"உன் அழகு மாசு மருவற்ற உன் சருமத்தில்" "உன் அழகு உன் முத்துவெண்மை பற்களில்" "உன் அழகு உன் கூந்தல் அடர்வில், நீளத்தில்" "உன் ஆற்றலுக்கு அழகு இந்த புட்டியில் அடைந்துகிடக்கும் கருமாந்திர மாவு!" "உன் தகுதிக்கு உன் குடும்பத்திற்கு அழகிய அனைத்து வசதிகளுடனும் கூடிய பெருநகர விளிம்பில் வீடு!' என கருத்த தோலுடைய மக்களிடம் வெளிச்சம் போட்டு கூவி விற்கும் நிறுவனங்கள் நிசத்தில் விற்பவை என்ன தெரியுமா?! 'உன் சரும எண்ணெய் பிசுக்கும் மருக்களும் சுருக்கங்களும் உன் எதிரி' 'உன் வியர்வை உனக்கு எதிரி!' 'உன் நிறம் உனக்கு எதிரி!' 'உன் பல் பழுப்பு உனக்கு எதிரி!' 'உன் வீட்டு உணவு உனக்கு எதிரி!' 'உன் சிற்றூர் வசிப்பிடம் உனக்கு எதிரி!' "உனக்கு எதிரகளே இல்லாமல் ஆகவேண்டுமென்றால் நீ வணங்க வேண்டிய கடவுள் இதுதான்!" என நம்மை நமக்கே எதிரிகளாக்கி, எதிர்ப்பை ஒழிக்க அவை நம்மை வணங்கச்சொல்லும் அந்தக்கடவுள் பல வண்ண நிறங்களில் பளபளப்பான ஆடைகளில் வெவ்வேறு வடிவங்களில் ஆர்க்டிக் முதல் அண்டார்டிகா வரை வெளியெங்கும் பரவியிருக்
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!