கதவுகள் இல்லாத உலகம், எல்லைகள் இல்லாத மனிதம்...
எனது நண்பர், ஐரோப்பாவில் வாழ்ந்த பத்தாண்டுகளில் வெளியில் செல்லும்பொழுதெல்லாம் அவரது வீட்டு கதவை பூட்டியதே இல்லை. 'என்ன இருக்கு பாபுஜி, எடுத்துட்டுப்போறதுக்கு?' என்பார்.
அவரது தேவைகள் குறைவு. வீட்டிலுள்ள பொருட்களும் அவ்விதமே. ஆனால் இந்தியாவிலிருந்து அவர்களது உறவினர்கள் அனைவரையும் ஐரோப்பிய சுற்றுப்பயணம் அழைத்துச்சென்று (அவர்களுக்கு தமிழ் உணவு சமைக்க ஒரு சமையற்காரரையும் சேர்த்துதான்!) மகிழ்ந்தார்.
சனி சீக்னாப்பூர் என்கிற இந்திய சிற்றூரில் யாரும் அவர்களது வீடுகளை பூட்டுவதில்லை. சனி பகவானின் பூமி என்கிற பய பக்தியினால் திருட்டுகளும் இல்லை.
அன்புக்கும் பக்திக்கும் பூட்டிய கதவுகளை திறக்கும் ஆற்றலும் உண்டு, கதவுகளை திறந்து வைத்தே வாழும் ஆற்றலும் உண்டு.
ஆனாலும் யதார்த்த வாழ்வில் 'பொருள் இருப்பவர்க்கும் இல்லாதவர்க்கும் உள்ள பொருளாதார இடைவெளியினால் (the chasm between Haves and Have nots):நம் கதவுகளை பூட்டி பாதுகாக்கும் அவசியத்தில் வாழ்கிறோம்.
வீடுகளுக்கு கதவு, பூட்டு...சரிதான். ஆனால. நம் மனித மனங்களுக்கு?
நம்மில் எத்தனை பேரின் மனது எப்போதும் திறந்தே கிடக்கிறது?
எத்தனை பூட்டுக்கள் போட்டு பூட்டி பாதுகாத்தாலும் ஏன் பலருக்கு நிம்மதியான உறக்கமில்லை?
பூட்டிவிட்டு சாவியை எங்கு வைத்தோம் என தேடுபவர் எத்தனை பேர்?
எத்தனை பூட்டுக்கள் போட்டு பூட்டினாலும் அத்தனையையும் திறக்கும் சாவி ஒன்றும் நம்மிடமே உள்ளதை எத்தனை பேர் அறிவோம்?
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பது வெறும் பழமொழியா என்ன?
இல்லை என நிரூபித்திருக்கிறது இந்த மாதம் வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' தமிழ் திரைப்படம்.
வெகு சில திரைப்படங்களே நம் ஆன்மாவை தொடும். அதில் இப்படமும் ஒன்று.
என்னதான் இருக்கிறது நம்மிடம், எடுத்துச்செல்ல?
அன்பைக்கூட இங்கேயே தந்துவிட்டு செல்வோமே! என அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இளம் இயக்குநர் Abishan Jeevinth க்கு வாழ்த்துகள் பல. நலமுடன் வாழ்ந்து பல நல்ல படங்களை தர அன்பு உங்களை இட்டுச்செல்லட்டும்...
Hats off to the entire team for this wholesome heartwarmer!
பேரன்புடன்,
பாபுஜி
P.S.: ஒரு விதத்தில் நாம் அனைவருமே இவ்வுலகில் டூரிஸ்டுகள்தானே!
கருத்துகள்
கருத்துரையிடுக