முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்யாண வைபோகமே

 




மகாமாரி அரசாளும் காலகட்டத்தில், சிறார் திருமணங்கள் மீண்டும் பேசு பொருளாக இன்று பொதுவெளியில்.


இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மர், ஏழ்மைப்போர்வையில் குளிரில் நடுங்கும் ஆப்பிரிக்க நிலங்கள்... இன்னும் நம் கவனத்திற்கு வராத பல ஏழ்நிலங்கள்.


அன்றாடங்காய்ச்சி வாழ்வாக இன்றுவரை உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் இந்நில தாய்மக்கள், தகப்பன்கள், தம் பெண் குழந்தைகளை 'உணவு, உறைவிடம், பாதுகாப்பு' என்கிற மூன்று அடிப்படை காரணங்களுள் ஏதோ ஒன்றுக்காக இன்றும்கூட பதின்பருவம் தாண்டுமுன்பே திருமணம் செய்து தருகிறார்கள்.


இந்தியாவில் மட்டும் இந்த ஆண்டு 5000க்கும் மேலான சிறார் திருமணங்கள். கணக்கில் வராமல் இன்னும் சில ஆயிரங்கள் நிகழ்ந்திருக்கலாம்.


ஆதி குடிகளாய் கானகங்களில் கனிந்த நம் வாழ்வியலில் உணவு, இருப்பிடம், வாழ்நாள் வரை பாதுகாப்பு இவை மூன்றும் இயல்பாய் கிடைத்திருந்தது; ஆளுண்ணி விலங்குகள் நிறைந்த கானகங்களிலும்...


வளமான வாழ்வு தேடி விலகிப்பரவி சமுதாயங்கள் செய்து, எல்லைகள் விரித்து, நிலம், இனம், நாடு, எல்லைகள் என எல்லையற்று விரிந்து, தொழில்நுட்ப நுண்ணோக்கி மூலம் அண்ட சராசரத்தை அலசும் அளவு முன்னேறிய நம் 'உலகமயமான' வாழ்வியலில், இன்று வரை இந்த மூன்று அடிப்படை தேவைகள் ஏன் அனைவர்க்கும் சாத்தியமில்லை?


செல்வ செழிப்பின் அடையாளங்களாய் ஜொலிக்கும் "வளர்ந்த மேலை நாடுகளிலும்" சிறார் திருமணங்கள் நிகழ்கின்றன இன்றும். அவை நம் கவனத்துக்கு வருவதில்லை. அவ்வளவே.


"இந்த சிக்கலை நாம் நம் நிலப்பரப்பில் காலூன்றி நின்றுகொண்டு அலசி ஆய்வது பலன் தராது" என்ற முடிவோடு ஒரு புகைப்படக்கலைஞர், ஜானி மில்லர், ஒரு எந்திரக்கண்ணை (drone) வானுக்கு அனுப்புகிறார்.


'விலகி நின்று அணுகினால் மட்டுமே சிக்கலின் மூலமும் தீர்வும் தெளியும்' என்பதை இந்த 'உயரப்பறவை, உயரப்பார்வை' உறுதி செய்தது.


மூன்று நிலப்பரப்புகள், மூன்று Aerial shots,   (இந்தியா, மெக்சிகோ, ஆப்பிரி்க்கா), ஒற்றைப்பாடம்...


சமூக ஏற்றத்தாழ்வுகள், நம் தாழ்நிலக்கண்ணோட்டங்களில் பிடிபடுவதில்லை. சற்று உயரே சென்று கீழ்நோக்கினால் சிக்கலும், மூலமும், தீர்வும் நம் ஒற்றைப்புள்ளியில் குவியும்.


பல்லாயிர வருட வளர்ச்சியில் நாம் வகுத்த 'இருப்போர் vs இல்லாதோர்' வாழிடங்களும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன, தம் வண்ணம் மாறாமல்.


இவை இரண்டுக்கும் உள்ள இடைவெளி, வேற்றுமை, இட்டு நிரப்ப முடியாத ஒன்று அல்லவே?


இன்று இந்திய வானில் தாவிச்செல்லவிருக்கும் 'தகவல் தொடர்பு தானியங்கி செயற்கைக்கோள்' இந்த இடைவெளியை படம்பிடித்து காட்டட்டும், இட்டு நிரப்பட்டும்; நிலவின் கற்களை பொறுக்கி வரும் ஆவலும், செவ்வாய் கிரக உயிரிகளை இனம் காணும் அவசரமும் சற்றே பசியோடு இளைப்பாறட்டும்...


வாழ்வே தவம்.


தவமாவது அன்பு.


அன்பு அடைக்கட்டும் இந்த இடைவெளியை, ஒவ்வொரு இதயமாய் இட்டு நிரப்பி...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்