முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எப்படி இருந்ந நாம், ஏன் இப்படி?



பாஸ்கர் சாவே எனும் பழுத்த இயற்கை விவசாயி, இந்திய பசுமைப்புரட்சிக்கு காரணமான திரு. M. S. சாமிநாதனுக்கு இந்திய வேளாண் மரபின் மேன்மை பற்றி (கடிதம் வழியே) 'நடத்திய' பாடத்தின் தொடர் பகுதி இது.

(Actually part of an open letter Shri. Bhaskar Save wrote to M.S. Swaminathan).

மழை வருமா? நன்கு பெய்யுமா? நீர்நிலைகள் நிரம்புமா? என கவலையோடு வானத்தை நோக்கும் ஒவ்வொரு விவசாயியும் அவசியமாய் வாசித்து, சிந்தித்து உணர வேண்டிய பாடம் இது.


தமிழாக்கி பகிர்வதில் மகிழ்கிறேன்.

-----

உற்பத்தி, ஏழ்மை மற்றும் மக்கள் தொகை

இந்தியாவிலிருந்து வெள்ளையர்கள் வெளியேறிய பின் இந்திய விவசாயம் நிதானமாக தன் சுயத்தன்மைக்கு வந்து கொண்டு இருந்தது. 75 சதவிகித இந்தியர்கள் வாழ்ந்த கிராமப் புறங்களில் எந்த வித வளர்ச்சி ஊக்கிகளுக்கும் தட்டுப்பாடு இன்றி இருந்தது. பசுமை புரட்சியை இந்தியாவில் திணித்ததின் உண்மையான காரணம் நம் அரசால் முன்னுரிமை அளிக்கப் பட்ட நகர தொழில்துறை சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிற்பதற்காக, (கெட்டுப்போகும் தன்மை குறைவான) சில தானியங்களை மட்டும் அதிகமான அளவில்  விற்பனைச்சந்தைக்காக ற்பத்தி செய்யும் குறுகிய லட்சியமே ஆகும். 


உங்களால் ஆர்வமுடன் முன் மொழியப்பட்ட புதிய ஒட்டுண்ணித்தனமான வேளாண்மை, முதலாளிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும் அரசில் சக்தி வாய்ந்தவர்களுக்கும் மட்டுமே பயன்பட்டது. விவசாயிகளின் செலவு அதிகமானது, ஆனால் கிடைக்கும் நிகர லாபம் குறைய ஆரம்பித்தது. இதனுடன் சேர்ந்து மண்ணின் இயற்கை வளமும் குறைய ஆரம்பித்ததால் இந்த விவசாயிகள் கடனாளியாகவோ அல்லது உயிரற்ற மண்ணால் தங்கள் கைகளில் ஒன்றுமில்லாமல் ஏழைகளாகவோ நிற்கும் சூழல் உருவானது. 

நிறைய விவசாயிகள் வேளாண்மை செய்வதையே விட்டு விட்டனர். இன்னும் பலர், கூடிக்கொண்டே போகும் செலவினங்களால் வேளாண்மையை விட்டு விட முடிவு செய்துள்ளனர். சத்தான நஞ்சற்ற உணவினை உற்பத்தி செய்யக்கூடிய உயிர்ம வேளாண் மையை இயற்கை நமக்கு அளவில்லாமல் அள்ளித் தந்திருக்கும்போது நாம் இவ்வாறு செய்வது மிகவும் துயரமானது.


ஏழ்மை, வேலை வாய்ப்பின்மை மற்றும் மக்கள் தொகை பெருக்கம் என்னும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய தொல்லைகளுக்கு ‘இந்திய வேளாண்மையின் இயற்கையான ஆரோக்கியத்தை மீளுருவாக்குவது ஒன்றே’ சரியான வழியாகும். 

வேளாண்மைக்கு தேவையான இடுபொருட்கள் மிகக்குறைவாக இருந்தால் மட்டுமே மிக அதிகமான மக்கள் வேளாண்மையை தேர்ந்தெடுத்து தன்னிறைவு அடைய முடியும். எனவே வேளாண்மை என்பது மிக குறைவான நிதி, மிகக் குறைவான இடுபொருட்கள், மிக குறைவான ஆயுதங்கள் (ஏர், மற்ற ஆயுதங்கள்), மிகக் குறைவான வேலை ஆட்கள் மற்றும் மிகக் குறைவான வெளித்தொழில் நுட்பங்கள் கொண்ட ஒன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதிக செலவின்றி விளைச்சல் அதிகரிக்கும், வறுமை குறையும் மற்றும் மக்கள் தொகை வளர்ச்சி தானாகவே மட்டுப்படும். 


முற்காலத்தில் நாம் சுய சார்புடைய, வெளி இடுபொருட்கள் தேவையில்லாத அல்லது குறைந்த அளவிலேயே தேவையான விவசாயம்தான் செய்து வந்தோம். 

யுத்தம் மற்றும் அந்நிய அடக்குமுறைக் காலங்களை தவிர நம் விவசாயிகள், உற்பத்தி பரப்பு குறைவானதாக இருந் தாலும் தேவைக்கதிகமான பல்பயிர்களை தற்சார்புடன் விளைவித்து வந்தனர். 

இவற்றில் குறிப்பாக குறுகிய கால ஆயுள் கொண்ட பயிர்கள், நகரத்திலுள்ள நுகர்வோர்களுக்கு தர முடியாதவை. 

அதனால் நம் நாட்டின் விவசாயிகள், பாரம்பரிய முறையில் விளைவித்து வந்த பல்பயிர்களுக்கு (விலை கொடுத்து இடுபொருட்கள் வாங்கத் தேவை இல்லாத பல்பயிர்களுக்கு) மாற்றாக நகர நுகர்வோர்களின் தேவைகளை நோக்கி ற்றைப் பயிர்களான கோதுமை, அரிசி, சர்க்கரை ஆகியவற்றை வேதியியல் முறையில் விளைவிக்க இட்டுச்செல்லப்பட்டனர்.

----

பாஸ்கர் சாவே ஐயா பரிந்துரைத்த தீர்வுகள் - தொடரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...