கினாலும். ஒரு பிற்பகல் வேளையில் உணவு முடித்து ஓய்வாய் உரையாடுகையில் தோண்டித்தோண்டி அவரது முன்னோரின் வரலாறை கேட்டுக்கொண்டிருந்தேன். பல முறை ஏற்கனவே கேட்டிருந்தாலும் ஒவ்வொரு முறையும் முன்னைவிட அகலமாய் கதைகள் விரியும் (அவரும் அவரது பல கதை சொல்லி சகோதரிகளுடன் தொடர்ந்து உரையாடி நினைவுகளை விரிவுபடுத்திக்கொண்டிருப்பார்கள்).. அது ஒரு நூற்றாண்டுக்கதை. நம் மண்ணின் கதை, மரபின் கதை, தோற்றவர்களின் கதை, தோல்வியை வெற்றியாக மாற்றியவர்களின் கதை, நம் நாட்டின் கதை. வரலாற்றில் எழுதப்படாத நம் நாட்டுக்கதை. சுமார் நூறு வருடங்கள் முன்பு... இந்தியாவின் தொன்கோடி தமிழ் நிலப்பரப்பின் தெற்கே இருந்த திருமறைக்காடு என்கிற வேத-ஆரண்யத்தில் ஒரு வேளாண் குடும்பம். வருடம் 1920. சகோதரர்கள் நான்கு பேர். இவர்களது முன்னோர் உழைத்து சேர்த்து இவர்களிடம் தந்து சென்ற நன்செய் நிலம் அறுபது வேலி (420 ஏக்கர்), நூற்றுக்கணக்கான நாட்டு மாடுகள் + ஏராள...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!