முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓயாத தேடல்...

நுங்கம்பாக்கம் ராஜ் பவனாவில் அதிகாலை அடுப்பில் பொங்கல் வெந்து இறங்கியவுடன் வடையுடன் முதல் ப்ளேட் எனக்குதான். 

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தினமும் காலையில் ஆறு மணிக்கு என்னை பார்த்ததும் ரெகுலர் சர்வர் ஒரு புன்சிரிப்பு ப்ளஸ் தலையசைப்புடன் உள்ளே சென்று ஆவி பறக்க கொண்டு வருவார்.

முடித்தபின் காபி. 

அடையாறில் ஐந்தரைக்கு ஆட்டோ பிடித்து இங்கு வந்து சிரம பரிகாரம் ஆன பின் மாக்ஸ் முல்லர் பவனம்.


ஜெர்மன் மொழி கற்கும் ஆவலில் ஆஃபீசுக்கே தெரியாம சேர்ந்து, தினமும் காலையில் வேலைக்கு எப்படியும் அரைமணி தாமதமாய் வந்து, டிசிஎஸ் ஆஃபீசில் (185, டி.கே.சண்முகம் சாலை) நெருப்பு கக்கும் ப்ராஜக்ட் மேனேஜரின் கண்களில் ஒரு நாள் சிக்க, 'வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்? யு நோ த இம்ப்பார்ட்டன்ஸ் ஆஃப் அவர் ப்ராஜக்ட் டு திஸ் ஆர்கனைசேஷன்? அதுவும் இப்பதான் ப்ராஜக்ட்ல சேந்திருக்க!' என அடித்தொண்டையில் எனக்கு மட்டும் பீதியைக்கிளப்பும் குரலில் மெல்ல கேட்டார். 

நியாயமான கேள்விதான். 750 Man Years தேவைப்படும் Show Piece Global Software Project ஐ கச்சிதமாய் செதுக்கிக்கொண்டிருப்பவர், கேட்பார்தானே!

'சாரி சார். ஆக்சுவலி சார், அவர் க்ளையண்ட் சுவிட்சர்லாண்ட் சார். தே ஸ்பீக் ஜெர்மன் சார். இஃப் ஐ லேர்ன் ஜெர்மன் சார், இட் வில் ஹெல்ப் தி ப்ராஜக்ட் சார்!' என ஏ.சியிலும் வியர்வையில் நனைந்துகொண்டு நான் சொன்ன பதில் அவர் முகத்தை ப்ரகாசமாக்கியது.

'வெரி குட். பட் ப்ளீஸ் இன்ஃபார்ம் சச் திங்ஸ் அண்ட் டு!' என அப்ரீசியேடிவாக கடந்து சென்றார்.


அடுத்த நாள் காலை சங்கீதா Lehrer (வாத்யார், 26 வயது!) வகுப்பில் இந்த incident ஐ பாலு சாரிடமும் கார்த்திக்கிடமும் பகிர்ந்தபோது அத்தனை சிரிப்பு.

ஒரு ஏழெட்டு பேர்தான் வகுப்பு. பாலு சார் - பாலசுப்ரமணியன் - ஆடிட்டர். கார்த்திக் - கார்த்திக்குமார் - பாங்க் ஆப் மதுராவில் கம்ப்யூட்டர் நெட்வொர்க் டெக்னாலஜிஸ்ட், இன்னும் சில ஆண்கள், பெண்கள்.

பாலுதான் ஆக சீனியர். மற்ற நாங்கள் எல்லோரும் பதின் இருபது வயதுகளில் (twenty's லயும் டீன்ஸ் ங்கிற early twenty's).

பாலுவும் அவர் மனைவியும் அடையார் இந்திரா நகரில். தனி சொந்த வீட்டில்.

கார்த்திக் அவனது அலுவலகம் அருகில் வீடு எடுத்து தங்கல்.


இந்தப்பதிவு இவர்கள் இருவருடனான எனது நட்பு பற்றியது.


பாலுவும் அவரது மனைவியும் மேட் ஃபார் ஈச் அதர். அதனால்தான் அவர்களுக்கு குழந்தைகள் இல்லையோ என்று தோன்றும். வாரணம் ஆயிரம் சீனியர் சூர்யா சிம்ரன் ஜோடியின் திரை வாத்சல்யம், அதற்கு பல ஆண்டுகள் முன்னரே எனக்கு பரிச்சயமானது அவர்கள் வீட்டில்தான்.

சில நாட்களிலேயே வயது வித்தியாசமின்றி சகஜமாகி, அநேகமாய் நாங்கள் மூவர் ப்ளஸ் மீனாட்சி என்கிற ஜெர்மன் வகுப்புத்தோழி. இதுதான் எங்கள் குழு.

'நீ ஏன் சாஸ்திரி நகர்லேந்து க்ளாசுக்கு ஆட்டோல வர? டெப்போக்கு எதிர்ல நான் டெய்லி பிக் அப் பண்ணிக்கிறேன். ஓகேவா' என விடை எதிர்நோக்காமல் தொடங்கி தினமும் சேர்ந்து பயணிப்போம்.

சிவப்பு வண்ண மாருதி800 இல் எப்போதும் முன் இருக்கையில் அமர்வேன் (பின் சீட்ல உக்காந்தேன்னா எனக்கு ட்ரைவர் மாதிரி ஃபீல் ஆகும். சோ, டேக் ஃப்ரன்ட் சீட்').

பல ரேண்டம் டாபிக்ஸ், இம்மியளவும் ஆர்வம் குறையாது உரையாடல் நீளும், மா.மு.பவன் வரும் வரை. என்றாவது வரும் வழியில் மீனாட்சி பேருந்து நிறுத்தத்தில் தென்பட்டால் பின் இருக்கையில் ஏற்றிக்கொள்வார்.

ஆடிட்டர் வேலையில் ஆர்வம் குறைந்து, டிசிஎஸ்சில் Subject Matter Expert ஆக பணியில் சேர HR உடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பது வரை எல்லாம் பகிர்வார்.

ஒரு சித்ரா பௌர்ணமியன்று அவரது வீட்டுக்கு எங்களை அழைத்து, மாலை twilight time இல் அரட்டை தொடங்கி, முன்னிரவில் பௌர்ணமி ஒளி ப்ளஸ் பாலு அன்ட் மிசஸ் பாலுவின் அன்புச்சூழலில் நான் உண்ட சுவையான சித்திராண்ணம், இன்றுவரை எனக்கு வேறெங்கும் கிட்டவில்லை. உணவு என்பது உணவு மட்டும்தானா என்ன?!


கார்த்திக், நேர்மையின் பிரதி. நானும் அப்படியே ப்ளஸ் ஒரே வயது. மரியாதை கலந்த மிக மிகநல்லதொரு அரிய நட்பு அது.

சிறு வயதிலேயே NCC இல் ஜனாதிபதி விருது, கணையாழி சிற்றிதழில் (எழுத்தாளர் சுஜாதாவின் கோட்டை, பட்டறை) Le Roy என்கிற பெயரில் கவிதைகள் எழுபவன் (லெ ராய் - இத்தாலிய மொழியில் அரசன் என்ற பொருளாம்). அளவாய், ஆழமான கருத்துக்களோடு உரையாடுவான், நாடகங்கள் நடிப்பான்.

சிந்தனை, ரசனை என பல தளங்களில் எங்களின் வேவ் லென்ந்த் பொருந்திப்போனது நட்புக்கு மெருகேற்ற, பாலுவும் இதில் சீம்லெஸ்ஸாய் இணைந்துகொள்ள...அது ஒரு அழகிய கனாக்காலம் போலவே அந்த ஆறு மாதங்கள் விரைந்தன.


சங்கீதா, ஆசரியை, bubbly young lady with a beaming 'oh so natural' smile all the time, பாடம் தொடங்கிய முதல் நாளில் இருந்தே அறவே தமிழ் ஆங்கிலம் தவிர்த்து ஜெர்மன் மொழியில் மட்டுமே பேசுவார். மொழியை விரைவாய் எளிதாய் பழக இது எவ்வளவு அவசியம் என நாங்கள் விரைவிலேயே உணர்ந்துகொண்டோம். அதுவரை குரலை மட்டுமே ஏற்றி இறக்கி பேசிய எங்கள் அனைவரையும் உடல்மொழியை (கையசைவு, உதட்டுக்குவிப்பு, இத்யாதி) கற்று பேசவைத்த பெருமை அவரையே சேரும். இலக்கண அடிப்படை எளிதில் கற்கவும் அது பேருதவியாக இருந்தது.

விளையாட்டாய் ஆறு மாதங்கள் கழிய, தேர்வு எழுதினோம்.

எல்லோரும் நன்கு எழுதி நல்ல மதிப்பெண்கள். வியப்பு என்னவென்றால் நானும் கார்த்திக்கும் ஒரே மதிப்பெண், including even fractions, 121.35 out of 130!


அடுத்த சில வாரங்களில் நான் சுவிஸ் நாடு செல்ல தயாரானேன். பாலு கிட்டத்தட்ட டிசிஎஸ் சென்னையில் வேலைக்கு சேர்ந்துவிடும் முடிவில் இருந்தார். ஒரு க்ரூப் farewell அதன் பின் இருவருடனும் தனித்தனி லஞ்ச் farewell. 

கார்த்திக் நான் விடைபெறும் நாளில் அழகான கையெழுத்தில் ஒரு கவிதை எழுதி எடுத்துவந்திருந்தான்.

அவனுக்கும் ஜெர்மனியில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை கிடைத்திருந்தது. என்ன வேலை என்றேன். 'காம்பெடிடர் நெட்வொர்க் கட்டமைப்புகளை வீழ்த்தி எனது நிறுவனத்தின் நெட்வொர்க்கை நிறுவும் வேலை' என்றான், போருக்கு தயாரான லெ ராய் போல.

அவனது கவிதையின் சாரம், ஒவ்வொரு பிரிவும் ஒரு மரணம்தான். ஒவ்வொரு புதிய சந்திப்பும் ஒரு ஜனனம் போல என்பதாக இருந்தது.  நான் அது வரை கணையாழியில் (அது எனக்கு பல வருடங்களாகவே ஆதர்ச இதழ்) படித்த கவிதைகள் அனைத்தையும் விட சிறந்ததாக தோன்றியது (ஏனெனில் கல்யாண்ஜி, மகுடேசுவரன் போன்றோரின் கணையாழி கவிதைகள் எனக்காக எழுதப்பட்டவை அல்லவே!).


மரணம் போலத்தான் பிரிவும்.

பாலுவையும் கார்த்தியையும் அதன் பின் வெளிநாடுகளில் உழைத்த என் நாட்களில், மாதங்களில், வருடங்களில் நான் தேடுவதற்கு அதிகமாக மெனக்கெடவில்லை. ஐரோப்பாவில் வசித்ததாலும், ஜெர்மனி பக்கத்து நாடு என்பதாலும் சில வருடங்கள் அவ்வப்போது லெ ராய், கார்த்திக், நெட்வொர்க் என்ஜினியர் என இன்டெர்நெட்டில் தேடி, ஒரு முறை ஒரு தொலைபேசி எண் கண்டுபிடித்து (Karthikkumar, Dusseldorf அல்லது வேறேதோ ஒரு ஊர்), சில முறை அழைத்துப்பார்த்து, மறு முனையில் யாரும். எடுக்காது போய், ஒரு முறை வாய்ஸ் மெசேஜ் விட்டு, அதன் பின் முயற்சிக்கவில்லை.

அடையாறில் இந்திரா நகரில் பாலு இருந்த வீட்டு சாலையை பல வருடங்கள் கழித்து சில முறை தேடி, அப்போதே உருத்தெரியாமல் மாறத்தொடங்கியிருந்த மாநகரின் வளர்ச்சிக்கு முன் என் தேடல் தோற்றுப்போய்...


பாலுவும் அவரது மனைவியும், கார்த்திக்கும் அவனது குடும்பமும் இன்று எங்கோ வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். அவர்களும் சமூக வலை தளங்கள் இல்லாத அந்த வருடங்களில் என்னைப்போலவே தொடர்பு முயற்சிகளில் தோல்வியுற்று, என்னைப்போலவே வாழ்வின் ஓட்டத்தில் இடம் பெயர்ந்திருக்கலாம்.

அதெல்லாம் சரி, இத்தனை வருடங்கள் கழித்து திடீரென ஏன் இப்பொழுது இத்தனை நினைவுகள்?

தெரியவில்லை.

மனித சிந்தனை, அறிவியலால் அறுதியிட முடியாதது. இன்று வீட்டில் மனைவி இல்லாத காலை வேளையில் பள்ளிக்கு அவசரமாய் கிளம்பும் பையனுக்கு உணவு தயாரித்து லஞ்ச் பாக்சில் அடைக்கையில் திடீரென பாலுவும் லெ ராயும் நினைவில் வந்தனர், just like that!

உளவியல் நிபுணர்கள் யாராவது இந்தப்பதிவை படித்தால் 'sub conscious impact and memories of that last lunch you had with them got triggered by the lunch box you were packing today' எனலாம். ஆனால் நான் இப்படி லஞ்ச் பாக்ஸ் பேக் செய்வது இது முதல்முறை அல்ல!


ஏனென்று அறியாமல் திடீரென பல வருடங்களுக்கு முன்பு எதிர்பாராத ஒரு வெயில் நாளில் பெய்த திடீர் மழையின் சாரல் இன்று இந்த நொடியில் நம் மன வெளியை எதேச்சையாக நனைத்துச்செல்வது போன்ற தருணங்கள், உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும்தானே.

The sweet memories these random past thoughts bring, linger for a while, sweet.


ஆராயாமல் அனுபவத்திளைப்பு செய்யவேண்டிய தித்திப்பான நினைவுக்குமிழ்கள் இவை.

எப்படியாவது இந்த தித்திப்பை குமிழ்கள் உடையும் முன் உங்களுக்கும் கடத்த நினைத்தேன். எழுதிவிட்டேன் :-)

ஏனென்று தெரியவில்லை!


பேரன்புடன்,

பாபுஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்