(Continuation of a part of an open letter Shri. Bhaskar Save wrote to M.S. Swaminathan).
மழை வருமா? நன்கு பெய்யுமா? நீர்நிலைகள் நிரம்புமா? என கவலையோடு வானத்தை நோக்கும் ஒவ்வொரு விவசாயியும் அவசியமாய் வாசித்து, சிந்தித்து உணர வேண்டிய பாடம் இது.
தமிழாக்கி பகிர்வதில் மகிழ்கிறேன்.
தற்சார்பின்மையின் மூல காரணம்
தற்சார்பு என்பது நீங்கள் பசுமை புரட்சியை பரப்பிக்கொண்டு இருக்கும்போது அதிகம் பேசப்படாத ஒரு புதிய கவலையாகவே இருந்தது. கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளில் குன்றிக்கொண்டே இருக்கும் மண் வளம் கிட்டத்தட்ட நாற்பது நூற்றாண்டுகளில் நம் முன்னோர்கள் செய்த இயற்கை வேளாண்மையினால் குன்றாமல் இருந்தது என்ற உண்மையை உங்களால் மறுக்க முடியுமா?
ஒரு தலைமுறைக்குள்ளாகவே வேதிப்பொருட்கள் அதிகம் கொண்ட உரங்கள் மற்றும் அதிக நீர் கொண்ட ஒற்றைப்பயிர் (பணப்பயிர்) விவசாயம்தான் நம் நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் பரவி வரும் உயிர்ச்சூழல் பேரழிவுக்கு முதல் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை அல்லவா!

பன்மயப் பயிர்களின் பன்மயத் தன்மையை திட்டமிட்டு குறைத்தல், அரிதான இயற்கை சத்துக்கள் மற்றும் மண்வளம் தரம் குறைத்தல்:
நமது நாடு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ளக்கூடிய ஏராளமான பன்மயப் பயிர்களை தன்னகத்தே கொண்டு பொலிவுடன் இருந்தது.
நமது நாடு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ளக்கூடிய ஏராளமான பன்மயப் பயிர்களை தன்னகத்தே கொண்டு பொலிவுடன் இருந்தது.
நம்முடைய ஏராளமான உயரமான உள்ளூர் வகை தானியங்கள் மண்ணுக்கு கரிம சத்துக்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல் நிலத்துக்கு நிழல் தந்தும் அதிகமான பருவ மழையினால் ஏற்படும் மண் அரிப்பையும் தடுக்க உதவின.
ஆனால் உற்பத்தியை பெருக்குவதாக கூறிக்கொண்டு அரிதான குள்ள இனங்கள் உங்கள் முயற்சியால் அறிமுகப்படுத்தப்பட்டு பரப்பவும் செய்யப்பட்டன. இதனால் களைகள்தான் மிக அதிகமாக வளர்ந்து இப்பொழுது சூரிய ஒளிக்காக, வளர்ச்சி பாதிக்கப்பட்ட பயிர்களுடன் வெற்றிகரமாக போராடுகின்றன. இதனால் களை நீக்கவும், களைக்கொல்லி அடிக்கவும் விவசாயி அதிகமாக செலவு செய்ய நேரிட்டிருக்கிறது.

குள்ள தானியங்களின் வைக்கோல் வளர்ச்சி கடுமையாக குறைந்து உள்ளூர் தானிய வகைகளின் வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே எட்டுகிறது. பஞ்சாப் மற்றும் அரியானாவில் இந்த வைக்கோல்கள் கூட கிருமிகளை தம்முள் அடக்கியுள்ளதாக கருதப்பட்டு முற்றிலுமாக எரிக்கப்படுகிறது (கால்நடைகள் உண்ணத்தகாத அளவுக்கு நஞ்சு உள்ளதால்; டிராக்டர் எந்திரங்கள் இப்போது கால்நடைகளுக்கு பதிலாக வேலை செய்கின்றன).
இதன் விளைவாக மண்ணை வளமாக்கும் இயற்கை இடுபொருட்கள் உள்ளூரில் கிடைக்கும் அளவு குறைந்து வெளியில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி இட வேண்டியிருக்கிறது. வேறு வழியின்றி விவசாயிகள் வேதி உப்புக்களை இட்டு மண் வளத்தன்மையை மேலும் குறைக்கின்றனர். இதனால் வளமான மண்ணும் அரிக்கப்படுகின்றது.

திட்டமிட்டு உருவாக்கிய கொள்ளை நோய்
வேதி உரங்கள் இட்டு வளர்க்கப்பட்ட இந்த அரிதான பயிர் வகைகள் பூச்சிகளுக்கும் நோய்களுக்கும் எளிதான இலக்காக மாறிப்போகின்றன. இந்த பாதிப்பை குறைக்க மேலும் கொடிய விஷங்களை (பூச்சிக்கொல்லிகள்) நிலத்தில் இட வைக்கின்றன.
ஆனால் இந்த பூச்சிக் கொல்லிகளால் தாக்கப்பட்ட பூச்சியினங்கள் தம் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக்கொண்டு மிக அதிக அளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த பூச்சியினங்களை உண்டு வாழும் சிலந்திகள், தவளைகள் போன்றவை (ஒரு வகையில் இந்த பூச்சிகளின் பெருக்கத்தை இயற்கையாக கட்டுப்படுத்துபவை) உணவின்றி அழிந்து போகின்றன.

மண்ணுக்கு நன்மை செய்யும் பூச்சிகளான மண் புழுக்கள் மற்றும் தேனீக்களும் அழிந்து போகின்றன. இத்தகைய பூச்சிகளை கொல்ல வணிக விவசாயம் மற்றும் தொழில் முனைவோர்கள் மேலும் மேலும் சக்தி வாய்ந்த புதிய, கொடிய, அதிக விலை மிக்க வேதி உரங்களை பரிந்துரை செய்தனர். ஆனாலும் பூச்சிகள் மற்றும் நோய்களின் தொல்லைகள் முற்றிக்கொண்டே இருந்தன. இதனால் சுற்றுச்சூழல், நிதி மற்றும் மனிதச் செலவுகள், அதல பாதாளத்தை நோக்கிய ஒரு சுழலில் சிக்கிக்கொண்டன.
(மேலும் தொடரும்).
கருத்துகள்
கருத்துரையிடுக