இறை இருக்கும் இடம் எது? கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்ற மாதிரி நழுவல்கள் இன்றி, சமரசமின்றி நேர்மையாய் அலசுவோமா? அந்தரத்தில் ஊஞ்சலாடும் நட்சத்திரக்கூட்டங்களுள் ஒன்றான நம் புவியில் மட்டும் இறை இருக்கிறது என்று கொண்டால் மற்ற நட்சத்திரங்களை காப்பது யார்? அந்த இறை எங்கு உறையும்? இந்த கூற்றை தொடர்ந்து சிந்தித்தால் இறை நம் புவிக்குள் மட்டுமே அடங்கியிருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகும். அள்ளித்தெளித்த பல கோடி வைரங்களாய் உலகங்கள் பரவிக்கிடக்கும் பால் வெளிகளில், அவற்றை தழுவிப்போர்த்தியிருக்கும் காரிருளில் இன்னாருக்கு இன்ன இடம், இந்த இடம் மட்டுமே என்ற ஆதார விதிகளை வகுத்த இறை, இவை எல்லாவற்றையும் காக்கும் இறை, இதை விட்டு வெளியிலிருந்து, விலகி இருந்து காக்க வாய்ப்பில்லை. அப்படியானால் இறை எங்குதான் இருக்கிறது? எங்குதான் இருக்கிறது இறை? விடை அறிய, நாம் இன்னொரு வினாவுக்கு விடை தேடவேண்டியிருக்கிறது. "அறிவியலும் ஆன்மீகமும் இணையும் புள்ளி எது"? ஆன்மீகம் நம் உள்ளில் இருந்து வெளிப்பட்டு நம் உணர்வுகளின் வழி, சிந்தனையின் வழி அண்டவெளியெங்கும் பரவியோடி...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!