முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஓயாத தேடல்...

நுங்கம்பாக்கம் ராஜ் பவனாவில் அதிகாலை அடுப்பில் பொங்கல் வெந்து இறங்கியவுடன் வடையுடன் முதல் ப்ளேட் எனக்குதான்.  கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தினமும் காலையில் ஆறு மணிக்கு என்னை பார்த்ததும் ரெகுலர் சர்வர் ஒரு புன்சிரிப்பு ப்ளஸ் தலையசைப்புடன் உள்ளே சென்று ஆவி பறக்க கொண்டு வருவார். முடித்தபின் காபி.  அடையாறில் ஐந்தரைக்கு ஆட்டோ பிடித்து இங்கு வந்து சிரம பரிகாரம் ஆன பின் மாக்ஸ் முல்லர் பவனம். ஜெர்மன் மொழி கற்கும் ஆவலில் ஆஃபீசுக்கே தெரியாம சேர்ந்து, தினமும் காலையில் வேலைக்கு எப்படியும் அரைமணி தாமதமாய் வந்து, டிசிஎஸ் ஆஃபீசில் (185, டி.கே.சண்முகம் சாலை) நெருப்பு கக்கும் ப்ராஜக்ட் மேனேஜரின் கண்களில் ஒரு நாள் சிக்க, 'வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்? யு நோ த இம்ப்பார்ட்டன்ஸ் ஆஃப் அவர் ப்ராஜக்ட் டு திஸ் ஆர்கனைசேஷன்? அதுவும் இப்பதான் ப்ராஜக்ட்ல சேந்திருக்க!' என அடித்தொண்டையில் எனக்கு மட்டும் பீதியைக்கிளப்பும் குரலில் மெல்ல கேட்டார்.  நியாயமான கேள்விதான். 750 Man Years தேவைப்படும் Show Piece Global Software Project ஐ கச்சிதமாய் செதுக்கிக்கொண்டிருப்பவர், கேட்பார்தானே! 'சாரி சார். ஆக்சுவலி சார், அவர் க்

காதலர் தினமாமே!

February 14: Happy Lupercalia! வெகுகாலத்துக்கு முன்பு ரோமாபுரியில் பிப்ரவரி 7 என்பது வசந்த காலத்தின் தொடக்க தினம். மேற்கத்திக்காற்று மழைமேகங்களை ரோமாபுரியின் நிலங்கள் மீது திசை திருப்பும் நாளாக இது கணிக்கப்பட்டிருக்கிறது. நிலங்களை சீர்திருத்துதல், பயிர்களில் களையெடுத்தல், கவாத்து செய்தல், பழைய தாவரக்கழிவுகளை எரியூட்டுதல் (அதிலிருந்து கிடைக்கும் சாம்பல் மீண்டும் விளை நிலங்களுக்கு உரமாகும்) போன்ற வேலைகளை அன்றைய விவசாயிகள் தொடங்கி, அந்த மாதம் 15 ஆம் நாள் ஒரு மிகப்பெரிய 'கிடா வெட்டு, சாமி கும்பிடு' விழா நடத்தி, வெட்டிய கிடாக்களின் தோலை உரித்து அந்த தோலினால் எதிர்வரும் பெண்களை வலிக்காது அடித்து (அப்படி அடி வாங்கியவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டுமாம், நிறைய குழந்தைகள் பிறக்குமாம். ஐதீகம்) ஆனந்தமாய் கழியும் அந்த நாள். ரோமப்பேரரசின் முதல் அரச சகோதரர்களை உயிர்காத்து வளர்த்த ஓநாய் ஒன்றை கடவுளாய் வழிபட்டு அதன் குகையில் தொடங்கும் இந்த விழா. கிரிஸ்தவ மதம் ரோமப்பேரரசுக்கு எதிராக மெல்ல மெல்ல காலூன்றி, உயிர்த்தியாகங்கள் செய்து பின்னர் ஒரு ரோமப்பேரரசனே கிறிஸ்தவ மதத்துக்கு மாறியபின் தழைத்தோங்கி..

சகியே!

 கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் இடையில் விழித்திருக்கும் நொடியிலெல்லாம் துரத்துது என்னை, என் பதின்பருவ கனவு ஒன்று. பாலகுமாரன் போதித்த காதல் வேதங்களும் தி.ஜா காண்பித்த உன்னத பெண்களும் என் மனதில் கட்டியெழுப்பிய என் தேவதைப்பெண்ணுக்கு மணியம் செல்வனின் ஓவியங்கள் உயிரூட்ட, தேடல் தேடல் சதா தேடல்...  கண்ணில் காண்கின்ற பெண்களெல்லாம் எங்கோ பொருந்தி எதிலோ பொருந்தாமல் போக, இளமையென்னும் இழையொன்றில் நான் விரைந்து இங்குமங்கும் அலைய, காலமென்னும் மாய மை மெல்ல மெல்ல ஓவியத்தின் கோடுகளை அழிக்க, இன்று கூட என்னை கடந்து போன பெண்ணின் நெற்றி மட்டும் அதே ஓவிய நெற்றி. இன்னொரு நாளில் என்னிடம் பேசிச்சென்ற இன்னொரு பெண்ணில் அந்த கண்கள் மட்டும்... அழிந்து போன கோடுகள் விட்டுச்சென்ற உணர்வுகள் மட்டும் மனதில் அலையெழுப்பி தளும்ப தளும்ப, கோடுகள் அழிந்த அந்த இடைவெளி அனைத்தையும் இட்டு நிரப்பும் பேராசையில் சில முகங்களை ஏனோ திரும்ப திரும்ப பார்க்கத்தோன்றும். எத்தனை முகங்கள் கண்டாலும் அந்த முகம் ஆகாது எந்த முகமும்... காதலுக்கு முகமெதற்கு? என்ற புரிதல் வருவதற்கே தேவைப்பட்டது ஆண்டு அரை நூறு. நினைவில் எங்கோ காற்றில் நெற்றியில் புரள

கடல் இனி மெல்லச்சாகும்!

ஹேமமாலினி கன்னம் ஏன் இப்படி ஆச்சி? லாலு பீகார் முதல்வராக தந்த ஒரு வாக்குறுதி, 'எங்கள் சாலைகள் ஹேமமாலினி கன்னம் போல வழவழப்பாய் அமைப்போம்'. இது தேசம் முழுதும் வைரலாகி நாம் இழைத்து இழைத்து (ஒரு ஊத்தப்ப மாவில் நான்கு ரோஸ்டுகள் என்பதாக) மழித்து மழித்து சாலைகள் அமைத்தோம் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு. மழித்த ரோமங்களை நீர்நிலைகள், ஏரிகள், குளங்களில் இட்டு நிரப்பி அவற்றின்மீதும் ரோமாபுரியை நினைவுபடுத்தும் எழில்மிகு தூண்களும் மாட கோபுரங்களும் கொண்ட பல்லாயிர குடியிருப்புகளை வடித்தோம். பெருவணிகத்தின் துணையோடு இத்தனை குடியிருப்புகளும் வாங்கிக்குவித்து "வடித்ததை" கடலுக்கனுப்புவதற்கு புதிதாய் சுரங்கக்கால்வாய்கள் செய்தோம். அவற்றிலும் நெகிழி கழிவுகள் கவனமாய் கொட்டி அடைத்தோம். அடைப்பு பெருகப்பெருக நம் பொருளாதாரமும் வளர்வதாய் கண்டு 'ஒப்பிலாதொரு பொருளாதாரம் உலகத்திற்கொரு புதுமை!' என மார்தட்டி நம் வாழ்வின் தரமும் உயருவதாய் மகிழ்ந்து வெளி தேசங்களின் மதுக்குடுவைகளோடு உருண்டோம். உருண்ட குடுவைகளும் சுரங்கக்குழாய்களில் சரணடைய, அடைப்பும் வணிகமும் பொருளாதாரமும் பெருகுமுகமாகவே ஏறிப்போக, உல

பூப்பூக்கும் ஓசை

  தனிமையின் கால்கள் தேயும் சாலைகளில் உறங்கும் ஓசைகள் கூட கண்விழித்து எழுவதில்லை. தனிமையின் விரல்கள்  வருடும் இதயங்கள் ஏனோ எப்போதும் இரும்பு கவசங்களுக்குள் பதுங்கியே கிடக்கின்றன. இரும்பின் உரசல் தனிமையின் காதுகளில் பொத்தலிடும் கூச்சல், தனிமையின் விரல்கள் பொத்தினாலும் தீரா. தனிமையின் உடலில் புறக்கணிப்பின் தழும்புகள் தனித்தனியே மௌனமாய். தனிமையின் ராகம் யாருமற்ற நள்ளிரவில் தனித்த காரிருளில் தானே தேயும்,  தனிமையின் காதுகளில், காதுகளில் மட்டும். ராகமே துணையாய் மௌனமாய் துவளும் தனிமையின் கால்கள் தேயும் சாலைகளில் உறங்கும் ஓசைகள் கூட கண்விழித்து எழுவதில்லை. மேலிருந்து பார்த்திருக்கும் ஒற்றை நிலவு சுற்றிச்சுழலும் தனிமையில். அத்தனையும் மாறும் இந்தப்பூ பூக்கும் ஒற்றை நொடியில். யார் சொன்னது தனிமைக்கு துணையேதும் இல்லை என?!

ட்ராஃபிக் ஜாம்!

ட்ராஃபிக் ஜாம். அனுமன் வால் போல வாகனங்கள் இருபுறமும். மையத்தில் ஏதோவொரு 'கடக்க இயலாத' நிகழ்வினால் தேக்கம் என உணர்ந்தேன். ஏற்கனவே புது சாலை அமைப்பதற்காக பழையதை கொத்திப்போட்டு, பயன்படுத்தக்கூடிய அகலமும் குறைவான சாலை. நிமிடங்கள் மெல்ல கரைய...வண்டிகள் எதுவும் நகர்வதாயில்லை. மட்டமதியான வெயில் மூட்டிய சினத்தில் காடெரிக்கும் உத்வேகத்தோடு வாகனத்தை நிறுத்தி இறங்கினேன், மையத்தை நோக்கி நகர்ந்தேன். ஒரு இளம் வயது பெண். இடுப்பில் ஒரு குழந்தை. உடைகளில் ஏழ்மை. சாலையின் ஒரு பகுதியில் நடந்துகொண்டிருக்கிறாள். அவள் பின்னால் அவளது வயதை ஒத்த ஒரு ஆண், அவளை தடுத்து நிறுத்தும் முயற்சியின் தொடர் தோல்வியில் துவளாது மறுபடி மறுபடி முயல்கிறான். மொத்த கூட்டமும் (நம்ம ஊரில் கூட்டம் கூடுவதை கேக்கணுமா என்ன?!) உறைந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அருகில் இருந்த வாகன ஓட்டிகள் யாரும் ஹார்ன் கூட அடிக்கவில்லை. நான்கு சுவர்களுக்குள் நிகழ வேண்டிய ஒரு நிகழ்வு, பொது வெளியில். அந்நியர் நுழைய முடியாத உறவென்பதாலோ, அவர்களுக்கிடையில் நிழையக்கூடிய சமாதான உறவுகள் இல்லாததாலோ, நடுத்தெருவில் துயரம் நிகழ்ந்து கொண்டிருந்தது. ச

கூழாங்கல் மனிதர்கள்

கூழாங்கற்கள் பார்த்திருக்கிறீர்களா? உருண்டையாய. அல்லது நீளுருண்டையாய், வழவழப்பாய் அல்லது சற்றே சொரசொரப்பாய், பலப்பல வண்ணங்களில். கூழாங்கற்களை பிடிக்காத மனிதர்கள் யாரும் இருக்கமுடியுமா என்ன?! இந்தக்கற்களின் மீது நடப்பதும், இவற்றை உள்ளங்கைகளில் பொதித்து வைப்பதும் நம்மை பால்யத்தி்ற்கு தூக்கிச்செல்லும் மந்திரக்கதவுகள் அல்லவா? நட்சத்திர வெடிப்பின் துகள்கள், தூசிகள், மெல்ல மெல்ல்ல்ல திட வடிவம் பெற்று பல லட்சம் கோடி ஆண்டுகள் தவம் செய்து  புவியின் ஓடாகி... பூமிப்பாறைகள் அவ்வப்போது ஒட்டி உரசுகையில் உரசலின் சூடும் அழுத்தமும் இவற்றை குழம்பாக்கி பிளந்த ஓட்டின் வழி வான் நோக்கி கக்க, கக்கியது குளிர்ந்து இறுகி பாறையாய், மலையாய், மலைத்தொடர்களாய்... இப்படி உருவான மலையொன்றின் செதிள் போல ஒரு துண்டு மட்டும் நீரரித்த வேதனையில் உதிர்ந்து உருண்டு... உருண்டு  உருண்டு மலையிறங்கி தரையோடு ஓடடைந்து பள்ளமிறங்கி நீருக்குள் நழுவி 'தொபுக்' என விழுந்த தருணத்தில் அதனுள் இறங்கிய குளிர் சிலிர்ப்பு அதுவரை படிந்திருந்த நினைவுகள் அனைத்தையும் கழுவித்துடைக்க... ஆனந்தமாய் நீரோடு அது வாழும். கூழாங்கல்லின் ஆதி கதை இது. ஒ