1947.
அமைதியாய் அகிம்சையால் நள்ளிரவில் சுதந்திர இந்தியா பிறந்த அதே ஆண்டில்தான் உலகின் வன்முறை முகத்தை மாற்றிய, மாற்றிக்கொண்டே இருக்கும் ஒற்றைக்கண்டுபிடிப்பும் நிகழ்ந்தது.
அவனுக்கு அப்போது வயது 28. அவனது பதின்பருவ கனவெல்லாம் விவசாயிகளுக்கு பயன்தரும் கருவிகள் செய்வது மட்டுமே. ஒரு போர் அதை மாற்றியது. பசுமை பற்றியே சிந்தித்திருந்தவனை தற்காப்பு பற்றி சிந்திக்கவைத்தது.
தற்காப்புக்கும் வன்முறைக்கும் வித்தியாசம் நூலிழை மட்டுமே என்பதை மறந்து அவன் கண்டுபிடித்தது எளிமையான வடிவமைப்பில், மலிவாய், உச்ச தரத்துடன், எந்த தட்பவெப்ப நிலையிலும் எவரும் சுலபமாய் பயன்படுத்தக்கூடிய வகையில், பராமரிப்பும் சுலபமாய், மலிவாய்...மொத்தத்தில் 'மாருதி காரும் இந்தியாவும்' போல ஒரு தொழில்நுட்பக்கருவி.
சேற்றில் சில ஆண்டுகள் புதைந்திருந்தாலும் மீட்டெடுத்த அடுத்த நொடியிலேயே பயன்படுத்தலாம், தரம், முதல் தரம்!
அதுவரையில் குட்டி குட்டியாக நிகழ்ந்துவந்த உலகின் கொந்தளிப்புகளை இந்தக்கண்டுபிடிப்பு போராட்டங்களாய் நீட்டி, போராய் 'சுருக்கும்' வலிமையை தந்தது.
இந்தக்கருவியின் End Users ஆண்டுக்கு இரண்டரை கோடி; ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது End users! ஒரு முறை சேவை பெற்றோர் பெரும்பேறு பெற்றோர் என அசுர வளர்ச்சி.
உலகில் இதுவரை வேறு எந்த கண்டுபிடிப்புகளுக்கும் கிட்டாத பெருமை இது!
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது; உலகின் மூலை முடுக்கெங்கும் உற்பத்தி, விற்பனை, பராமரிப்பு, 'பயனாளிகள்''.
ஏழ்மை நாடான ஆப்கானிஸ்தானில் கூட தாராளமாய் கிடைத்து, 'உலகத்திற்கே சொர்க்கம் காட்டும் அற்புதப்பயிரை' அறுவடைக்குப்பின் காத்திட பயன்பட்ட ஒற்றைக்கருவி! ஒரு கட்டு ஓப்பியம் பயிர், அருகில் நிறுத்திவைக்கப்பட்ட இக்கருவி, காத்தது பயிரை, அன்று.
ஏழ்மை நாடான ஆப்கானிஸ்தானில் கூட தாராளமாய் கிடைத்து, 'உலகத்திற்கே சொர்க்கம் காட்டும் அற்புதப்பயிரை' அறுவடைக்குப்பின் காத்திட பயன்பட்ட ஒற்றைக்கருவி! ஒரு கட்டு ஓப்பியம் பயிர், அருகில் நிறுத்திவைக்கப்பட்ட இக்கருவி, காத்தது பயிரை, அன்று.
Avtomatik Kalashnikov?
AK 47!
"நான் கண்டுபிடித்த தற்காப்புக்கருவி ஏன் கொலைக்கருவியானதென்றால்..." என தன் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்ட திரு. கலாஷ்னிகோவின் ஆள்காட்டி விரல் சுட்டியது அரசியல்வாதிகளை...
அவர் இறுதித்தூக்கம் வரையில் தினமும் இரவில் நிம்மதியாகவே தூங்கினாராம்...நம்புவோம்!
அணுகுண்டை கண்டுபிடித்தவரும் 'அமைதி'க்காகத்தானே கண்டுபிடித்தார்...
ஆமாம், ஒன்று (AK 47) பலரை உலகிலிருந்து தற்காத்து நொடியில் விடுவிக்கும். இன்னொன்று உலகையே பேரமைதியில் ஆழ்த்தும்!
கருத்துகள்
கருத்துரையிடுக