நுங்கம்பாக்கம் ராஜ் பவனாவில் அதிகாலை அடுப்பில் பொங்கல் வெந்து இறங்கியவுடன் வடையுடன் முதல் ப்ளேட் எனக்குதான். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தினமும் காலையில் ஆறு மணிக்கு என்னை பார்த்ததும் ரெகுலர் சர்வர் ஒரு புன்சிரிப்பு ப்ளஸ் தலையசைப்புடன் உள்ளே சென்று ஆவி பறக்க கொண்டு வருவார். முடித்தபின் காபி. அடையாறில் ஐந்தரைக்கு ஆட்டோ பிடித்து இங்கு வந்து சிரம பரிகாரம் ஆன பின் மாக்ஸ் முல்லர் பவனம். ஜெர்மன் மொழி கற்கும் ஆவலில் ஆஃபீசுக்கே தெரியாம சேர்ந்து, தினமும் காலையில் வேலைக்கு எப்படியும் அரைமணி தாமதமாய் வந்து, டிசிஎஸ் ஆஃபீசில் (185, டி.கே.சண்முகம் சாலை) நெருப்பு கக்கும் ப்ராஜக்ட் மேனேஜரின் கண்களில் ஒரு நாள் சிக்க, 'வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்? யு நோ த இம்ப்பார்ட்டன்ஸ் ஆஃப் அவர் ப்ராஜக்ட் டு திஸ் ஆர்கனைசேஷன்? அதுவும் இப்பதான் ப்ராஜக்ட்ல சேந்திருக்க!' என அடித்தொண்டையில் எனக்கு மட்டும் பீதியைக்கிளப்பும் குரலில் மெல்ல கேட்டார். நியாயமான கேள்விதான். 750 Man Years தேவைப்படும் Show Piece Global Software Project ஐ கச்சிதமாய் செதுக்கிக்கொண்டிருப்பவர், கேட்பார்தானே! 'சாரி சார். ஆக்சுவலி சார், அவர் ...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!