முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாராவது என்னை காப்பாத்துங்க!!!

நாடு இருக்கும் நிலைமையில் நட்புக்கு கூட (அரசியல் கட்சி) வர்ணபேதம் உண்டாவது கவலை அளிக்கிறது. உறவுக்கும் கூட அதுவே...

சாகாகாரம் வளர்த்த நிலப்பரப்பு இன்று சிந்தனையிலும் சகிப்புத்தன்மையற்று மாறிக்கொண்டிருக்கிறது.

மாற்றான் தோட்ட மல்லிகைகளும், We agree to disagree, we remain friends with differences as before நிலைப்பாடுகளும் வலுவிழந்து போகின்றன.

சில நாட்களுக்குமுன் ஒரு புகைப்படம் எடுத்தேன். எனது ஒரு ஆழ்ந்த கவலையை / தீர்வை வெளிப்படுத்தும் வண்ணம் அந்த புகைப்படத்தில் ஒரு சிந்தனையை விதைத்து எனது தொடர்பு வட்டத்துள் பகிர்ந்தேன்.

அவர்கள் அனைவரும் பல ஆண்டு நட்புகள், அரசியல் சாராத என் நிலைப்பாடு நன்கு அறிந்த நட்புகள். 

நான் அனுப்பிய இந்த புகைப்படத்தில் தொடங்குகிறது அவர்களுள் சிலருடன் ஒரு உரையாடல்.

Me: குடிமக்கள் பதிவேடு (NCR) ஏன் நமது கால்நடைகளுக்கும் கொண்டுவரக்கூடாது? வந்தால் என்ன ஆகும்?

"NRC காங்கிரஸ் கொண்டுவந்தது. ஜெர்சி பசுக்களும் காங்கிரஸ் கொண்டுவந்தது. காங்கிரஸ் 60 ஆண்டுகளாய் நாட்டை பாழ்படுத்திக்கொண்டிருக்கையில் ஏன் யாரும் இதைப்பற்றி வாயே திறக்கவில்லை?"

"நாங்களாவது இப்போது மாடுகளை வெட்டிலிருந்து காப்பாற்றுகிறோம். ஆனால் எங்களுக்கு நாடு தந்த பட்டப்பெயர் பக்தாள்ஸ் அல்லது சங்கிகள்!

கோசாலை நடத்தும் நட்புகளிடம் கேட்டுப்பாரேன். நாட்டு மாடுகளை உயிர் தப்ப வைத்து, காப்பாற்றி வளர்த்து இனப்பெருக்கம் செய்வது எவ்வளவு கடினம் என்று புரியும்."


Me: Yeah. Understood. It is the need of the hour to identify non desi cattle and maybe govt buys them from the care givers and gifts to poorer foreign countries. I a.m apolitical and serious about this da.

When cattle tenders have no alternative other than selling to govt, then they start tending them well and maybe govt subsidies the feed. This WOULD be a game changer and may even soar up the vote bank.

Politicos must realize people's wish: Enough finger pointing, it never ends. Give us workable solutions. Human registry can wait because nobody is culling so called useless human stock yet...

"ஒரு சாதாரண ப்ராஜக்ட் கூட தொடங்கிய ஆறு மாதத்திலேயே கவலைக்கிடமான நிலைக்கு போகலாம். ஒரு வருடத்தில் அதிலிருந்து மீளலாம். இது இயல்பாய் நடப்பது. காங்கிரஸ் ஆண்ட ஒரு நாடு... மீண்டு நலம் பெற நிறைய காலம் ஆகும்!. ஏழை நாடுகளுக்கு உதவி செய்வதை நம்நாடு பல ஆண்டுகளாகவே செய்துகொண்டுதான் இருக்கிறது"

குடிமக்கள் பதிவேடு இதைவிட பெரிய செயல் அல்லவா. மற்ற நாடுகளுக்கு நிதி உதவி செய்ய நமக்கு விருப்பமில்லாதபோது அவர்களது மக்களை மட்டும் ஏன் நாம் நமது நிதி கொண்டு உணவு, உறைவிடம், வாழ்வியல் வசதிகள் செய்து தரவேண்டும்?"

Me: I wish you / your friends serious about desi cows push this up all the way for some tangible solution; lynchings, acrimony, all these will come down drastically.

U.R. Ananthamoorthy, a great Indian Writer had written a famous short story it goes like this; a young guy meets a young beautiful concubine of an old zealot. They become friends. Just before leaving, he tells her that her way of life is shameful, 'this is not the way to live!'. 

Next day she kills herself.

Bitten by guilt, he exprrsses helplessness to his mentor who rounds him up with this golden nugget of wisdom; 'you strode in and took away her reason for existence, WITHOUT GIVING HER A NEW REASON TO LIVE. What did you expect her to do?'

Me: Hey, we don't drive just by focusing only on the rear view mirror, right? Long road ahead, party names and ideologies will keep changing. Let us focus on the solution...

Me: I think we need to come out of the problem mindset to bring forth meaningful changes. I understand that nobody can be perfect. This govt intends to bring in lot of good changes. Why waste energy elsewhere?

"நம் நாட்டில் இந்த புதிய அரசு செயல்படுத்திவரும் பல சரியான திட்டங்களைப்பற்றி அறிஞர்கள் எழுதிய ஏராளமான செய்திகள் உள்ளன"

"நாம் நமது கண்ணாடியை மாற்றிக்கொண்டாலே பார்வை தெளிவாகிவிடும்"

"நேரில் நேருவைப்பற்றி பேசுவோம்"

Me: Think for yourself. I am not political. I don't want to be drawn into any debate on these lines as I can think of only 'what I can do to change some bad to good' :-)

"நான் தெளிவாத்தான் இருக்கேன்! யாருமே குறைகளற்ற மனிதர்கள் இல்லை. ஆனால் நான் பயணம் செய்யும் பாதை நன்மை தரும் என்ற தெளிவு எனக்கு இருக்கிறது"

Me: I know. That is why I suggested a practical way forward. On the contrary, govt is mullling insemination only using non desi bulls, in the guise of saving them from culling. That is not good. Maybe we can discuss this in person

"சரி"

-----

நம் தேசிய பசுக்களை காப்பாற்ற என்ன செய்யலாம் என்கிற தொடக்கக்கேள்வி, இன்னும் கேள்வியாகவே நிற்கிறது. பசுக்களை அன்னைகளாக பூஜிக்கும் நாம் அவற்றை காக்க என்ன செய்யவேண்டும் என்பதை கட்சிகளோ மதங்களோ வரையறுக்க இயலாது! 

இன்றைய Reuters செய்தி நிறுவனத்தில் கண்ட ஒரு கவலை தரும் அமெரிக்க செய்தியின் சாரம்:

"நெம்ப வருசமா திக்கு ப்ரென்ட்ஸ்ங்க! அதுனாலதான் பக்கம் பக்கமா வூடு கட்டுனோம். பாருங்க காம்பவுண்டு கூட இல்லாம இருந்ததுங்க. அஞ்சாறு வருசமா ட்ரம்ப்பு வந்தாலும் வந்தாரு, ஒரே அக்கப்போறா போச்சுங்க. எனக்கு ட்ரம்ப்போட செயல்பாடுகள் புடிக்கலன்னா என்ன தெய்வக்குத்தமா? சொல்லக்கூடாதா?

கரைச்சல் தாங்கமுடிலீங்க! மனசு ஒடம்பெல்லாம் நொந்துபோயி காம்பவுண்டையும் கட்டிப்புட்டோம். ஆனாலும் விரோதி மாதிரி பாக்குற பக்கத்து வீட்டுக்காரனோட எத்தன நாளைக்குதான் மல்லுக்கட்டுறது? பேசாத விட்ட வித்துப்புட்டு எங்கனாச்சும் நகரலாமுன்னாலும் ரெண்டு சிக்கலுங்க; மார்க்கெட்டு டல்லு, நட்டத்திலதான் விக்கணும். இது கூட பரவால்லீங்க. வீடு புதுசா வாங்குற எடத்திலயும் பக்கத்து வீட்டுக்காரனுக்கு ட்ரம்ப்புதான் புடிக்கும்ன்னா...அவ்வ்வ்வ்"!

இது நம் நாட்டிலும் விரைவில் அரங்கேறும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்