உப்பு வாங்கித்தந்த விடுதலை.
உடுப்பு வாங்கித்தந்த விடுதலை.
உதிரம் வாங்கித்தந்த விடுதலை.
உண்மை வாங்கித்தந்த விடுதலை.
இன்று உள்ளங்கையகல காகிதத்தில் அடங்கி, சற்றே பெரிதாய் காற்றில் பறந்து, நம் எல்லைகளில் காவல் காக்கும் மக்கள் உடல் மீது கிடந்து, நம் சாலைகளில் மக்கள் காவலர்களின் வாகனங்களில் படபடத்து...
இதிபோன்ற தருணங்களை சடுதியில் மறந்து கடந்து...
மீண்டுமொரு விடுதலை நாளில் கொடியேற்றி இனிப்பு பகிர்ந்து விடுமுறை பெருநுகர்வுக்கு நம் தேசமே ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது.
தேசியக்கொடி நம் ஆன்மாவின் ஆடை.
பசுமை வனங்கள்
வெளுத்த மனங்கள்
சிவந்த பழமாய் இறை சிந்தனை என நம் கால் முதல் தலை வரை சுற்றி நிற்கும் இக்கொடியை இன்று ஒரு நாள் மட்டுமாவது நம்முள் உணர்ந்தாலே போதும், நமக்கு நாமே உண்டாக்கிக்கொண்ட பசுமை, வெண்மை, சிவந்த சிக்கல்கள் தீரும்.
விவேகாநந்தர் தேடியது ஏதோ 150 இந்திய இளைஞர்கள் அல்ல. ஆன்மாவின் மானத்தை கொடியால் காக்கும் 150 இளைஞர்கள்.
ஏனோ இவர்கள் நம் கண்களில் இன்றுவரை எளிதில் தென்படுவதே இல்லை.
வாழிய பாரதம்.
கருத்துகள்
கருத்துரையிடுக