பாண்டியம்மா ரெஃபரீய அட்ச்சி தூக்கி!!!
பிகிலு பறக்கும் என நினைத்து தியேட்டருக்குள் நுழைந்ததும் எதுவோ வித்தியாசமாயிருக்கேன்னு உணர்வு சொல்ல, திரும்பி நோட்டம் விட்டேன்; அங்கங்கே காலி இருக்கைகள்!
லேட்டா வருவாங்க போல என்று நினைத்துக்கொண்டேன். யாரும் வரவில்லை.
தளபதியின் பிரம்மாண்டமான படம், ஏ
ஆர்.ஆரின் இசை, அட்லீயின் டைரக்ஷன். மூன்றாம் நாளே காலி இருக்கைகள்...
விளையாட்டு பற்றிய நல்ல படம். விஜய்க்குள் ஒளிந்திருக்கும் நல்ல நடிப்பை வெளிக்கொண்டுவந்ததற்கு அட்லீக்கு தாராளமாய் நன்றி சொல்லலாம். மாணிக் பாஷாவுக்கும் வேலு நாயக்கருக்குக்கும் உள்ள இடைவெளியில் ராயப்பன் இஸ் எ டவரிங் பெர்ஃபார்மன்ஸ் என் இனிய தமிழ் மக்களே!
நயன்தாரா, அழகாய் இருக்கிறார், வயது ஏறுவது தெரிந்தாலும்.
இந்திப்பட உலகை தன் முதல் படத்திலேயே திரும்பிப்பார்க்கவைத்து உச்சம் தொட்ட நடிகர் ஒருவரை பம்மாத்து வில்லனாக்கியது,
காக்கி உடைக்குள் ரவுடிகள், மாணவர் அடையாள அட்டைகளோடு ரவுடிகள் என வசனங்களால் வன்மம் சேர்த்த காலம் போய் இவற்றை காட்சிப்படுத்தியது,
லாஜிக் ஓட்டைகள் நமது பெருநகர மைய சாலையின் மூடியில்லாத பாதாள சாக்கடை த்வாரம் போல அங்கங்கே எட்டிப்பார்ப்பது,
பெண்களை லிபரேட் செய்யும் மக்களின் வண்ணம் vs அடிமைப்படுத்தும் மக்களின் வண்ணம் போன்ற க்ளிஷேக்கள்,
அட்லீ தனக்குள் ஒரு ப.ரஞ்சித் இருக்கிறார் என நம்புவது,
இரு மாநில அணிகளின் இடையேயான உதைபந்தாட்ட கோல் டிஸ்ப்ளேயில் கோல் எண்ணிக்கை மாறுவதற்கெல்லாம் ஏ.ஆர.ரஹ்மான் ட்யூன் போட்டிருப்பது (ஹேய் யாராவது அந்த ம்யூசிக்க கொஞ்சம் நிறுத்துங்கப்பா என்று கெஞ்சவைக்கிறது படம் முழுதும் இடைவெளியின்றி வெளுக்கும் பிண்ணனி இசை)
பெனால்டி கிக்குக்கு மட்டும் மெயின் லெவனில் இல்லாத காயத்ரி
என பல காட்சியமைப்புகள் கருத்தை உறுத்தினாலும், 'பிகிலு, கப்பு முக்கியம் பிகிலு,..' என கர கர பாசக்குரலில் ராயப்பன் ஜெயித்துவிட்டார்!
இதற்காக மட்டுமே பார்க்கவேண்டிய படம் :-)
கருத்துகள்
கருத்துரையிடுக