முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஓ நெஞ்சமே...இது உன் ராகமே...

புது தில்லியில் ஆக்சிஜன் பார் திறந்திருக்கிறார்களாம்! ஒரு மணி நேரத்திற்கு பல நூறு தந்தால் சுத்தமான ஆக்சிஜனை அங்கு அமர்ந்து சுவாசிக்கலாமாம்! அமெரிக்க ஸ்டார் பக்ஸ் போல இதுவும் விரைவில் பிரபலமாகலாம். உலகெங்கிலும் வாழும் மனிதர்களுக்கு, வீடு, அலுவலகம் என்கிற இரண்டு இடங்களை தாண்டி மூன்றாமிடம் ஒன்று தேவைப்படுகிறது. The so called Third Space. வீட்டின் சட்ட திட்டங்களும் அலுவலகத்தின் அழுத்தமும் இல்லாமல் ரிலாக்ஸ்டாக, இரைச்சல் இன்றி, வெக்கை மற்றும் வாகனப்புகை சாக்கடை நாற்றம் இல்லாத ஓரிடத்தில் நமக்கு பிடித்த காஃபியை பருகியவண்ணம் நண்பர்களுடனோ தனியாகவோ சில மணித்துளிகளை கரைக்க நாம் பெரிதும் விரும்புகிறோம். இதற்காக பல நூறு செலவு செய்யவும் ஆயத்தமாக உள்ளோம். இது போன்ற Third Space, குறிப்பாக Star Bucks, அவர்கள் தரும் Third Space எவ்வளவு ரம்மியமானது என அங்கேயே பல விளம்பர போஸ்டர்கள் வைத்திருப்பார்கள்.... 'டேபிள் மேல் கால் போட்டுக்கொள்ளுங்கள. இது வீடு அல்ல!' என்பதில் தொடங்கி, 'ரிலாக்ஸ். இங்கு யாரும் உங்களை துணி துவைக்கச்சொல்வதில்லை' வரை :-) No wonder people flock to these places, making them ...

வாழு, வாழ விடு.

மண்ணில் தோன்றிய உயிர் அனைத்தும் வாழத்துடிக்கும் ஜாதிதான். ஒற்றை செல் உயிரியிலிருந்து "பேராசை பெருநுகர்வின் வால் பிடித்து ஓடிக்கொண்டிருக்கும்" பேருயிர்கள் வரையான கோடி கோடி உயிர்களும் இதே ஜாதிதான். விதி விலக்கு என்பதே இயற்கையின் விதிகளில் இல்லை. இத்தனை கோடி உயிர்களில் சிலது மட்டும் வாழ பலதும் அழியவேண்டும் என இயற்கை ஒருபோதும் எழுதியதில்லை. தஞ்சையிலிருந்து ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, ஆவணம், பேராவூரணி வழியே பயணித்தால் வரும் ஒரு சிற்றூர், "பெருமகளூர்". இந்த ஊரின் பழமையான சிவன் கோவில் புகழ்வாய்ந்த ஒன்று.  இந்த ஊர், காவிரியின் கடைமடைப்பகுதியில் இருக்கிறது. கடற்கரை சற்றே தொலைவில். பூமியில் துளையிட்டு நாற்பது அடிக்கு கீழே போனால் கடல்நீர் வரும். மழையை நம்பி விவசாயம் செய்யும் ஊர் இது. கடலை, எள்ளு, தென்னை என பலதும் விளைவித்து வணிகப்பொருளாதாரத்தில் சிக்கி, கடந்த பல ஆண்டுகளாய் நெல் சாகுபடி மட்டுமே முதன்மைப்பயிர். விளைச்சலைப்பெருக்க வீரிய விதைகள், வீரிய உரங்கள் எனப்பழகிய மக்கள் கடந்த சில ஆண்டுகளாக ரவுண்டப் என்னும் மிக வீரிய உயிர்க்கொல்லியை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.  விளைச்சல் அதிக...

பரிணாம வளர்ச்சி

பரிணாம வளர்ச்சி🐵🙈🙉🙊🐒🦍🐵 "யாதும் ஊரே யாவரும் கேளிர்!"😀😃😄😁😆😅😂🤣☺️😊😇🙂🙃😉😌😍🥰😘😗😙😚😋😛😝😜🤪🤨🤓😎🤩🥳😏 'நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை!'😀😃😄😁😆😅😂🤣☺️😊😇🙂🙃😉😌😍🥰😘😗😙😚😋😛😝😜🤪🤨🤓😎🤩🥳😏 "நான் தனிமரம் இல்லை, தோப்பு!"😀😃😄😁😆😅😂🤣☺️😊😇🙂🙃😉😌😍🥰 'எனக்கு பின்னால் ஒரு கூட்டமே இருக்கு!'😀😃😄😁😆😅😂🤣 'எனக்காக குரல் கொடுக்க நாலு பேர் இருக்காங்க!'😀😃😄😁 "நாமிருவர் நமக்கிருவர்"👨‍👩‍👧‍👦 'நாமிருவர் நமக்கொருவர்'👩‍👩‍👦 "நாமே இருவர். நமக்கெதுக்கு ஒருவர்?"👩‍❤️‍👨 'எனக்கு நீ, உனக்கு நான்'👩‍❤️‍👨 ............ ............ "யாராவது இருக்கீங்களா?"😱 .......... .......... (நிகர் உலகில் நுழைந்து) 'யாராவது இருக்கீங்களா?!'🙇‍♀️ ......... .......... "யராவது இருக்கீங்களா? ஏதாவது பேசுங்கப்பா!!!!!!"🤔👂🏻✋🙆‍♀️ ............ ............ 'ஏய்! 😡😳😱👺😡😳😱👺😡😳😱👺 யார்றா நீங்கல்லாம்???' ............. .............. ............. ...........

பூனை மனிதர்கள்

கிராமத்தில் அந்த ஐயனின் தோப்பு வீட்டில் வெளிர் அரக்கில் வெள்ளைக்கோடுகள் ஓடும் பூனைக்குட்டி ஒன்றை வளர்க்கிறார்...இல்லை இல்லை, அதுவாய் வளர்கிறது, அந்த அம்மையின் திட்டுக்களை சட்டை செய்யாமல். கிராமத்து வீடுகளில் எலி நடமாட்டம் தவிர்க்க இயலாத ஒன்று. அரிசி பருப்பு மூட்டைகளையும் காய்கறி பழங்களையும் அவை உண்டு ஓடுகையில் வீட்டிலுள்ள பெரியவர்கள் டி.வி விளம்பரங்களில் வரும் உயிர்க்கொல்லிகளை ஒருபோதும் நாடுவதில்லை. மாறாக பூனை வளர்க்கிறார்கள் அல்லது ஒரு முறை வீட்டுக்கு தவறி வரும் பூனைக்கு உணவளித்து அங்கேயே தங்கிப்போக பழக்குகிறார்கள். அந்தப்பூனை ஏதாவதொரு காரணத்தால் காணாமல் போய்விட்டால் அவர்கள் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் சில நாட்கள் தேடி, அதன் பின் எந்தப்பூனை அந்தப்பக்கம் வந்தாலும் அதை வளர்க்க இயல்பாய் முனைகிறார்கள். இப்படித்தான் நான் இவர்கள் வீட்டில் இப்போது பார்ப்பது மூன்றாவது பூனை. இதற்கு முன் சாம்பல் நிறப்பூனை, அதற்குமுன் முற்றிலும் வெண்மை நிறத்திலான பூனை என்று நினைவு. பூனைகள் நாய்கள் போல எளிதில் பழகாது. எளிதில் அண்டாது. எளிதில் அண்ட விடாது. ஆனால் சுவாதீனமாய் உரிமை எடுத்துக்கொள்ளும், நம் ஆடை நுனிகளை பற...

வாழ்வென்பதே...

உரக்கமற்ற இரவுகளின் இமை உரசல்களில் உதிர்ந்த கனவுகளில் ஏதேனும் ஒன்றை நிகழில் எதிர்கொள்கையில் கனவென்றறியாது கடந்துபோய் ஏதோ நினைவில் திரும்பி நோக்க காலத்தின் பெருங்காற்றில் அது போயிருக்கும் பலதூரம் பறந்து. கனவு பொறுக்கி கனவு சேர்த்து கனவில் நெய்த கனத்த ஏக்கங்கள் சொல்லாமல் சுற்றிச்சூழும்  பொருள்தேடி உழலும் வெக்கை தினங்களிலும். கனவு மெய்ப்பட ஓடித்தேடும் இரவுகளில் ஒரு கனவில் கண்விழித்து நிசமாகாதா என ஏங்கித்தவித்து மறுபடி உறங்கிப்போகும் மனதுக்கு தெரியுமா கனவு மெய்ப்பட மெய்வருத்தம் தேவையென? கனவென்பது ஓர்விதை விதையென்பது பேராயுதம் நானே நல்நிலம். மெய்வருத்தி ஊன்றி ஊன்றியதை போற்றி கண்ணும் கருத்துமாய் உரக்கமின்றி வளர்த்து வளர்த்தது வளர வளர வளர வாழ்வு துலங்கும் (விதை)ஆயுதம் பெருகும். "ஆயுதம் செய்வோம் தலை சாயுதல் செய்யோம்" என தோழனொருவன் முழங்கியது உரக்கம் கலைத்துப்போட உறங்கப்போவதில்லை நான் என் கனவு காடாகும் வரை. உறங்கப்போவதில்லை நான் நானே காடாகும்வரை. வீழ்வேன பதைத்தனையோ சொல்லடி சிவசக்தி! நச்சிட்ட நிலத்தினிலும் நான் விதைத்த கனவு விதை விசையுறு பந்தினைப்போல் விரும்பியபடி வளர்ந்து நித்தம் நவமெ...

கல்யாண வைபோகமே

  மகாமாரி அரசாளும் காலகட்டத்தில், சிறார் திருமணங்கள் மீண்டும் பேசு பொருளாக இன்று பொதுவெளியில். இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மர், ஏழ்மைப்போர்வையில் குளிரில் நடுங்கும் ஆப்பிரிக்க நிலங்கள்... இன்னும் நம் கவனத்திற்கு வராத பல ஏழ்நிலங்கள். அன்றாடங்காய்ச்சி வாழ்வாக இன்றுவரை உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் இந்நில தாய்மக்கள், தகப்பன்கள், தம் பெண் குழந்தைகளை 'உணவு, உறைவிடம், பாதுகாப்பு' என்கிற மூன்று அடிப்படை காரணங்களுள் ஏதோ ஒன்றுக்காக இன்றும்கூட பதின்பருவம் தாண்டுமுன்பே திருமணம் செய்து தருகிறார்கள். இந்தியாவில் மட்டும் இந்த ஆண்டு 5000க்கும் மேலான சிறார் திருமணங்கள். கணக்கில் வராமல் இன்னும் சில ஆயிரங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஆதி குடிகளாய் கானகங்களில் கனிந்த நம் வாழ்வியலில் உணவு, இருப்பிடம், வாழ்நாள் வரை பாதுகாப்பு இவை மூன்றும் இயல்பாய் கிடைத்திருந்தது; ஆளுண்ணி விலங்குகள் நிறைந்த கானகங்களிலும்... வளமான வாழ்வு தேடி விலகிப்பரவி சமுதாயங்கள் செய்து, எல்லைகள் விரித்து, நிலம், இனம், நாடு, எல்லைகள் என எல்லையற்று விரிந்து, தொழில்நுட்ப நுண்ணோக்கி மூலம் அண்ட சராசரத்தை அலசும் அளவு முன்னேறிய நம...

எனை ஆண்டாளே!

  மார்கழி முப்பதுக்கு காலத்திற்கும் உரக்க கேட்கும் திருப்பாவை தந்தவளை உலகம் போற்றட்டும். எனக்கதில் அக்கறையில்லை. போற்றுவோர், தம் வாழ்வியல் சூக்கும கயிறு கொண்டு தம்மைத்தாமே அந்த முப்பதில் பிணைத்து அதனுள்ளே உய்யட்டும். என் ஆண்டாள், "நாச்சியார் திருமொழி" ஆண்டாள். 143 பாடல்வழி தன் கண்ணனை 'உண்டு இல்லை' என ஆக்கிய பெருங்காதல் பெண்; ஆண்கள் வார்த்த உலகில் பெண்ணுக்காய் அவர் வார்த்தடைத்த உலோகக்கதவுகளை தன் கவிதைகள் கொண்டு எட்டி மிதித்து ஏறித்தாவி மறுபுறம் குதித்து இறையோடு கலந்த காதல் தலைமகள். நெஞ்சமெல்லாம் கண்ணனென உன்மத்த காதலில் அற்ப மானிடரை அண்ட விடேன் என்று திண்ணமாய் நின்றவளை 'என்ன செய்வதென' அறியாது தவித்த சமூகம் பற்றிய உணர்வெதுவுமின்றி காதல் பெருவெளியில் பாற்கடலை கடைந்தவனின் 'அரையில் சாத்திய பீதாம்பரத்தை என் மீது படியும்படி சாத்தி என் வாட்டம் போக்கும்படி செய்யாமல் ஏன் என்னை இன்னும் நோகடிக்கிறீர்கள்?!' என பாடிக்கேட்கும் பெறும்பேறு பெற்ற மாயவன் அவளை தன்னுள்ளே சூடிக்கொண்டதில் விந்தையென்ன? ஜெய கோவிந்தத்தை சிலாகிக்கும் சமூகம், மார்கழித்திங்கள் மதி நிறைந்த சமூகம், அ...