முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெள்ளக்காரன்டா, தமிழன்டா!



வெள்ளக்கார தமிழன்டா!

Steve Jobs ஐயும் Bill Gates ஐயும் கொண்டாடும் இதே I.T உலகத்தில் தனக்கு கிடைத்த வானளவு புகழையும் பணத்தையும் தக்கவைக்க எடுத்த முயற்சி, 'சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொண்டதாக' தப்பிப்போய் வணிக உலகிற்கு ஒரு எச்சரிக்கை சொல்லாடலை மட்டுமே தடமாய் விட்டுவிட்டு மறைய நேர்ந்த விந்தை மனிதர் Adam Osbourne, a thinker way ahead of the famous duo I mentioned earlier.

பர்சனல் கம்ப்யூட்டர், ஆபீசில் மட்டும் இருந்தால் போதாது. நாம் செல்லுமிடமெல்லாம் அதையும் எளிதாக எடுத்துச்செல்லமுயன்றால் எவ்வளவு பயனுள்ளதாயிருக்கும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு அவர் வடிவமைத்தது Osbourne 1 எனப்பெயரிடப்பட்ட உலகின் முதல் போர்டபிள் கம்ப்யூட்டர், ஆண்டு 1981!!

ஒரு விமான இருக்கையின் கீழே சமர்த்தாய் பொருந்தும் அளவில் குறைந்த விலையில் வடிவமைத்ததோடு நில்லாமல், அதனை இயக்குவதற்கு வேண்டிய மென்பொருட்களையும் (software) bundle செய்து தந்தார்; எழுதுவதற்கு ஒரு word star, கணக்கு போடுவதற்கு ஒரு super calc என (Gates உம் Jobs உம் இதே உத்தியை பின்னாளில் கையாண்டது வரலாறு). 

Father of Portable Computers என புகழப்பட்டு, 3 பணியாளர்களுடன் இவர் ஆரம்பித்த நிறுவனம் முதல் ஆண்டு இறுதியில் விற்பனையில் தொட்ட உயரம் 73 மி ல் லி ய ன் டாலர்கள், 3000 பணியாளர்கள்! மேலும் 5 மடங்கு கம்ப்யூட்டர்களுக்கு advance booking!!

தேவையை ஈடு செய்யுமளவுக்கு உற்பத்தியை உடனே பெருக்க அவரால் முடியவில்லை. முன்பதிவு ஆர்டர்கள் குறைந்தபாடில்லை. 


'ஆஹா! இவ்ளோ demand ஆ!!' என போட்டி நிறுவனங்கள் (Apple and IBM!) களமிறங்கி 'Cheaper and Better' கப்ப்யூட்டர்களை சந்தைப்படுத்தவும் (key attraction: bigger and better screen!), அவர்களையும் வெல்வேண்டுமே என்ற உந்துதலில், இன்னும் சிறப்பான மலிவான Osbourne Executive என்ற கம்ப்யூட்டரை தயாரித்து விற்பனையாளர்களுக்கு காட்டினார். அதன்பின் நடந்தது அவர் சற்றும் எதிர்பாராதது...

அவ்வளவு விற்பனையாளர்களும் 'எங்களுக்கு பழையது வேண்டாம், இதுதான் வேண்டும்' என கோரஸாக பழைய ஆர்டர்களை cancel செய்தனர். ஆனால் அதற்குள் பெருவாரியான Osbourne 1 களை உற்பத்தி செய்து முடித்திருந்ததால் அவற்றை கிடைத்த விலைக்கு விற்றும் வாங்க ஆட்கள் குறைந்து, புதிய கம்ப்யூட்டரை உற்பத்தி செய்ய பணம் புரட்டவும் முடியாமல் திவாலாக அவருக்கு ஆன காலம் வெறும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே!

மூத்த மகளை திருமணத்திற்கு தயார் செய்ய ஏராளமாய் செலவு செய்து, மாப்பிள்ளைகள் நான் நீ என்று போட்டி போடுகையில் அவளை விட இளமையான, அழகான இரண்டாவது மகளை அவர்கள் கண்டு மயங்கி, 'இவள்தான்' வேண்டும் என்று போட்டி போட, இவளுக்கு வேண்டியதை வாங்க பணமின்றி. கடன் வாங்க வழியின்றி (மூத்தவளுக்கு வாங்கின கடனையே அடைக்கலையே) தலையில் துண்டு போட்டுக்கொண்டு ஓரமாய் ஒதுங்கி அமர்வதை 'Osbourne Effect' என்ற பெயரில் வணிக கல்லூரிகளும் நிறுவனங்களும் product life cycle pitfall ஆக இன்றளவும் பயன்படுத்துவது மட்டுமே மிச்சம்.

தன் வாழ்வின் இறுதி நாட்களை கொடைக்காலில் தன் தமக்கை வீட்டில் கழித்த Osbourne, தமிழில் சரளமாக கதைக்கக்கூடிய, 'பாதித்தமிழர்'!. அம்மா திருச்சியாம், அப்பா Scottish ஆம்! அம்மா தாய்லாந்து / போலந்து என்பவரும் உண்டு. ஆனால் அவர் தமிழ் கற்றது என்னவோ திருவண்ணாமலையில், ரமணர் குடிலில்!!

வெற்றிகளை மட்டுமே கொண்டாடவேண்டும் என்று இந்த உலகிற்கு சொன்ன மூடர் யாரோ அறியேன். வெற்றியும் தோல்வியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்று அறிந்தவராவது கொண்டாடுவோமே இவரது தோல்வியை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...