பாஸ்கர் சாவே எனும் பழுத்த இயற்கை விவசாயி, இந்திய பசுமைப்புரட்சிக்கு காரணமான திரு. M. S. சாமிநாதனுக்கு இந்திய வேளாண் மரபின் மேன்மை பற்றி (கடிதம் வழியே) 'நடத்திய' பாடத்தின் தொடர் பகுதி இது. (Actually part of an open letter Shri. Bhaskar Save wrote to M.S. Swaminathan). மழை வருமா? நன்கு பெய்யுமா? நீர்நிலைகள் நிரம்புமா? என கவலையோடு வானத்தை நோக்கும் ஒவ்வொரு விவசாயியும் அவசியமாய் வாசித்து, சிந்தித்து உணர வேண்டிய பாடம் இது. தமிழாக்கி பகிர்வதில் மகிழ்கிறேன். ----- உற்பத்தி, ஏழ்மை மற்றும் மக்கள் தொகை இந்தியாவிலிருந்து வெள்ளையர்கள் வெளியேறிய பின் இந்திய விவசாயம் நிதானமாக தன் சுயத்தன்மைக்கு வந்து கொண்டு இருந்தது. 75 சதவிகித இந்தியர்கள் வாழ்ந்த கிராமப் புறங்களில் எந்த வித வளர்ச்சி ஊக்கிகளுக்கும் தட்டுப்பாடு இன்றி இருந்தது. பசுமை புரட்சியை இந்தியாவில் திணித்ததின் உண்மையான காரணம் நம் அரசால் முன்னுரிமை அளிக்கப் பட்ட நகர தொழில்துறை சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிற்பதற்காக, (கெட்டுப்போகும் தன்மை குறைவான) சில தானியங்களை மட்டும் அதிகமான அளவில் விற்பனைச்சந்தைக்காக உ ற்பத்தி செய்யும் குறுகிய லட்சியமே...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!