முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இது புத்தாண்டு வாழ்த்து அல்ல...

ஒற்றை நாளில் தொடங்கி ஒரே நாளில் முடிந்துவிடும் 'ஒரு நாள் கூத்து', புத்தாண்டு, நம்மில் பலருக்கு.  என்ன கழிந்தது 2017 இல், நாள்காட்டியின் தாள்கள் தவிர? முந்தைய வருடங்கள் கழிந்ததும் அதேபோல்தானே. ஒரு மரமாவது நட்டிருப்போமா வாழ்நாளில் இதுவரையில்? ஒவ்வொரு விடியலும் ஒரு புதிய உலகில் என்ற நியதியில், புதிதாய் செய்வதற்கு ஒன்றுமில்லை என, நாம் மட்டும்பழைய மனிதராய்... ஒரு நல்ல நாள் பார்த்தாவது நாமும் புதியவராய் மாறுவோமே. புதிய வருடம், புதிய மாதம், புது நாள், ஏன்? இந்த நாள்...எந்த நாளும் நல்ல நாள்தானே? தவறுகளை சரி செய்து, தனி மனித நன்மையிலிருந்து பொது நன்மை வரை உண்மையாய் சிந்தித்து நல்லதை மட்டுமே செய்ய இப்போதிலிருந்து உண்மையாய் முயல்வோம். நாள்காட்டியில் தாள்கள் கிழிவது எப்போதும் நிற்காது! ''மண், மரம், மனிதம் தொட்டு மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும், இந்த நொடியிலிருந்து'  என நட்புகள் அனைவருக்கும் இந்தச்சிறு விண்ணப்பம். இன்று மட்டுமல்ல, ஒவ்வொரு விடியலிலும். மரம் நடுவோம், நிறுத்தாமல்; பூமியின் காயங்களை ஆற்ற, நம் வாழ்விற்கு அர்த்தம் சேர்க்க.

தேவதைகள் பூப்பறிப்பதில்லை

தேவதைகள் பூப்பறிப்பதில்லை! நெடுங்காலம் முன்பு மரத்திலிருந்து இறங்கி, வெயிலுக்கும் மழைக்கும் மரத்தடியில் அண்டிப்பிழைத்த கூட்டம் ஒன்று கல் அறைகள் கட்டி பதுங்கப்பழகியபின், வேரொன்று கல்லருகில் வந்தாலும் கோடரி தூக்கி சிதைத்து வேரறுத்து...பெருவிசை வாகனம் செய்து, இன்னும் விசை கூட்டி ஓட்டுவதற்காக அவை ஓடுமிடமெல்லாம் காடறுத்து மண் பெயர்த்து தார் பூசி மெழுகவும் பெருநகரம் உருவாச்சாம்... பிட்யுமெனும் தார் பூச்சும் மூச்சு முட்ட, விரையும் பெருவிசை வாகனங்களில் அரைபட்டு, சிறுவிசை மனிதரிடம் மிதிபட்டு, வெயில் மழை காற்று குளிரில் ஒதுங்க வழியின்றி, கதற மொழியின்றி சாலைகள் மௌனமாய் ஓலமிட்டு ஒடுங்கிப்போயின. கந்தலாய், நெருடலாய் நாட்கள் நகர, நொந்துபோன தார் சாலைகளின் அடியிலிருந்து பெயர்ந்த மண் துகள்கள் (காற்று மழை உதவ) தப்பிச்சென்றது தந்த நம்பிக்கையில், நகரத்தின் பிடியிலிருந்து இந்த நொடியில் கூட திமிறி வெளியேறத்துடிக்கும் மண்தரை...  நகர எல்லை தாண்டியும் அதைத்துரத்தும் தார்ப்பூச்சு...  அதனின்றும் அவை தப்பியோடி தஞ்சம் புகும் இடமெல்லாம் மலர் சுமந்த மரங்கள்; இழுத்து அணைக்கும் வேர்களுடன

அருவி...லாட்டரி!

ஒரு கிராமம்.  300 வீடுகள்.  ஆண்டுதோறும் குறிப்பிட்ட ஒரு நாளில் ஒரு லாட்டரிப்போட்டி. அந்தப்போட்டி நடத்தினால் அந்த வருடம் அமோக விளைச்சல் என்ற நம்பிக்கை. ஊரில் உள்ள அத்தனை குடும்பங்களின் பெயர்களையும் துண்டுச்சீட்டுகளில் எழுதி ஒரு பெட்டியிலிட்டு, கை விட்டு துழாவி ஒரு சீட்டு எடுப்பர். எந்தக்குடும்ப பெயர் வருகிறதோ அவர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவரின் வீட்டை சீட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பர். பின்னர் அந்த வீட்டிலுள்ள அனைவரும் பேர் குலுக்கி சீட்டெடுத்து ஒருவரை முடிவு செய்வர். அவரைத்தவிர மற்ற அனைவரும் தப்பித்த மகிழ்ச்சியுடன் ஆளுக்கு ஒரு கல் பொறுக்கி, தேர்ந்தெடுக்கப்பட்டவரை கல்லாலடித்து...கொலை செய்வர்.  1948 இல் ஷிர்லி ஜாக்சன் எழுதிய, உலகை உலுக்கிய சிறுகதை இது. லாட்டரி 'அடித்திருக்கிறார்' அருவி இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்! வாழ்த்துக்கள். இன்னும் துணிச்சலாக நீங்கள் கதை அமைத்திருக்கலாம். நம் ரசிகர்கள் நிச்சயம் இன்னும் கொண்டாடியிருப்பார்கள்...நாம் எல்லோரும் ஒருவிதத்தில் அந்த லாட்டரி கதையில் துண்டுச்சீட்டிலிருந்து தப்பியவர்கள்தானே ப்ரோ! நம் சமூகத்தி

வெள்ளக்காரன்டா, தமிழன்டா!

வெள்ளக்கார தமிழன்டா! Steve Jobs ஐயும் Bill Gates ஐயும் கொண்டாடும் இதே I.T உலகத்தில் தனக்கு கிடைத்த வானளவு புகழையும் பணத்தையும் தக்கவைக்க எடுத்த முயற்சி, 'சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொண்டதாக' தப்பிப்போய் வணிக உலகிற்கு ஒரு எச்சரிக்கை சொல்லாடலை மட்டுமே தடமாய் விட்டுவிட்டு மறைய நேர்ந்த விந்தை மனிதர் Adam Osbourne, a thinker way ahead of the famous duo I mentioned earlier. பர்சனல் கம்ப்யூட்டர், ஆபீசில் மட்டும் இருந்தால் போதாது. நாம் செல்லுமிடமெல்லாம் அதையும் எளிதாக எடுத்துச்செல்லமுயன்றால் எவ்வளவு பயனுள்ளதாயிருக்கும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு அவர் வடிவமைத்தது Osbourne 1 எனப்பெயரிடப்பட்ட உலகின் முதல் போர்டபிள் கம்ப்யூட்டர், ஆண்டு 1981!! ஒரு விமான இருக்கையின் கீழே சமர்த்தாய் பொருந்தும் அளவில் குறைந்த விலையில் வடிவமைத்ததோடு நில்லாமல், அதனை இயக்குவதற்கு வேண்டிய மென்பொருட்களையும் (software) bundle செய்து தந்தார்; எழுதுவதற்கு ஒரு word star, கணக்கு போடுவதற்கு ஒரு super calc என (Gates உம் Jobs உம் இதே உத்தியை பின்னாளில் கையாண்டது வரலாறு).  Father of Portable Comp

டோர்லி for Sale!

டோர்லி, விற்பனைக்கு! வார்தா புயல் அனேகருக்கு தெரிந்திருக்கும். வார்தா என்றொரு பகுதி இந்தியாவில் இருக்கிறது தெரியுமா? பசுமைப்புரட்சியின் தொடர்விளைவுகளால் விவசாயிகள் தற்கொலைகள் அதிகம் நிகழ்ந்த பகுதி என சிலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் டோர்லி என்ற கிராமத்தை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அங்கு வாழ்ந்த 270 குடும்பங்களுக்கு சொந்தமான 800 ஏக்கர் விளைநிலம். கால்நடைகள், வண்டி வாகனங்கள், மரங்கள். மற்றும் தலைக்கு முப்பதாயிரம் கடன் என சுமார் அறுபது லட்சம் கடன். ஆண்டு 2006. மழை பொய்த்து, கடன் பட்டு, அரசுகள் கைவிட்டு மேலும் கடன்பட்டு நொந்த மக்கள் கூடி முடிவெடுத்தது; 'வித்துரலாம்'!. ஊரிலுள்ள கால்நடைகள், மரங்கள் மற்றும் வண்டிகள் அனைத்திலும் 'For Sale' என்று பெயிண்ட்டில் எழுதி, 'அனைத்து நிலங்களும் வீடுகளும் விற்பனைக்கு' என விளம்பரங்கள் வைத்தும் யாரும் (ஊடகங்களும்தான்) கண்டுகொள்ளவில்லை. ஜகமும் அழியவில்லை... டோர்லி என்ன விராத், அனுஷ்கா போல நமது அடுத்த வேளை சோற்றை முடிவுசெய்யும் அளவுக்கு பெயர்பெற்ற கிராமமா என்ன?!  அரசு உதவி கிட்டவேயில்லை;

கர்மா!

இளைஞன்,  அரசருக்கெல்லாம் அரசராக வேண்டியவன், தந்தையின் காமத்திற்காக அரசை துறக்கிறான். தந்தையின் மனம் கவர்ந்த மீனவப்பெண்ணின் தகப்பனோ 'அது மட்டும் போதாது - என் மகளின் மைந்தர்கள் அரசாள வேண்டுமென்றால் தேவ விரதனுக்கு குழந்தைகளே பிறக்கக்கூடாது என்கிறான். 'குழந்தைகள்  என்ன,எனக்கு தாம்பத்யமே வேண்டாம், நான் பிரம்மச்சரியன் ஆனேன். பெண்களை தொடேன், என் தகப்பனாய் மதித்து அவன் வாரிசுகள் யார் அரியணையில் அமர்ந்தாலும் அவர்களை பணிவேன், காப்பேன்' என்று விரதம் பூணுகிறான். தேவர்களும் வாழ்த்துகின்றனர். தகப்பனின் மகனுக்கு திருமண வயது வந்ததும், அவன் விருப்பப்பட்ட பெண்களை, அவர்களுக்கு சுயம்வரம் நடந்து கொண்டிருக்கும்போதே கவர்ந்து வருகிறான்.  மூன்று பெண்கள், சகோதரிகள், அரச குமாரிகள். அம்பை, அம்பிகை, அம்பாலிகை. அம்பையின் மனம் கவர்ந்த அரசன் சால்வன் தேவ விரதனை மறித்து போரிடுகிறான். சால்வன் தோற்கிறான். தேவ விரதன் மூவரையும் அழைத்துச்செல்கிறான். வழியில் அம்பை தன் மனம் கவர்ந்த சால்வனை பற்றி அவனிடம் கூறி சால்வனையே மணக்க விரும்புவதாக கூறுகிறாள். மற்ற இருவரையும் தன் தம்பிக்கு மணமுடித்து வைத்த

அகிம்சை, ஆவ்டோமேடிக், அமைதி!

1947. அமைதியாய் அகிம்சையால்  நள்ளிரவில் சுதந்திர இந்தியா பிறந்த அதே ஆண்டில்தான் உலகின் வன்முறை முகத்தை மாற்றிய, மாற்றிக்கொண்டே இருக்கும் ஒற்றைக்கண்டுபிடிப்பும்  நிகழ்ந்தது.  அவனுக்கு அப்போது வயது 28. அவனது பதின்பருவ கனவெல்லாம் விவசாயிகளுக்கு பயன்தரும் கருவிகள் செய்வது மட்டுமே. ஒரு போர் அதை மாற்றியது. பசுமை பற்றியே சிந்தித்திருந்தவனை தற்காப்பு பற்றி சிந்திக்கவைத்தது.  தற்காப்புக்கும் வன்முறைக்கும் வித்தியாசம் நூலிழை மட்டுமே என்பதை மறந்து அவன் கண்டுபிடித்தது எளிமையான வடிவமைப்பில், மலிவாய், உச்ச தரத்துடன், எந்த தட்பவெப்ப நிலையிலும் எவரும் சுலபமாய் பயன்படுத்தக்கூடிய வகையில், பராமரிப்பும் சுலபமாய், மலிவாய்...மொத்தத்தில் 'மாருதி காரும் இந்தியாவும்' போல ஒரு தொழில்நுட்பக்கருவி.  சேற்றில் சில ஆண்டுகள் புதைந்திருந்தாலும் மீட்டெடுத்த அடுத்த நொடியிலேயே பயன்படுத்தலாம், தரம், முதல் தரம்! அதுவரையில் குட்டி குட்டியாக நிகழ்ந்துவந்த உலகின் கொந்தளிப்புகளை இந்தக்கண்டுபிடிப்பு போராட்டங்களாய் நீட்டி, போராய் 'சுருக்கும்' வலிமையை தந்தது. இந்தக்கருவியின் End User