வழுக்கைத்தலைகளில் முடி வளர அமேசான் காடுகளிலிருந்து அரியவகை மூலிகை எண்ணெய்களை கொண்டுவந்து கூவிக்கூவி விற்கிறார்கள் பேராசைப்பெருவணிக நிறுவனங்கள், ஊடகங்கள் வழியே உலகெங்கும். இவர்களுக்காக அரும்பாடுபட்டு அமேசான் காடுகளில் பயிர் வளர்த்த இயற்கை இன்று அங்கு தன் மயிரிழந்து வழுக்கையாகி நிற்பதுகூட இவர்கள் கண்களுக்கு தெரியவில்லை. இழந்த மயிரை திரும்ப வளர்க்க இந்தக்காடுகள் கூட அந்த மூலிகை எண்ணெய்களை வாங்கித்தேய்த்தாகவேண்டும்போல. தேங்காய் எண்ணெய் என்றால் என்ன என்றே தெரியாது ஒரு சிக்குப்பிடித்த சமூகமே கண்ட கண்ட வேதிப்பொருட்களால் ஆன, தலைமயிரில் ஒட்டாத எண்ணெய், கையில் பிசுக்கேற்றாத எண்ணெய், குளிர்காலத்தில் உறையாத எண்ணெய், எண்ணெய் வாசனையற்ற எண்ணெய் என எண்ணெயே இல்லாத எண்ணைகளை தேங்காய் எண்ணெய் என்ற போர்வையில் வெளிச்சம்போட்டுக்காட்டும் பெருவணிகத்தை நம்பி வாங்கி தலையில் தேய்த்து, இருந்ததும் உருக்குலைந்துபோய், ஈறும் பேனும் விளையாடும் தலைமயிரை மேலும் வேதிப்பொருட்களாலான ஷாம்ப்பூ போட்டு கண்டிஷனிங் செய்து தலை குளித்து கண்ணாடியில் பார்த்தால் மயிரே போச்சி, இட்ஸ் கான், காயிந்தே என பல மொழிகளில் புலம்ப...