சார்லஸ் டார்வின் தந்த பரிணாமவியல் - Evolutionary Biology. இதன் தவறான சாரம் - Survival of the fittest. இந்த தவறான புரிதல்தான் தமிழிலும் 'வலியவன் வாழ்வான் / வலிமையான உயிர்கள் வாழும்' என வலம் வருகிறது.
வலிமை என்பதற்கு மனிதர்களது புரிதலில் "பேராற்றல்" - Might. உதாரணத்துக்கு இன்றைய அமெரிக்கா.
டார்வின் சொன்னது, Survival of the most adaptable.
அமெரிக்கா வலிமையான நாடு. ஆனால் டார்வினின் பரிணாம கோட்பாட்டில் அது fittest Nation அல்ல.
வலிமைக்கும் most adaptable க்கும் என்ன வேறுபாடு?
Most Adaptable - உதாரணம்: ஓணான் / உடக்கான்!
தான் இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொள்ளுதல் / மாற்றிக்கொள்ளுதல். 200 மில்லியன் ஆண்டுகளாக adapt ஆகி ஆகி தன் இனத்தை நீட்டித்துக்கொண்டிருக்கும் இந்த உயிர் ஒரு சில 'வெகு வேகமாக சூழல் மாறிப்போன நிலங்களில் பதுனைந்தாண்டுகளிலேயே தன் மரபணுவை (DNA) மேம்படுத்தி பிழைத்திருக்கிறதாம்!
நம் கண்ணதாசன் இதையே எளிமையாக
'ஆற்றங்கரை மேட்டினிலே
ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை'
என எழுதியிருக்கிறார்.
அறிவியலின் பார்வையில் ஓணானும் நாணலும் இணையும் இந்த
புள்ளியில்தான் இப்போது ஒதியனும் இணையத்தொடங்கியிருக்கிறது.
Ash Tree என மேலை நாட்டினர் இந்த மரத்தை இன்றைய அறிவியல் மகிழ்வோடும் முணைப்போடும் நுண்ணோக்கி வழியே கண்காணித்துக்கொண்டிருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் கூட்டம் கூட்டமாய் வாழும் இந்த மரங்கள் கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு பூஞ்சாண நோய் (fungus) தாக்குதலால் திடீரென கொத்து கொத்தாய் அழிந்துகொண்டிருக்கின்றன. இந்த நோய்க்கு அவர்கள் இன்னும் தீர்வு காண இயலாத நிலையில், 'உங்களை நம்பி பலனில்லைப்பா, நாங்களே பாத்துக்கிறோம்' என இந்த ஒதிய மரங்களே தம் மரபணுவை மெல்ல மெல்ல கடந்த பதினைந்தாண்டுகளில் மாற்றிக்கொண்டே இருக்கின்றன!
எப்படி?
வழக்கத்திற்கு மிக அதிகமான அளவில் காய்களை உருவாக்கி, பூஞ்சாண தாக்குதலின் வேகத்தை விட வேகமாக வளரக்கூடிய விதைகளை ஒதிய மரம் இளம் பருவத்திலேய உற்பத்தி செய்து (காய்கள் வழியே) தாக்குதலில் இருந்து தன் இனம் தப்பி பிழைக்கும் வகையில் தன் மரபணுவை தான் இருக்கும் இடத்திலிருந்தபடியே கடந்த இருபதாண்டுகளில் மெல்ல மாற்றிக்கொண்டிருக்கிறதாம்!
நூற்றாண்டுகள் வாழும் மரத்தைக்கூட தன் மரபணுவை சடுதியில் மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியத்தை இன்றைய உலகம் இருவாக்கி இருப்பதை அறிவியல் அவஸ்தையுடன் ஆய்வு செய்துகொண்டிருக்கிறது.
Just imagine, மனிதர்களும் இயற்கையின் படைப்புதானே. நாளையே நம் தலையில் ஏலியன் போல ஆன்டனாக்கள் முளைக்கத்தொடங்கலாம். அவ்வாறு நிகழ்ந்தால் உலகமே மகிழ்ந்து கொண்டாடி அந்த ஆன்டனாக்கள் வழியே தகவல் பரிமாற்றம் செய்து இன்னும் வெகுவேகமாக பணம் செய்யலாம்!
பேரன்புடன்,
பாபுஜி
கருத்துகள்
கருத்துரையிடுக