முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

என் பெயர் சுதந்திரம்

என் பெயர் சுதந்திரம். வயது - 50 இருக்கலாம். பிறந்த வருடம், தேதி... நினைவில்லை. எனக்கு வீடு இல்லை, உறவு இல்லை. தொழில் : இன்றைய தேதியில் இந்த நாட்டில் உன்னதமான தொழில். குப்பை பொறுக்குவது. கண்ட இடமெல்லாம் குப்பை கொட்ட கோடிக்கணக்கானோர் வாழும் நாட்டில் எனக்கு குப்பைக்கு பஞ்சமில்லை. அதிகாலை கொசுக்கடியில் / குளிரில் / புழுக்கத்தில் எழுந்து, சாலை ஓரங்களில் 'ஒதுங்கி'... எழுந்து தோளில் ஒரு பெரிய கித்தான் சாக்கோடு எனது பயணம் தொடங்கும், வயிறு வளர்க்க. சாலை ஓரங்களெங்கும் குப்பைகள் குவிந்து என்னை வரவேற்கும். பொறுமையாய் ஒரு குச்சி வைத்து அவற்றை கிளறி ப்ளாஸ்டிக் பாட்டில்கள், மூடிகள், உலோக கழிவுகள், மரத்துண்டுகள், அபூர்வமாய் கிடைக்கும் சில விலை உயர்ந்த பொருட்கள் என நிதானமாய் தேடி எடுத்து எனது சாக்கில் நிரப்பிக்கொள்வேன். இதுவரை நான் குடிக்க தண்ணீர் பாட்டில் சுமப்இதனால்லை. உணவுக்கு என்றோ டீ காஃபிக்கென்றோ, நொறுக்குத்தீனிக்கென்றோ வேலையில் இடைவேளை எடுத்ததில்லை. இரவு வரும் பகலும் வரும் இரண்டும் ஒன்றுதான் என பருவநிலை மாற்றங்களின் ஊடாக நான் பொறுக்கியவற்றை சேர்த்து சேர்த்து ஒவ்வொரு முறை சாக்கு நிரம்பும்

உச்ச கர்ம யோகா!

ஜெய்கணேஷ் நாசர் ராமராஜன் முரளி பாண்டியன் பாக்யராஜ் பாண்டியராஜன் மோகன் பாரதிராஜா(!) ராஜசேகர் சந்திரசேகர் தேங்காய் சீனிவாசன்! என்னதான் நாம் நம் தொழிலை நேசித்தாலும் நம் விருப்பு வெறுப்புகள் நம்மையறியாமலேயே நம் செயலில் வெளிப்படும், என்னதான் 'ஞான் ப்ரோஃபஷனலாக்கும்!' என்று காலரை தூக்கிவிட்டுக்கொண்டாலும். சில மனிதர்களோடு சில நிமிட உரையாடல்கூட சில நேரங்களில் "கடக்க இயலாத காலவெளி" போல மாறி நம்மை சோர்வடையச்செய்யலாம்.  வாழ்நாளின் பெரும்பகுதி, இப்படியான "உரையாடல்களுடனே" விழித்திருக்கும் நொடியெலாம் பயணிக்கும் ஒருவர் எத்தனை காலம்தான் இந்த சூழலில் செயல்பட இயலும், அதுவும் தன் க்ரியேடிவிடியை சற்றும் குறைத்துக்கொள்ளாமல்? நம் ஊரில் ஒருவர் இருக்கிறார்! பல மாதங்கள் பலர்கூடி தேர் இழுத்து ஒரு திரைப்படம் உருவாகிறது.  அனுபவம் மிக்க இயக்குநர்கள், கற்றுக்குட்டி இயக்குநர்கள் என யார் இயக்கினாலும், அப்படம் ஒரு முழு வடிவம் பெறுவது இசை அதனோடு சேர்ந்தபின்புதான். இப்படி, இசை சேர்வதற்கு முன்னால் ஒளி வடிவில் அறைகுறையாய் நிற்கும் படத்தை, ஒவ்வொரு படத்தையும், ஒரு முறை இரு முறை அல்ல, மூன்று முறை ப

நீங்க என்ன சாதி?

  நீங்க என்ன சாதி? சாதி இரண்டொழிய வேறில்லை பாப்பா. நீங்க எந்த சாதி? நான் என் இளமையை நிறைத்த காலங்கள் எல்லாம் நம் தமிழ்நாட்டின் சிற்றூர்களிலும் கிராமங்களிலும் மட்டுமே. அங்கு எல்லாம் சாதி முஷ்டி முறுக்கல்கள் நான் பார்த்ததில்லை, ஒரு முறை கூட.  எப்போதாவது செய்தித்தாள்களில் பதியப்பட்ட 'முதுகுளத்தூர் துப்பாக்கி சூடு' போன்ற சம்பவங்கள் இன்றுவரை நினைவில் இருப்பது இதனால்தான் (i.e. exception events) கல்லூரி கல்விக்காக பெருநகருக்கு வந்து அதன் பின் இன்னும் பெரிய நகரில் வேலைக்கு வந்து... வணிக ஓட்டம் பிடரியை உந்தித்தள்ள, ஓடத்தொடங்கும்போதும்கூட ஜாதி பற்றிய உரையாடல்கள் மேம்போக்காகத்தான் இருந்தன.  ஒரு சராசரி மனிதனாக என் வாழ்வில் முதன்முதலாக பார்ப்பனீயம் is Bad என mainstream பேசுபொருள் கேட்டது 1990களி்ல்தான். சக்கிலியனெல்லாம் இன்னைக்கு ஆட்டம் போடுறான் என்ற mainstream முணகல்கள்  தெற்கில் எழுந்ததும் இதன் பிற்பாடுதான். அந்த காலகட்டம்வரை, 'முன்னர் இழைக்கப்பட்ட சமூக அநீதிகளுக்கு இப்போது நாம் கொடுக்கும் விலை' என்பதாகவே சலுகைகள் அணுகப்பட்டன. பார்ப்பண துவேஷமென அரசியல் திராவிடம் வளர்த்தபோதும் அவர்

முன்னை இட்ட தீ

அணில்குஞ்சின் வெந்து கருகும் உடல்வாசம் உச்சிக்கொழுந்து சாம்பலாகி காற்றில் அலையும் அகார்ன் மரத்தின் எஞ்சிய கார்பன் உலகின் மாசையெல்லாம் உறிஞ்சி உள்ளிழுத்து பச்சையாய் பசுமையாய் பூக்களாய் காய்களாய் கனிகளாய் குடில்களாய் மாற்றித்தந்த காட்டுப்பேராற்றல் வெந்து தணியவும் சிறு பொறியொன்று போதும். ஒரு சுள்ளி வெந்தாலும் ஓராயிரம் கோடி உயிரினங்கள் வேக்காடாகி மடிந்தாலும் பொறிக்கென்ன போச்சி? மரங்கள் தானே உரசி தானே கொள்ளிவைத்துக்'கொல்வது' பேராற்றல் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளவாம். பேராற்றல் தந்த வாலை அறுத்துக்கொண்டு தரையிறங்கிய வானரக்கூட்டமொன்று இந்த கானகங்களுள் பொறிகளை வகைதொகையில்லாமல் பதுக்கிவைப்பது எந்த வகை? ஆலைகள் செய்யவும் பாமாயில் செய்யவும் டிம்பர் பெருக்கவும் சாலைகள் வடிக்கவும் என இவை வைக்கும் பொறிகளெல்லாம் தன் தலையில் தானே கொள்ளி வகை; வைப்பது எங்காயினும் எரியப்போவதென்னவோ நம் நுரையீரல்தான்! ஆனால் எரியும் வழியென்னவோ எங்கோ வெகு தொலைவில்தானே என நாம் வேண்டுமானால் சொல்லி சமாளிக்கலாம். ஆசியாவில் ஒரு வண்ணத்தியின் சிறகசைப்பு சில நாட்களில் தென்னமெரிக்காவில் புயல்மழை வரவைக்குமாம். நம் மூளைத்திறன

150!

  ஒரு மிகப்பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்தில் அலுவலக கட்டிடம் ஒவ்வொன்றும் அதிகபட்சம் 150 பேர் மட்டுமே வேலை செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல நூறு அலுவலர்கள் புதிதாய் சேர்ந்தால் ஒவ்வொரு 150 பேருக்கும் ஒரு கட்டிடம் என அருகருகிலேயே கட்டித்தருகிறதே ஒழிய ஒரே கட்டிடத்தில் இவர்களுக்காக புதிய பல மாடிகள் என்கிற வடிவை தவிர்த்து வருகிறது. "ஏன் இப்படி?" என்ற கேள்விக்கு அதன் விடை வியப்பூட்டும் ஒன்று; "அதற்கு மேலன்னா பல பிரச்னைகள் வருகிறது; logistical, interpersonal, social, parking slot issues(!)" என அடுக்கிக்கொண்டே போகிறது. அதென்ன 150 கணக்கு? ராபின் டன்பார் (Robin Dunbar) என்கிற அறிவியலாளர் மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் குழுக்களின் தேவை, மொழிகளின் தேவை என்ற வகையிலெல்லாம் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தவர். .அவர் நமது விலங்குகளின் மூளையில் உள்ள நியோகார்டெக்ஸ் (neo cortex) என்கிற பகுதியின் அளவை வைத்து அவற்றின் குழு (gang) எண்ணிக்கையை தீர்மானிக்கும் வழி கண்டுபிடித்தவர் (புள்ளி விவரங்களின் துணையுடன் நிரூபித்திருக்கிறார்). மனித மூளையின் நியோ கார்டெக்ஸ் அளவை வைத்து மனிதர்க

அருந்ததி பொறுக்கிய நட்சத்திரங்கள்

  நட்சத்திரங்கள் பொறுக்கி... நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் கனவு தேசமிது. வேறெங்குமில்லாத அளவில் இங்கு மட்டும் இத்தனை நட்சத்திரங்கள். தொலைந்து போன கனவுகளை இட்டு நிரப்ப எங்களுக்கு நட்சத்திரங்கள் தேவை. உடைந்துபோன ஆன்மாக்களை சேர்த்து ஒட்டவும் எங்களுக்கு நட்சத்திரங்கள் தேவைப்படுகிறது. சிறு வயது சிராய்ப்பு காயங்களுக்கு எச்சில் கவசம் அணிவித்த எங்களின் வளர் பருவ பெருங் காயங்களுக்கு நட்சத்திரங்கள்தான் கவசமாகிறது... தீராப்பெருங்காயமென வன்புணர்வு வளர்ந்தபோதும் உதிரம் துடைக்கவும் கோபம் விழுங்கவும் எங்களுக்கு நட்சத்திரங்கள் நிறைய தேவை. வன்புணர்வு உடலில் மட்டுமா என்ன? மனக்காயங்களுக்கும் நாங்கள் நட்சத்திரங்களைத்தான் மருந்தாக விழுங்குகிறோம். தன்னிலை மறந்து பலர் கொக்கரிக்க சிலர் தலைகவிழ்ந்து நிற்க நாங்கள் கையறு நிலையில் நிற்கையில் எங்கிருந்தோ நீண்ட கரத்திலிருந்து எங்கள் மானம் காக்க பெருகியோடிய ஆடையாறு கூட முழுக்க முழுக்க நட்சத்திரங்களால் நெய்யப்பட்டவைதான். விடாது துரத்தும் வாழ்வின் துயரங்களில் இருந்து ஒடுங்கி நாங்கள் சற்றே இளைப்பாறவும் முடங்கிக்கொள்ளவும் எங்களுக்கு நட்சத்திரங்கள் தேவை. அரிதினும் அரி

கல் எறியும் குளங்கள்!

  இந்தக்குளத்தில் யாராவது கல்லெறிந்துகொண்டேதான் இருக்கிறார்கள் எப்பொழுதும். சலனமற்ற நீர்ப்பரப்பு எப்படி இருக்கும் என்பதையே மறந்த குளம் அவ்வப்போது தன்னுள்ளே மூழ்கி தன்னைக்கண்டடைய முயலும், யாரும் பார்க்காத பொழுதுகளில். கல்லதிர்வென்னவோ நீர்மட்டத்தளவில்தான். உள்ளிறங்கி துழாவினால் விழுந்த கல்லை கண்டெடுத்திடலாம் சற்றே எத்தனித்தால். என்ன? ஒன்றேபோல் பல கல் கிடைக்கும்...  சரியெது என்பது அப்போதைய மன நிலை சார்ந்ததாகவே இருக்கும் :-)  இதில் ஒரு விந்தையென்ன தெரியுமா? கல்லெறியும் அத்தனையும் குளங்கள்தான்! (Image courtesy: wikimedia commons)