மனதில் வேண்டுதலையும்
முதுகில் மரக்கன்றுகளையும்
சுமந்து சுமந்து
கனவையும் நனவையும்
ஊடறுக்கும் சாலைகளில்
ஊடறுக்கும் சாலைகளில்
கனவையும் நனவையும்
ஊடறுக்கும் சாலைகளில்
ஊடறுக்கும் சாலைகளில்
அலைந்து திரிகின்றேன்
வருடங்கள் எத்தனை
(என) மறந்த பின்பும்.
இக்கவிதையை வாசிப்பவர்கள்
ஒன்றை மட்டும்
நினைவிலிறுத்த வேண்டுகிறேன்:
உங்கள் வருங்கால
சந்ததியின் காதுகளில்
சிட்டுக்குருவிகளின் சிறகசைப்பு
சுமந்துவரும் சிறுகதையொன்று...
வெகுதொலைவிலுள்ள ஒரு நிலப்பரப்பில்,
இயற்கைக்கு (வெகு) அருகில்
இருக்கும் பெரும்பரப்பில்,
கனவுகளெல்லாம் நனவாகும்
அந்நிலப்பரப்பில்
அவை கண்டு களித்த
கதையாகவும் இருக்கலாம்,
அது இதுவாகவுமிருக்கலாம்:
"மரமாக மாறிப்போக
தவமாய் தவமிருந்த
மனிதன் ஒருவன்
இந்த நிலப்பரப்பில்
அன்று இருந்தான்"...
கருத்துகள்
கருத்துரையிடுக