முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Thug Life!

  The case for the missing Thug. தக் லைஃப் படம் பார்த்தேன்.  மிக உயர்ந்த கலைஞர்கள் தங்களது உழைப்பையும் நம்பிக்கையையும் கொண்டு ரசித்து செதுக்கியிருக்கிறார்கள். ஆனால் என்னால் உணர்வுபூர்வமாக ரசிக்க முடியவில்லை. ரவுடிகளின் குழுக்கள், அவர்களது வன்முறை வாழ்வு, உயிருக்கு உத்தலவாதமில்லாத அன்றாட வாழ்வு என எல்லாமே பல முறை பார்த்திருந்தாலும் அலுப்பு தட்டாமல் முழுப்படமும் பார்க்கமுடிந்தது. ஆனாலும் 'ஏதோ ஒன்று குறைகிறதே...' என நினைப்பு மட்டும் தொடர்ந்தது.  இரு நாட்கள் கழித்து இன்று விடை கண்டேன், இல்லை இல்லை, கேட்டேன்! நாயகன் படத்தில் விலைமாது நாடிப்போகும் நாயகனின் காட்சிக்கோவையை இசையின்றி பார்த்தேன். பின்னர் இசையை ஒலிக்கவிட்டு மறுமுறை பார்த்தேன். அதுதான், அதுதான் missing! The Soul Connect. The kind of emotional hooks Raja's music got me into that film, is sorely missing here. ARR அற்புதமாக இசை அமைத்திருக்கிறார். அவை என்னை தாளமிடவும் தலையாட்டவும் வைத்தாலும் ஏனோ காட்சிகளுடன் பிணைக்கவில்லை. இப்படத்தின் மிகச்சிறந்த இரு பாடல்கள் - ஒன்று படத்திலேயே இல்லை, இன்னொன்று, காட்சிகளற்ற title card po...

கதவுகள், எல்லைகள்...

  கதவுகள் இல்லாத உலகம், எல்லைகள் இல்லாத மனிதம்... எனது நண்பர்,  ஐரோப்பாவில் வாழ்ந்த பத்தாண்டுகளில் வெளியில் செல்லும்பொழுதெல்லாம் அவரது வீட்டு கதவை பூட்டியதே இல்லை. 'என்ன இருக்கு பாபுஜி, எடுத்துட்டுப்போறதுக்கு?' என்பார். அவரது தேவைகள் குறைவு. வீட்டிலுள்ள பொருட்களும் அவ்விதமே. ஆனால் இந்தியாவிலிருந்து அவர்களது உறவினர்கள் அனைவரையும் ஐரோப்பிய சுற்றுப்பயணம் அழைத்துச்சென்று (அவர்களுக்கு தமிழ் உணவு சமைக்க ஒரு சமையற்காரரையும் சேர்த்துதான்!) மகிழ்ந்தார்.  சனி சீக்னாப்பூர் என்கிற இந்திய சிற்றூரில் யாரும் அவர்களது வீடுகளை பூட்டுவதில்லை. சனி பகவானின் பூமி என்கிற பய பக்தியினால் திருட்டுகளும் இல்லை. அன்புக்கும் பக்திக்கும் பூட்டிய கதவுகளை திறக்கும் ஆற்றலும் உண்டு, கதவுகளை திறந்து வைத்தே வாழும் ஆற்றலும் உண்டு. ஆனாலும் யதார்த்த வாழ்வில் 'பொருள் இருப்பவர்க்கும் இல்லாதவர்க்கும் உள்ள பொருளாதார இடைவெளியினால் (the chasm between Haves and Have nots):நம் கதவுகளை பூட்டி பாதுகாக்கும் அவசியத்தில் வாழ்கிறோம். வீடுகளுக்கு கதவு, பூட்டு...சரிதான். ஆனால. நம் மனித மனங்களுக்கு? நம்மில் எத்தனை பேரின் மனது ...

பாரதியோடு போனது நமது ஜெகம் அழிக்கும் கோபம்

நண்பகல் கோடை வெயிலில் சாலையை கடக்கும்போது அவர்களை பார்த்தேன். ஒரு டாடா ஏஸ் வண்டி முழுக்க குப்பைகள். கணவன், மனைவி + ஒரு சின்னஞ்சிறுமி. சாலையோர மர நிழலில் வண்டியை நிறுத்திவிட்டு தரையில் அமர்ந்து அவர் எதையோ உடைத்து சேகரிக்க, அந்த சிறுமியும் குப்பைகளை கிளறிக்கொண்டிருந்தாள்; மூன்று வயது கூட ஆகியிருக்காது... அவளது அம்மா சாலையோரம் இருந்த குப்பையை கிளறிக்கொண்டிருந்தார். யு டர்ன் செய்து திரும்ப வந்து அவர்கள் அருகில் நிறுத்தி உரையாடினேன்... 'ஏங்க இப்படி சின்ன குழந்தையும் குப்பையில...பள்ளிக்கூடம் போகலையா?' என்றேன். திருப்பூரில் இருந்து தினமும் கோவைக்கு வந்து குப்பைகள் பொறுக்கி அவற்றில் விலை பெறக்கூடிய பொருட்களை பிரித்தெடுத்து விற்று பிழைப்பு நடத்துகிறார்கள். தமிழ் முகங்களாக தோன்றவில்லை ஆனாலும் தமிழ் தடங்கலின்றி பேசுகிறார்கள். வீட்டில் அவரது அம்மா அப்பா இருந்தாலும் அவர்களும் தினக்கூலிகளாக வெளியே செல்வதால் குழந்தையை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள யாருமின்றி அவர்களுடனே அழைத்துச்செல்வார்களாம். பள்ளி செல்லும் வயது வந்தவுடன் பள்ளிக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறார்களாம். கண்ணியமான குரலில் பேசியவரை ப...

யாதும் ஊரே, கேளிர் எங்கே?

என் அம்மா சிறு வயதில் பள்ளி செல்லும் வழி எங்கும் சொந்தங்களால் நிறைந்திருந்தன அவரது மண்சாலைகள். பெரிய மட்டை, மொட்டை பாட்டி, சின்னு சின்னம்மா, தொப்புள் தாத்தா, குளத்தங்கரை பாட்டி, கதைப்பாட்டி, சமையல் சித்தப்பா, இன்னும் பலவிதமான கலவையான பெயர்கள் சொல்லி அவர் அவர்களை நினைவு கூர்வதே அவ்வளவு அழகு. சொந்தத்துக்குள் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்து என நெருக்கித்தொடுத்த மல்லிகைச்சரம் போல ஊரே மணத்துக்கிடந்தது சொந்தங்களால். உறவு சலசலப்புகள் இருந்தாலும் சரம் தன் இயல்பை இழக்காத சரமாகவே இருந்தது. மல்லிகை அல்லாத வேறு மலர்கள் இந்த சரத்தில் சேர முடியாது என இயல்பாகவே / வேறு வழியின்றி அதனதன் சரம் தேடி மணம் முடிக்க, இப்படி பல மலர்ச்சரங்கள் நிறைந்திருந்தின அவரது நினைவில் நிற்கும் சிற்றூர்களில். ஒரு ஐம்பது வருட இடைவெளியில் எவ்வளவு சிற்றூர்களும் மலர்ச்சரங்களும் காணாமலே போய்விட்டன என நினைத்தாலே மலைப்பாய் இருக்கிறது. முதலில் அறுபட்டது அவர்களது  நிலத்துடனான தொப்புள் கொடி உறவு.  அவர்களை தொடுத்திருந்த வாழ்வியல் நார் நைந்துபோனது அதன் பின். இன்று அநேக அடுத்த தலைமுறை மலர்களுக்கு அவர்கள் இருக்கும் ஊரெங்கும் சொந்...

மௌனத்தின் குரல்

அந்த பதின்ம வயது சிறுமியின் பெற்றோர்,  சகோதரன் என அனைவருமே கேள்திறன் +  பேச்சு திறன் இழந்தவர்கள். சிறுமி பேசத்தொடங்கிய நாள் முதலே அவள்தான் உலகின் குரல்களை அவர்களுக்கு ஒலி பெயர்த்து சைகை மொழி வழியே உணர்த்துபவள். மீனவ குடும்பம். சொந்த படகில் குடும்பமே அதிகாலையில் கடலில் இறங்கி மீன் பிடித்து காலைப்பொழுதில் விற்று என வாழ்வு நகர்கிறது. நேரத்திற்கு பள்ளி செல்லவும் படிக்கவுமே போராடுகிறாள் இந்தச்சிறுமி. பதின் வயதில் எல்லோருக்கும் தோன்றும் முதல் காதல், தான் யார் என அடையாளம் தேடும் தன்மை, தனக்கு என்ன தேவை என்கிற தேடுதல் அவளுக்கும் உண்டு. ஆனால் அவளது குடும்பம் வெளியுலகத்தொடர்புக்காக அவளை முற்றிலும் சார்ந்திருப்பதால் அவளுக்கு எதற்குமே நேரமில்லை. அதனால் அவளுள் நிகழும் ஏக்கங்கள், கோப தாபங்கள் எல்லாவற்றையுமே அவள் அவர்களுடன் சைகை மொழியில் மட்டுமே பகிர முடிகிறது. பாடல்கள் பாடுவதை அவள் நேசிக்கிறாள். அவளுக்கான சுதந்திர உலகம் அதுவே என உறுதியாக நம்புகிறாள். கல்லூரி படிப்பாக 'இசை'யை தேர்ந்தெடுத்து ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு அவளது பள்ளியின் இசை ஆசிரியர் வழியே கிடைக்க, கனவை நனவாக்க...

ஏய்!

உலகம் ஃபுல்லா ரௌடிங்க தொல்லை தாங்கலபா! எவன பார்த்தாலும் "ஏய்!" "ஏய்!" னு சவுண்டு கிளப்பிகிட்டு திரியிராய்ங்க! ஒவ்வோரு "ஏய்" யும் பல ஆயிரங்கோடின்னு பெரும வேற... இன்னாதான் இர்க்குது இந்த "AI" ல பாத்தா காமெடியா கீதுபா! ஊர்ல ஒர்த்தன் ஓரு மெசினு பண்ணானாம். அது ஆய கலைங்க 64ஐயும்  அப்டியே செய்யுமாம். அந்த மெசினை சண்டைக்கு விட்டானாம். அதுக்கு எதிராளியா நின்னது இன்னொர்த்தன் பண்ண 64 ஆய கலை மெசினாம். ஃபைட்டான ஃபைட்டாம். முடியவே இல்லையாம்! மெசினு இத்து போற வரை சண்டை போடுமே தவிர ரெண்டுக்கும் சமாதானம் பேசவே தெரியாதாம்! ஏன்னா சமாதானம்னா என்னான்னே ரெண்டுக்கும்  புரியாதாம்! நம்ம மனுசப்பய எப்போ இன்னா செய்வான்னு அவனோட மானுஃபேக்சரருக்கே புரியாதாம். அவனோட வரலாறு பூகோளத்த எல்லாம் படச்ச கடவுளே வாயடைச்சி நிக்காராம்! இப்போ அவனே 'நாந்தான் கடவுள்'னு கெளம்பிருக்கானாம்! கடவுள்தான் 'டேட்டா'ன்னு வச்சிக்குவம். அவரு கோடானு கோடி அனுபவங்கள பொரட்டி பொரட்டி படிச்சி ஒவ்வொரு மனுசப்பயலயா உருவாக்கிக்கிட்டே இர்க்காராம். ஆனாலும் ஒர்த்தன் மாறி இன்னோர்த்தன் இல்லவே இல்லயாம். ...

அன்பாலே கூடு கட்டுவோம்

பறவைகள் எதுவும் தேவைக்கதிகமான அளவில் கூடு கட்டுவதில்லை. எத்தனை குஞ்சுகள் உருவாக்கலாம் என்கிற தெளிவான உள்ளுணர்வுடன், தன்னுழைப்பில் மட்டுமே அவை கூடுகளை உருவாக்குகின்றன. எதிர்காலத்திற்கென கூடுதல் அறைகள் அறவே கிடையாது. அந்த கூடென்பதும் வெறும் தாவரக்கழிவுகளால் மட்டுமே... அந்தக்கூட்டில் குஞ்சுகள் காலுதைத்து சிறகு விரித்து பறக்க வெளியேறும்வரை அவற்றை வளர்ப்பது தாய்ப்பறவையின் உடற்சூடு மட்டுமே, அது தரும் கதகதகப்பு மட்டுமே. காற்று மழை புயல் வெயில் கடுங்குளிர் இடி மின்னல் தாண்டியும் வாழும் இக்கூடுகள், மரம் சாய்ந்தாலோ கிளை முறிந்தாலோ மட்டுமே மண்ணில் வீழும்... சிறகு விரிந்த குழந்தைகள் எல்லாம் வாழ்வு பழக வெளியேறிய பின்பு தாய்ப்பறவையும் அதன் இணையும் அந்தக்கூடுகளில் தங்குவதும் இல்லை... பறவையைக்கண்டோம் விமானம் படைத்தோம் என மார்தட்டும் மனிதக்கூட்டம் மட்டுமே பறவைகளிடம் இருந்து வாழ்விடம் அமைப்பதைக்கூட இன்றுவரை கற்றுக்கொள்ளவில்லை. நினைத்த காலத்தில் நினைத்த இடத்தில் தன்னுழைப்பு மட்டுமே கொண்டு கட்டப்படும் அற்புதத்கூடுகள் எவற்றையும் மனிதர்கள் ஏனோ கொண்டாடுவதே இல்லை. வீடென்பது உடல் இளைப்பாறும் இடம் என மட்டுமே என...