அறம் பொருள் இன்பம். அன்பும் அறனும் உடைத்தாயின்... அறவழி. அறநெறி. அறம்னா என்னங்க? நீதி நேர்மை நியாயம் மட்டுமா அதையும் தாண்டியா? அறம் செழிக்குமா? அது என்ன பயிரா? 'இந்தக்காலத்து பசங்க ரொம்ப கெட்டுப்போய்ட்டாங்க' என்பது எந்தக்காலத்திலும் சொல்லப்படும் ஒன்று. நம் குழந்தைகள் தூரலில் நனைந்தால்கூட பொறுக்காது உடனே துண்டெடுத்து தலைதுவட்டும் நாம் அவர்கள் மனதைத்துவட்ட வேண்டாமா? ஊடக வதை என்பது சமையல் பாத்திர நீரில் மிதக்கும் உயிருள்ள தவளை மாதிரி. நம்மைப்பிணைக்கும் குடும்ப சங்கிலி நாம் காண்பதையும் கேட்பதையும் சங்கிலிக்கண்ணிகளுக்கு கடத்தாமல் போகுமா? நம்மில் எத்தனை பேர் யாரும் பார்க்காதிருக்கும்போதும் தவறுகள் செய்யாமலிருக்கிறோம்? நியாயப்படுத்தும் போர்வையில் நாம் வைக்கும் விளக்கங்கள் நம் குழந்தைகளின் வேர்களையும் பாதிப்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம்? என்னுடன் வெளி நாட்டில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் இரவுப்பணியில் இருந்த என் மதிப்பிற்குரியவர் ஒருவர் நள்ளிரவில் என்னை 'பொருட்கள் வைப்பு' அறைக்கு அழைத்தார். 'எதற்கு இந்நேரத்தில்?...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!