முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இன்னும் நீங்க வாங்கலயா!

  மூக்கு க்ளிப்பு! ஒரு ஊருல பரம்பர பரம்பரயா அம்புட்டு சனங்களும் மூக்குல கிளிப்பு மாட்டிகிட்டு வாழ்ந்துதாம். பொறந்ததலந்து சாயறவரைக்கும். ஊரு நாத்தம் அப்புடி... ஆரம்பத்துல கம்பிய வளச்சு கிளிப்பா பயன்படுத்த, அது மூக்கில குத்தி செப்டிக்காயி கொஞ்சம் மக்க மாண்டாக. ஒடனே ஊர் பெருசுக கூடி 'ஆபத்தில்லாத கிளிப்பு வோணும்'னு தீர்ப்ப எழுதி, பெருசுங்களுக்கு வேண்டப்பட்ட வியாபாரிங்கள தரச்சொன்னாக. மரம், செம்புன்னு என்னென்னமோ ட்ரை பண்ணி ப்ளாஸ்டிக்கு பெஸ்ட்டுன்னு முடிவு பண்ண அது ஆச்சு அம்பது வருசம். நாத்தத்துலயே பொறந்தவங்களுக்கு ஒரு கட்டத்துல நாத்தம்னா என்னான்னே தெரியாம்ப்போயி ஆனாலும்  பளக்க தோசத்துல கிளிப்ப மாட்டிகிட்டு சுத்துனாய்ங்க. இன்னொரு இருவது வருசம் செண்டு தொலவுலேந்து ஒரு பெரியவரு வந்தாரு. அவரு மூக்கில கிளிப்பு இல்ல. இந்த ஊரை சுத்திப்பாக்க வத்தவரு எல்லையில மூக்க பொத்தி நிக்க, வரவேத்த உள்ளூர் பெருசுங்க சால்வ போத்துற சாக்குல அவருக்கும் கிளிப்பு ஒண்ண மாட்டிவுட, அவரு சொஸ்தாயி, 'இன்னாபா இது?' ங்கவும், பெருசுங்கல்லாம் தல புராண மகிமய அள்ளி வுட்டுதுங்க. அ

நழுவும் மொழி - இவர் யாரென்று தெரிகிறதா!

" அந்தியிறங்கி ஒருவருக்கொருவர் முகம் மறையுமளவிற்கு அறையிருண்டு விட்டது. விளக்கைப் போடத் தோன்றவில்லை. பேசிக் கொண்டிருந்தோம். இருள் அடர அடர அது படிப்படியாக எங்கள் பேச்சைத்தான் சுழற்றிக் கொண்டது. எப்போது மௌனமானோம? ஏதோ ஒரு உள் நிறைவின் பொங்கலில் எங்களைப் பூரா வியாபித்துக் கொண்ட இருளின் இதவில் ஒரு சின்ன சம்புடத்தில் உருளும் இரு ஜின்டான் மாத்திரைகள் போல. ஒரே கோசத்தில் இரண்டு உயிர்த்தாதுக்கள் போல. கூடில் இரு குஞ்சுகள் போல் எங்கள் உள்ளங்களின் நெருக்கத்தில் ஒரு தனிக் கதகதப்பில் அது தந்த மகுதான்மத்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தோம். இந்நிலை எங்கள் நட்பின் தன்மையால் அல்ல. இது அந்த சமயத்தின் மஹிமை. சிருட்டியின் ஆயாத நூற்பில் இரண்டு இழைகளாக இழைந்து போய்விட்டோம். அல்லது அது தன் கோலத்தில எங்களை இழைத்துவிட்டது என்று சொல்லட்டுமா? " 1984 ஆம் ஆண்டு. கோடை விடுமுறை. கிராமத்து வீடு. மதியம் வரும் ஒற்றை நாளிதழ், தினமணி. ஞாயிறானால் மகிழ்வாக தயாராவோம்; தினமணியில் 'கதிர்' வரும் நாள். பதின்ம வயதில் அந்த ஞாயிறு இதழின் சில பக்கங்களை, சக வயது உறவுகளுக்கு முன்பு

சங்கீத ஜாதிமுல்லை

#onemoresong பார்வையற்ற பாடகன். அவனிடம் மையலான கொலுசுப்பெண். அவள் கொலுசொலி அவன் வாழ்வின் ஒலி, தனித்துக்கேட்கும் அவன் காதில். வில்லி அம்மா; வில்லன் சிங்கப்பூர் மாப்பிள்ளை. பாடகனை வில்லன் நெருப்பில் தள்ள, சலங்கை காப்பாற்ற, காதலர்கள் ஊரை விட்டே ஓடிவிடுகிறார்கள். வேறூரில் வாழ்வு சிறக்க, ஆற்றங்கரையில் மோகனமாய் காதலர்கள். கஞ்சா கூட்டம் அவளை கடத்த, ஊர்க்காரன் மீட்டு வீடு சேர்க்கிறான். வீடு ஒரு செட்டியாருக்கு அவளை 'கட்டி' வைக்கிறது. பாடகனுக்கு ஒரு வசதியான குரு கிட்ட, இசை வளர்கிறது. பார்வையும் சிகிச்சையினால் கிட்டுகிறது. சலங்கையை தேடுகிறான், பாடும் ஊரெல்லாம், இடமெல்லாம். காணவில்லையே. இன்னும் ஒரே ஒரு கச்சேரி. அதன் பின் பாடப்போவதில்லை என அவள் ஊரின் அழைப்பை ஏற்று வருகிறான். கொலுசு வீட்டிலேயே விருந்தினனாக. கொலுசு அவனை பார்த்த நொடியிலிருந்து மௌனமாய் அதிர்கிறது, அலறுகிறது.  கோவிலில் கச்சேரி. மேடைக்கு எதிர்மேடையில் கொலுசும் செட்டியாரும். வழக்கம் போல அங்கும் பாடல்வழியே அவளை தேடுகிறான். பாடலின் ஈர்ப்பில் கொலுசின் தளைகள் உடைய, கொலுசுக்கால் தா

Mortals of Meluha / நாம் திருநீலகண்டமல்ல!

#WAKEUPiNDIA! அவசரம்! ஆபத்து! ஆகாரம் விஷம் குலநாசதே!! If You kill 'seeds' in the labs, it KILLS YOU BACK! விநாச காலே விபரீத நாஷ்டா! 'வச்சு செய்யும்' விஷ விதைகள்!  The top six diseases in the below 'healing ad' are fertility related. Diabetics and Hypertension are pushed back! ,

பேய்மழை, நிற்கவில்லை இன்னும்.

ஒரு பெருமழைக்காலத்தின் முதல் நாளில் மரித்துப்போனான். அதற்கு முந்தைய நாட்கள் விரைவாகவே, அடர்த்தியான வேலைகள் கொண்டதாகவே அமைத்துக்கொண்டான். பேர் தெரிந்த தெரியாத செடி கொடிகள் புல் பூண்டுகள் குட்டை மரங்கள் நெட்டை மரங்கள், வாத்துகள், கோழிகள், புறாக்கள், ஆடுகள், மாடுகள், கிளிகள், அணில்கள்... காக்கை, குருவி, வண்ணப்பூச்சி, செம்போத்து, மயில், மரங்கொத்தி, இரட்டைவால் குருவி, தவிட்டுக்குருவி, தேன்சிட்டு, கொசுத்தேனி, கொட்டும் தேனி, மரவட்டை, வெட்டுக்கிளி, இலையுண்ணும் கம்பளிப்பூச்சி, பழந்திண்ணி வவ்வால், கும்பிடு பூச்சி, தாழப்பறந்த தட்டான்கள், கறுப்பெறும்புகள், வண்டுகள் என தன் வாழ்வை மகிழ்வித்த அனைத்துயிரிடமும் உரையாடிய வண்ணமே அப்பொழுதுகள் கழிந்தன.  'நீங்கள் பறந்து, ஊர்ந்த காடுகளை நான் காணுவது சாத்தியமில்லை. உங்கள் இறகின் நிழல் பட்ட மலைகள் அனைத்தையும் நான் கண்டிருக்க வாய்ப்பில்லை. உங்கள் விதைகள் பயணம் செய்த பாதைகளை நான் கற்பனையில்கூட பார்த்ததில்லை... மரித்தபின் புதைக்கச்சொல்லியுள்ளேன். என் இனத்தில் சிலராவது, எனது ஆன்மாவிற்கு அருகிலிருப்பவர்களாவது அதை நிறைவேற்றுவார்கள் என

போகுமிடம் எங்கேப்பா?

காலையில் சாலை மரங்களோடு பேசிக்கொண்டே நீரூற்றிக்கொண்டிருந்தேன். எதிர்வீட்டு நண்பர் யாரிடமோ தான் உதவ இயலாது என்பதை திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். உதவியென்று யார் கேட்டாலும் மறுக்காதவராச்சே...என எண்ணி திரும்புமுன் அந்தக்குரல் அழைத்தது, 'சார்...'. திரும்பினேன். எ.வீ. நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மனிதர் இப்போது என்னிடம். தூக்கமிழந்த கண்கள், உயிரோற்றமற்ற முகம், மத்திய வயது, தயங்கிய குரலில் மீண்டும் அழைத்தார், 'சார்...' 'என்ன வேணுங்க?' என்றேன். 'சார், என்னை கொஞ்சம் வீட்டில கொண்டு விட முடியுமா?' உடல்நலம் சரியில்லாதவர் என உள்ளுணர்வு சொல்லியது. 'அட்ரஸ் சொல்லுங்க. இந்த ஏரியால நான் உங்கள பாத்ததில்லையே...' என நான் வினவ அவரது பதில் முகத்தில் அறைந்தது; 'வீடு அட்ரஸ் தெரியல சார்'. குடித்திருக்கிறார் என்பதை குடிப்பவர்களும், குடிப்பவர்களோடு பழக்கம் இருப்பவர்களும் நொடியில் அறிந்திருப்பார்கள்... எனக்கு தெரியாது போயிற்று. 'இல்லைங்க, அட்ரஸ் தெரியலன்னா நான் உதவி செய்ய முடியாதே' என்றேன். கண்

நில்லென்று சொல்ல யாருமில்லை...

வேடன். விலங்கு வேட்டையாடி, காட்டுப்பூ தலையில் சூடி, அருவி நீர் வாயில் நிரப்பி, கானகத்துள் வாழ்வாங்கு வாழ்பவன். இறையென்று அந்தணர் ஒருவர் வணங்கும் சிலை கண்டான், அவனறியா பக்தி கொண்டான். எச்சில் நீர் உமிழ்ந்து இறையின் சிரம் துடைத்து தன் தலைப்பூவை இறைக்கு சூட்டி, தான் உண்ட மாமிசத்தை பேரன்போடு படைத்து, செல்கிறான். அந்தணன் வருகிறான், கண்டதும் மருள்கிறான். காட்டுவாசி மூடன் எவன் என தேடி சலிக்கிறான். தன் வேத விதிப்படி இறை தீட்டு கழித்து பூசித்து நிம்மதியாய் நீங்குகிறான். மாமிசமும் மரக்கறியும் மாறி மாறி உண்ட இறை, அந்தணன் கனவில் 'கோபம் வேண்டாம். நாளை நிகழ்வதை பார்' என்று மறைகிறது. அந்தணன் முன்னரே வந்து ஒளிந்து நோக்க, வேடன் வருகிறான்.  இறை கண்ணில் குருதி கண்டு பதறி கானகத்திடம் வேண்டி பச்சிலை பெற்று (மனிதர்கள் மட்டுமே உடைத்துப்பறிப்பர். வேடுவர் வேண்டிப்பெறுவர்...) இறை கண்ணில் பிழிய... உறைய மறுக்குது குருதி. அம்பு ஒன்றை உருவி நொடியில் இளநுங்கு சுளை போல் தன் ஒரு கண்ணை விடுவித்தெடுத்து இறை கண்ணில் அப்ப, நிற்கிறது குருதி. தொடர்கிறது இன்னொரு கண்ணில்! வேடன