பாஸ்கர் சாவே எனும் பழுத்த இயற்கை விவசாயி, இந்திய பசுமைப்புரட்சிக்கு காரணமான திரு. M. S. சாமிநாதனுக்கு இந்திய வேளாண் மரபின் மேன்மை பற்றி (கடிதம் வழியே) 'நடத்திய' பாடம் இது.
(Actually part of an open letter Shri. Bhaskar Save wrote to M.S. Swaminathan).
மழை வருமா? நன்கு பெய்யுமா? நீர்நிலைகள் நிரம்புமா? என கவலையோடு வானத்தை நோக்கும் ஒவ்வொரு விவசாயியும் அவசியமாய் வாசித்து, சிந்தித்து உணர வேண்டிய பாடம் இது.
தமிழாக்கி பகிர்வதில் மகிழ்கிறேன்.
-----
நம் நாடு அற்புதமான கரிம வளம், செல்வச் செழிப்பு, பொன்னான மண், ஏராளமான நீர்வளம், ஏராளமான சூரிய வெளிச்சம், அடர் காடுகள், ஏராளமான பலவகையான உயிரினங்கள் இவைகள் கொண்ட, நல்ல நெறிகளுடன் மக்கள் வாழும் நாடு, அமைதி விரும்பும் விவசாய விற்பன்னர்கள் வாழ்ந்த நாடு.
விவசாயம் நம் ரத்தத்தில் ஊறியது. அனால் இந்த தலைமுறை (தலை நரைத்த) இந்திய விவசாயிகள்
உங்களைப்போன்ற விவசாய அனுபவமே சுத்தமாக இல்லாதவர்களின் அறிவுரையினால் தம்மை தாமே ஏமாற்றிக்கொண்டு, இறக்குமதி செய்யப்பட்ட, தொலை நோக்கு இல்லாத, மண்ணை மிக மோசமாக வீணடிக்க கூடிய விவசாய முறையை கடைபிடிப்பது எனக்கு வேதனை அளிக்கிறது,
இந்த மண், வேதியல் உரங்கள், பூச்சிகொல்லிகள், தனித்துவமான குள்ள பயிர் வகைகள், நீங்கள் இப்பொழுது ஊக்கப்படுத்தி வரும் செயற்கை தொழில் நுட்ப உரங்கள், இவை எதுவுமே இல்லாத காலங்களிலும் உலகத்திலேயே அதிகமான மக்கள் தொகையை தற்சார்போடு கணக்கற்ற தலைமுறைகளாக தாங்கியுள்ளது. நூற்றுகணக்கான ஆண்டுகளாக, நம் நாட்டின் மீது பலர் படை எடுத்து நம் வளங்களை சுரண்டிசென்ற பின்னரும் நம் மண்ணின் வளம் பாதிப்பின்றி இருக்கிறது.
உபநிஷத் ஒன்றை இங்கே குறிப்பிடுகிறேன் :
ஓம் பூர்ணமுதஹ
பூர்ணமிதம் பூர்ணாம் பூர்ணம் உதஸ்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய
பூர்ணமேவாவசிஸ்யதே
பொருள்:
இந்த படைப்பு முழுமையானது, முற்றானது.
இந்த முழுமையிலிருந்து படைப்புகள் உண்டாகின்றன, ஒவ்வொன்றும் முழுமையாக, முற்றாக.
முழுமையிலிருந்து முழுமையை எடுத்தாலும் முழுமை எஞ்சி நிற்கிறது,
சற்றும் குறையாமல், முழுமையாக!.
நம் காடுகளில் நாவல், மா, காட்டு அத்தி மற்றும் புளி போன்ற மரங்கள் தகுந்த பருவ நிலையின்போது கிளைகள் வளைந்து தொங்கும் அளவுக்கு விளைந்து நிற்கின்றன. ஒரு வருடத்து விளைச்சல் 1000 கிலோவுக்கு குறையாமல் இருக்கும் ஒவ்வொரு மரத்திலும். ஆனால் அம்மரங்களை சூழ்ந்து உள்ள பூமி, தரையில் எந்த பெரிய ஓட்டைகளும் இன்றி முழுமையாக எந்தக் குறைபாடும் இல்லாமல் இருக்கிறது. இந்த மரங்களுக்கு (கடும் பாறை கொண்ட மலைகளில் உள்ள மரங்களும்தான்) எங்கிருந்து தண்ணீர் மற்றும் சத்துக்கள் (NPK) கிடைக்கின்றன?
இயற்கை தன்னிலையில் இருந்து நகராமலே இந்த மரங்களுக்கு தேவையானதை தேவையான இடத்திலேயே கொடுக்கிறது. ஆனால் உங்களைப்போன்ற குறுகிய பார்வை கொண்ட குழப்பம் செய்யும் அரிப்பு உள்ள அறிவியலாளர்களும், பொறியியலாளர்களும் இந்த உண்மையை காண இயலாத பார்வையற்றவர்களாக இருக்கிறீர்கள். எந்த அடிப்படையில் நீங்கள் ஒரு மரத்துக்கு / செடிக்கு எது வேண்டும், எப்போது வேண்டும், எங்கு வேண்டும் என்று அறிவுறுத்துகிறீர்கள்?
அறிவு இல்லாத இடத்தில், அறியாமையானது அறிவியல் என்ற போர்வையில் உலா வரும் என்று சொல்வார்கள். இப்படியான அறிவியலைத்தான் நீங்கள் வளர்த்து நம் விவசாயிகளை அழிவின் பாதையில் இட்டுச் செல்கிறீர்கள். அறியாமை என்பது வெட்கப்படக் கூடிய ஒன்று அல்ல. அது அறிவை அடைய தேவையான முதல் படி. ஆனால் அறியாமையை கண் கொண்டு பார்க்க மறுப்பது தன்னை தானே ஏமாற்றிக்கொள்ளும் இறுமாப்பு.

வேளாண்மைக்கான தவறான கல்வி
நம் நாட்டில் 150 வேளாண் பல்கலைக் கழகங்கள் உள்ளன. பெரும்பான்மையானவை ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கொண்டவை. அவைகளுக்கு கட்டமைப்பு, சாதனங்கள், வேலை ஆட்கள், பணம் என்று எதுவுமே தட்டுப்பாடின்றி உள்ளன. ஆனாலும் இவற்றில் ஒன்று கூட, அரசிடம் இருந்து ஏராளமான மானியங்கள் கிடைத்தும் கூட, லாபம் ஈட்டக்கூடிய அளவிலோ அல்லது தன் மாணவர்களின் உணவுத் தேவையை கூட பூர்த்தி செய்யும் நிலையில் இல்லை. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒவ்வொரு கல்வி கூடமும் நூற்றுக்கணக்கான 'கல்வி கற்ற' ஆனால் வேலை செய்ய இயலாதவர்களை விவசாயிகளுக்கு இயற்கையைச் சீர்குலைக்கும் தவறான தவகல்கள் தருவதற்கு அனுப்பி வைக்கின்றது.
ஒரு மாணவன் முதுகலை வேளாண்மை படிப்பில் செலவிடும் ஆறு முழு வருடங்களும் 'உற்பத்தி பெருக்கம்' என்ற ஒரே குறுகிய தொலை நோக்கற்ற இலக்கை நோக்கியே உள்ளது. இதற்காக விவசாயி நூறு அலுவல்களை/பொருட்களை செய்யவும் வாங்கவும் அவசரப்படுத்தப்படுகின்றான். ஆனால் அவன் தன் நிலத்தை எதிர்கால சந்ததியினர் மற்றும் பல்லுயிர்கள் நலம் கருதி 'என்னென்ன செய்யக்கூடாது' என்பது குறித்து யாரும் சிந்தனை செய்வதில்லை.

பகுதி 2 - வணிக வேளாண்மை vs இயற்கை வேளாண்மை - விரைவில்.
(படம்: இந்திய கானக வளம்!)
கருத்துகள்
கருத்துரையிடுக