முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தமிழ்நாடு - ஒரு புதிய அறிமுகம்!

 Tamil Nadu - A primer  இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு ஒன்று 1980களின் தமிழகத்திற்கு இருந்தது. இன்றும் அந்த தனிச்சிறப்பை தக்க வைக்க போராடத்துவங்கியுள்ளது! இந்தி எதிர்ப்பு போராட்ட சூடு தணிவதற்கு முன்னரே தஷிண பாரத் இந்தி பிரச்சார சபாக்கள் உற்சாகமாக இயங்கிக்கொண்டிருந்தன. கற்க வரும் மாணவர்களின் கூட்டம் இன்றுவரை பெருகிக்கொண்டே உள்ளது; அவர்கள் என் னதான் தேர்வுத்தாளை மட்டுமே மையமாக வைத்து கற்பிப்பதை தொடர்ந்தாலும் :-)  ஆத்தாடீ மாரியம்மாஆஆஆஆ எனத்தொடங்கி, முருகா நீயெல்லாம் தெய்வமில்லை! என தொடர்ந்து, கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன் என உருகி, திருச்செந்தூரின் கடரோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கத்தை நினைவு படுத்தி, புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களை எங்கள் புருஷோத்தமன் புகழ் பாட அழைத்து,   பாட்டும் நானே பாவமும் நானே என சிவனின் பரிமாணங்களை உணர்த்தி, உள்ளம் உருகுதையா என உருகி, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என பேட்டை துள்ளி, நல்ல மனதில் குடியிருக்கும் நாகூராண்டவா என நன்றி விளித்து, வானுக்குத்தந்தை எவனோ மண்ணுக்கும் தந்தை அவனே என விளக்கி, ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்

காதலை காதலிப்போம்!

அவள் பேரழகி.  வானெங்கும் தங்க விண்மீன்கள் கண்கள் மூடி கடல் குளிக்க சூரியன் கண்விழித்தெழும் நேரம்... நட்புகளுடன் கடற்கரையோர தங்கநிறப்பொழுதொன்றில் களிநடனமாடி, வீடு திரும்ப சாலையில் நான்கு சக்கர வாகனத்தை உச்சத்தில் முடுக்க... விபத்து நிகழ்கிறது. அழகிக்கு தலையில் அடி. நிகழ்கால நினைவுகள் மறந்துபோய் செயல் அளவில் சின்னஞ்சிறுமியின் மன முதிர்வோடு மட்டும் கண் விழிக்கிறாள். ஒரு நாள் கவனிப்பின்றி திறந்திருந்த மருத்துவமனை வாயில் வழி வெளியேறி பெருநகர சாலையில் கால் பதிக்க, நகரின் கோரக்கரமொன்று அவளை பாலியல் தொழில் நடக்கும் விடுதியொன்றில் விற்றுவிடுகிறது. அவன் பேரழகன்.  அனாதை. தி்ருமணம் ஆகாதவன், ஊட்டியில் ஒரு பள்ளியின் தலைமைப்பொறுப்பில். ஆனாலும் அவனது விருப்பு வெறுப்புகளை மென்மையாக மட்டுமே வெளிப்படுத்துபவன். ஒரு விடுமுறையில் அதே பெருநகரில் நண்பனை சந்தித்து... நண்பனின் தூண்டுதலால் மதுவருந்தி பின் நண்பனின் இழுப்பிற்கு தலையாட்டி அவனுடன் ஒரு பாலியல் விடுதிக்கு செல்கிறான். பேரழகி-பேரழகன் சந்திப்பு: பாலியல் விடுதியில் அந்த குமரி வடிவம்-குழந்தை உள்ளம் கொண்ட பேரழகியை சந்திக்கிறான். அந்த இரவு அவளுடன் தங்கி, அவள

கண்டா சுடச்சொல்லுங்க!

  டெட் பாடிய கையோட தூக்கி வாருங்க (காட்டு) பன்றிய கண்டா சுடச்சொல்லுங்க! காட்டுப்பன்றிகளை கண்டதும் சுட கேரள அரசு அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கை செய்தியாகி இருந்தது. 2022 இல் விவசாயிகள் 'முன் அனுமதி' பெற்றபின்பு சுடலாம் என அரசு வறையறுத்தது. ஆனால் இன்று வரை பன்றிகளின் சிக்கல் வளர்ந்து கொண்டே வருகின்றது. பன்றிகளுக்கு ஒற்றர்கள் யாரோ தகவல் சொல்லியிருப்பார்களோ என சந்தேகிக்கும் அளவுக்கு அவையும் இடம் பெயர்ந்து தமிழக கானக எல்லைப்பகுதிகளில் மெல்ல பெருகி வருவதாக சற்று முன் கிடைத்த தகவல்! இயற்கையில் காட்டுப்பன்றிகள், நரிகள் இருந்த வரை பெருகாமல் கட்டுக்குள் இருந்தன. நரிகளை பற்களுக்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் வேட்டையாடி அழித்தபின்பு காட்டுப்பன்றிகளோடு போராடுகிறோம், காடுகளை அழித்தபின் அங்கு காணாமல் போன தம் உணவை தேடி ஊருக்குள் வரும் யானைகளோடு போராடுவது போல. ஆஸ்திரேலியாவில் முயல் தொந்தரவை ஒழிக்க 'உயிருடனோ பிணமாகவோ பிடித்து  வந்தால் சன்மானம்' என்பது போன்ற பல முயற்சிகளை இருநூறு+ ஆண்டுகளாக முயற்சித்த பின்பும் முயல்கள் எண்ணிக்கையோ குறைவதாக இல்லை :-) நாட்டின் குறுக்கே கோழிவலை வேலி

தி ஜானகிராமனும் மாருதி ஜிப்சியும்!

பின் 1980களில் இதயத்தை திருடாதே படம் கேஜி தியேட்டரில் பார்த்துக்கொண்டிருக்கையில் எனக்குள் தோன்றிய சங்கல்பம், 'ஒரு நாள் மாருதி ஜிப்சி வண்டிய வாங்கறோம். லைஃப் பார்ட்னர பக்கத்தில உக்கார்த்தி வச்சி ஊட்டிய ரவுண்டு சுத்துறோம். இது சத்தியம்!' நாகார்ஜீனா, கிரிஜா, மாருதி ஜிப்சி + ஊட்டியின் குளிரில் நனைந்த வர்ணஜாலம் எல்லாம் சேர்ந்து இந்த சங்கல்பத்தை உரம் போட்டு வளர்த்தன. படிப்பு முடிந்ததும் அமெரிக்க மேற்படிப்பு கனவில் கேம்பஸ் இன்டர்வ்யூ எல்லாவற்றையும் அரைமனதோடு அட்டெண்ட் செய்து, "ஏண்டா இன்னொருத்தனோட வாய்ப்ப கெடுக்கிற? ஆர்வமில்லன்னா அட்டெண்ட் பண்ணாத" என தலைமை பேராசிரியர் அன்பாய் கடிந்த பின் அவற்றையும் புறக்கணித்து... அவரது அட்வைசின்படி அதே என் கல்லூரியிலேயே விரிவுரையாளராக சேர்ந்து, பாடமும் நடத்திக்கொண்டு அப்ளிகேஷன்களையும் நிரப்பி அனுப்பிக்கொண்டே இருந்தேன். பின் ஒரு நன்னாளில் அமெரிக்க கல்லூரி ஒன்றில் மேற்படிப்புக்கு சொற்ப ஸ்டைஃபெண்டுடன் அழைப்பு வர, இரு முறை அமெரிக்க எம்பசி வாசலில் கால் கடுக்க க்யூவில் நின்று உள்ளே சென்று...'உன்னால சொந்த செலவில படிக்க முடியாதுன்னு உங்கப்பாவோட

முதல் கோணல்...

கடன்பட்டார் நெஞ்சம் போல... என் பெற்றோரின் சிற்றூரில் வயல்வெளிகளிலும் தோப்புகளிலும்தான் காலைக்கடன், மதியக்கடன், மாலைக்கடன், இரவுக்கடன் எல்லாமே.  கடன் முடித்ததும் மண்ணைக்கொண்டு மூடிவிடுவது அனிச்சைச்செயல் போல அவர்கள் செய்யும் கடமை, ரத்தத்தில் ஊறிப்போனது. அப்படி செய்வதால் நாளடைவில் வாடையின்றி மட்கிப்போகி அங்கேயே உரமாகும் பின்னொரு நாளின் வெள்ளாமைக்கு. வரும் வழியில் நீர் நிலை ஒன்றில் சுத்தம் செய்து வீடு திரும்புவர். நான் பள்ளி கோடை விடுமுறையில் இது பழகியிருக்கிறேன். நான் பிறந்து வளர்ந்த பால்ய கால ஊரில் கழிவறை என் வீட்டுக்கு பின்புறம் சில நூறு அடிகள் தள்ளி இருந்தது. பாம்பே லெட்ரின் என அழைக்கப்படும் அந்த அறையில் ஒரு சிமென்ட் மேடை, அதன் நடுவில் அரை அடி அளவில் ஒரு துளை (என நினைவு). சிமென்ட் மேடையின் மேல்புறம் தடுப்பு சுவரும் உச்சியில் கூரையும் இருக்கும். ஆனால் மேடையின் கீழ் பின்புற சுவர் இல்லை. கழிவறையின் பின்னால் ஒரு வாய்க்கால், அதன் வழியே பன்றிகள் வந்து... உண்டு செல்லும். கழித்தபின் கொல்லைப்புறத்திலிருந்து வீட்டுக்குள் வரும் பாதையில் ஒரு அடி பம்ப் இருக்கும். அதை வலு கூட்டி இயக்கி, தேவைக்கு நீர

கொடுக்காப்ளி ரயில்!

நேற்று தோட்டத்திலிருந்து கொடுக்காப்புளி பழங்கள் பறித்து வந்திருந்தேன். அப்பாவுக்கு எண்பது+  அம்மாவும் 80ஐ தொட்டுவிடும் தூரத்தில். பழங்களை பகிர்ந்து உண்டோம். அதன் பின், 'எப்படி இருந்தது சுவை?' என்றேன். அவர்களது விடை நான் சற்றும் எதிர்பாரதது... 'பள்ளிக்கூடம் போம்போது மத்யான சாப்பாடு டப்பாவ காலி பண்ணிட்டு மதிய உணவு இடைவேளயில வேட்டைக்கு போவோம்.  அப்பல்லாம் பையில அரையணா இருந்தாலே பெரிசு... கொடுக்காப்புளி, நெல்லிக்கா, மாங்கா, பாலாப்பழம், வெள்ளரிப்பத்தை, எலந்தை, எலந்த வடை எல்லாம் பள்ளிக்கூட வாசல்லயே கிடைக்கும். பெரும்பாலும் வயசான பெண்கள்தான் கூறு கட்டி வச்சிட்டு உக்காந்திருப்பாங்க. வாங்கி தின்னுட்டு வாய்க்கா பக்கம் போனா அங்கே ஈச்சம்பழம் காச்சிரிக்கும். இப்ப கிடைக்கிற பேரிச்சை இல்ல அது. குத்துச்செடி மாதிரி இருக்கும். அதில் ஆரஞ்சு இல்லன்னா சிவப்பு வண்ணத்தில ஈச்சம்பழம் இருக்கும். பேரிச்சைல பாதிக்கும் பாதிதான் அதோட அளவு. அப்புறம் பாலாப்பழம் விப்பாங்க. சின்னதா வெள்ளை நிறத்தில சதையும் வெள்ளையாவே இருக்கும். அத சாப்பிடுவோம். ஒவ்வொரு சீசனுக்கு வகை வகையா பழங்க. வேப்பம்பழம் கூட தின்னுருக்கோம

Quit India? தமிழ் பதிவு.

  Can it be more sacred than this?! Food . இந்தந்த பருவத்துக்கு இதை இதை விதைக்கணும் என்பது விவசாயியின் கைகளிலில்லை. இந்தந்த பருவத்துக்கு இதை இதை சாப்பிடணும் என்பது நுகர்வோர் சிந்தனையிலும் இல்லை. இவர்களிருவருக்கும் எதை எப்போது எங்கு எப்படி செய்யவேண்டுமென மூளைச்சலவை செய்தது பெருவணிகம். அது போடும் லாபக்கணக்கில் சிக்கித்தள்ளாடுது நம் அனைவரின் வாழ்வும் நலமும். காந்தி கனவு கண்ட சுதந்திர (கி)ராம ராஜ்யம் பற்றி அறிந்திருப்பபோம்... 'என்று நள்ளிரவில் நிறைய நகைகள் அணிந்த இளம்பெண் பயமின்றி நம் சாலைகளில் துணையின்றி நடமாட முடிகிறதோ அன்றே நாம் சுதந்திரம் பெறுவோம்' என்றார். இன்று அவர் இருந்திருந்தால் அவரது கனவு வேறு மாதிரி இருந்திருக்கும்... 'என்று நம் விவசாயிகள் தங்களது உணவுத்தேவைகளை தம் நிலங்களில் தாங்களே விளைவித்துக்கொண்டு, தமக்கு எஞ்சியதை என்ன விலைக்கு (அருகில் உள்ள) மற்றவர்க்கு விதைகளாகவோ விளைபொருட்களாகவோ கொடுக்கலாம் என முடிவெடுக்கும் உரிமையுடன் வாழ்கிறார்களோ அன்றே நம் நாடு தன்னிறைவான நாடாக மாறும்.' அப்போ சுதந்திரம்?  விளையாடாதீங்க பாஸ். அதுக்கெல்லாம் இன்று போராட காந்திக்குக்கூட நே