புது தில்லியில் ஆக்சிஜன் பார் திறந்திருக்கிறார்களாம்!
ஒரு மணி நேரத்திற்கு பல நூறு தந்தால் சுத்தமான ஆக்சிஜனை அங்கு அமர்ந்து சுவாசிக்கலாமாம்!
அமெரிக்க ஸ்டார் பக்ஸ் போல இதுவும் விரைவில் பிரபலமாகலாம்.
உலகெங்கிலும் வாழும் மனிதர்களுக்கு, வீடு, அலுவலகம் என்கிற இரண்டு இடங்களை தாண்டி மூன்றாமிடம் ஒன்று தேவைப்படுகிறது. The so called Third Space.
வீட்டின் சட்ட திட்டங்களும் அலுவலகத்தின் அழுத்தமும் இல்லாமல் ரிலாக்ஸ்டாக, இரைச்சல் இன்றி, வெக்கை மற்றும் வாகனப்புகை சாக்கடை நாற்றம் இல்லாத ஓரிடத்தில் நமக்கு பிடித்த காஃபியை பருகியவண்ணம் நண்பர்களுடனோ தனியாகவோ சில மணித்துளிகளை கரைக்க நாம் பெரிதும் விரும்புகிறோம்.
இதற்காக பல நூறு செலவு செய்யவும் ஆயத்தமாக உள்ளோம்.
இது போன்ற Third Space, குறிப்பாக Star Bucks, அவர்கள் தரும் Third Space எவ்வளவு ரம்மியமானது என அங்கேயே பல விளம்பர போஸ்டர்கள் வைத்திருப்பார்கள்.... 'டேபிள் மேல் கால் போட்டுக்கொள்ளுங்கள. இது வீடு அல்ல!' என்பதில் தொடங்கி, 'ரிலாக்ஸ். இங்கு யாரும் உங்களை துணி துவைக்கச்சொல்வதில்லை' வரை :-)
No wonder people flock to these places, making them multi billion dollar companies.
எனக்கும் ஒரு Third Space உண்டு.
மேற்படி இரண்டைப்போல இல்லாமல் எனது Third Space பல விதங்களில் வேறுபட்டது:
நான் செல்லுமிடமெல்லாம் இதை நான் எடுத்துச்செல்ல முடியும்.
எனக்கு உகந்த எந்த இடத்திலும் இந்த மூன்றாவது இடத்தை நொடியில் என்னால் நிறுவிக்கொள்ள முடியும்.
ஒரே முறை பணம் தந்து வாங்கி வாழ்நாள் முழுதும் அனுபவிக்க முடியும்.
நண்பர்கள் சிலரையும் இலவசமாக இந்த Third Space இல் Host செய்ய முடியும்.
இப்படித்தான் பனி பொழியும் இன்றைய அதிகாலை இருளில் ஒரு வேலையாக வெளியில் சென்று திரும்புகையில் ஒரு வயல்வெளி சாலையில் மகிள மரத்தடியில் நான் என் Third Space ஐ நிறுவினேன்.
"ஓ நெஞ்சமே இது உன் ராகமே" என்ற பாடல் என் வாகனத்தின் இசைப்பேழையிலிருந்து ராஜாவின் இசைவழி என் உள்ளும் புறமும் நிரம்பி, வாகனத்தின் திறந்த சன்னல்கள் வழி வெளியேயும் வழியத்தொடங்கியது என் "மூன்றாவது இடத்தி" லிருந்து!
கண்கள் மூடிய நொடியிலிருந்து திறந்த நான்கு நிமிடத்திற்குள் அது என் நினைவுகளை மாயக்கயிறு கட்டி எங்கெங்கோ இழுத்துச்சென்று எனக்கு காஃபி, ஆக்சிஜன், இன்னும் பல உபசரிப்பெல்லாம் செய்து மறுபடி என் வாகனத்திற்குள்ளே இறக்கிவிட்டபோது என்னுள் தளும்பியது நன்றியுணர்வு மட்டுமே!
ராயல்டி என்ன ராயல்டி? தென்றல் வந்து தீண்டும்போது இசைக்கோவையை, சுந்தரி கண்ணால் ஒரு சேதி இசைக்கோவையை, என்னுள்ளே என்னுள்ளே, இது மௌனமான நேரம், இளங்காத்து வீசுதே.... ஒவ்வொரு முறை கேட்பதற்கும் நான் மகிழ்வாய் நெகிழ்வாய் ராயல்டி தருவேன் அவர் கேட்டால்!
நான் ராஜாவின் ரசிகன் அல்ல! அவரது இசை எனது Third Space, Time Machine, Oxygen Bar, Healing Touch, Joyride Partner, Consoler in Chief, My sleeping Pill, Place of Worship and much much more!
யாராவது Raja Music Bar என ஒரு Global Chain தொடங்கினால் இவரது இசையோடு சேர்த்து எதை வேண்டுமானாலும் உலகெங்கும் இன மத நிற மொழி வேறுபாடுகள் இன்றி விற்க முடியும் :-)
கருத்துகள்
கருத்துரையிடுக