முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அருந்ததி பொறுக்கிய நட்சத்திரங்கள்

  நட்சத்திரங்கள் பொறுக்கி... நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் கனவு தேசமிது. வேறெங்குமில்லாத அளவில் இங்கு மட்டும் இத்தனை நட்சத்திரங்கள். தொலைந்து போன கனவுகளை இட்டு நிரப்ப எங்களுக்கு நட்சத்திரங்கள் தேவை. உடைந்துபோன ஆன்மாக்களை சேர்த்து ஒட்டவும் எங்களுக்கு நட்சத்திரங்கள் தேவைப்படுகிறது. சிறு வயது சிராய்ப்பு காயங்களுக்கு எச்சில் கவசம் அணிவித்த எங்களின் வளர் பருவ பெருங் காயங்களுக்கு நட்சத்திரங்கள்தான் கவசமாகிறது... தீராப்பெருங்காயமென வன்புணர்வு வளர்ந்தபோதும் உதிரம் துடைக்கவும் கோபம் விழுங்கவும் எங்களுக்கு நட்சத்திரங்கள் நிறைய தேவை. வன்புணர்வு உடலில் மட்டுமா என்ன? மனக்காயங்களுக்கும் நாங்கள் நட்சத்திரங்களைத்தான் மருந்தாக விழுங்குகிறோம். தன்னிலை மறந்து பலர் கொக்கரிக்க சிலர் தலைகவிழ்ந்து நிற்க நாங்கள் கையறு நிலையில் நிற்கையில் எங்கிருந்தோ நீண்ட கரத்திலிருந்து எங்கள் மானம் காக்க பெருகியோடிய ஆடையாறு கூட முழுக்க முழுக்க நட்சத்திரங்களால் நெய்யப்பட்டவைதான். விடாது துரத்தும் வாழ்வின் துயரங்களில் இருந்து ஒடுங்கி நாங்கள் சற்றே இளைப்பாறவும் முடங்கிக்கொள்ளவும் எங்களுக்கு நட்சத்திரங்கள் தேவை. அரிதினும் அரி

கல் எறியும் குளங்கள்!

  இந்தக்குளத்தில் யாராவது கல்லெறிந்துகொண்டேதான் இருக்கிறார்கள் எப்பொழுதும். சலனமற்ற நீர்ப்பரப்பு எப்படி இருக்கும் என்பதையே மறந்த குளம் அவ்வப்போது தன்னுள்ளே மூழ்கி தன்னைக்கண்டடைய முயலும், யாரும் பார்க்காத பொழுதுகளில். கல்லதிர்வென்னவோ நீர்மட்டத்தளவில்தான். உள்ளிறங்கி துழாவினால் விழுந்த கல்லை கண்டெடுத்திடலாம் சற்றே எத்தனித்தால். என்ன? ஒன்றேபோல் பல கல் கிடைக்கும்...  சரியெது என்பது அப்போதைய மன நிலை சார்ந்ததாகவே இருக்கும் :-)  இதில் ஒரு விந்தையென்ன தெரியுமா? கல்லெறியும் அத்தனையும் குளங்கள்தான்! (Image courtesy: wikimedia commons)

அந்தாதுன் - Andhadhun

  கடவுளாக இருந்தாலும்கூட நம் சொல்பேச்சு கேட்கும் கடவுளை மட்டுமே நாம் விரும்புவோம். "நம்ம டிசைன் அப்படி :-) "என்று சொல்லி நகராமல் மேலே படிக்கலாம் வாங்க! வரம் தருகிறேன் என எந்த கடவுளும் வாக்குறுதி தந்ததில்லை. அவர்களை படைத்த நாம்தான் 'இன்னார் கடவுள் இந்த பலன்களை எல்லாம் தருவார், இந்த பாபங்களை எல்லாம் போக்குவார். அவருக்கு இதெல்லாம் ப்ரீதி, இதெல்லாம் ஆகாது' என பல கட்டமைப்புகளை வழித்தடுப்பான்கள் மற்றும் வழிகாட்டிகளாய் நிறுத்தி அவற்றின் ஊடே நம் வேண்டுதல்களை சுமந்து தரிசனம் செய்கிறோம். மன பாரம் குறைந்து, மன அமைதி கூடி, ஆனந்தம் கூடி என ஏதோ ஒரு வகையில் முன்னைக்கு இப்போது மேம்பட்ட உணர்வுகளோடு வெளியேறுகிறோம். சக மனிதர்களிடமும் மனிதரல்லாத உயிரினங்களிடமும் பகிறலாமே என்றால் என்ன சொல்கிறோம் தெரியுமா? 'எல்லோரும் என்னை எடைபோட்டுக்கொண்டே இருக்கிறார்கள்! நிபந்தனையற்ற அன்போ கரிசனமோ ஆறுதலோ இவர்களிடத்தில் கிடைக்காது!' "அது சரி, மனிதர்கள் மட்டும்தானே அப்படி? மற்ற உயிரினங்களிடம்?" என விடாமல் கொக்கி போட்டு கேட்டால், அதற்கும் என்ன சொல்கிறோம் தெரியுமா? 'இந்த அவசரமான உலகில்

மனுஷன்டா!

  மதுக்கோப்பைகளால் கட்டப்பட்ட மாளிகை பார்த்திருக்கிறீர்களா? உச்சியில் ஒற்றைக்கோப்பை. அதன் கீழ் சில. அதன் கீழ் பல. அதன் கீழ் பலப்பல கோப்பைகளை அடுக்கி, உச்ச கோப்பையில் பளபளவென மின்னும் மதுவை ஊற்ற, அது நிரம்பி வழிந்தபின்னும் தொடர்ந்து ஊற்ற, அடுத்தடுத்த வரிசைகளின் கோப்பைகளும் நிரம்பி வழியும். இந்த வரிசையை ஒரு சம தளத்தின் மீது ஆயத்தம் செய்து துளி கூட சிந்தாமல் சிதறாமல் ஆடம்பர தளத்திற்குள் தள்ளிச்சென்று, லாபத்தில் கொழுத்த பெரு வணிக கரங்கள் ஒவ்வொரு கோப்பையாக இலாவகமாக எடுத்து துளிகூட சிந்தாமல் பருகி களிக்கும் நிகழ்வுகள் நித்தம் நடக்கிறது நம் உலகில். இவை பெரும்பாலும் வணிக வெற்றியின், பெரு லாபத்தின் கொண்டாட்டமாகவே இருக்கும். இந்த மதுக்கோப்பை மாளிகை, சம தளத்தின் மீது இல்லாமல் இரு வேறு திசைகளில் ஒன்றின் மீது ஒன்று உரசிக்கொண்டே நகர்ந்துகொண்டிருக்கும் இரு தட்டுகளின் மீது இருந்தால்? இமயம் நிற்பது இரு பெருந்தகடுகளின் மேலே. இந்த பூமித்தகடுகளின் உரசலில் பிறந்த இமயம்தான் நம் உலகின் மிக இளமையான மலைத்தொடராம். மலைப்பனி உருகி உருகி உயிர் நனைக்கும் நீராகி ஆறாகி பள்ளத்தாக்குகள் சமவெளிகள் இறங்கி ஓடி கடல் மடி தே

அன்பென்ற சோதியில் அகிலங்கள் நனையுமா?

  அர்த்த சாஸ்திரம் நாலு வேதம் உபநிடதம் கடோபநிடதம் மகா வாக்யம் இதிகாச புராணம் தொல்லியல் காப்பியங்கள் எல்லாம் கற்ற மனுஷ்ய சரித்ரம், இவையனைத்தும் போதித்த அன்பென்ற அளவீட்டில் பரம தரித்ரம்! சாத்திரங்கள் சாத்தியங்கள் பயின்ற அளவிற்கு அன்பு செய்வதை பயில மறந்து, சாத்திரம் தந்தோரின் பழைய சுவடு எதிரில் நீள்வதை கண்டும் புறம்தள்ளி, வழியற்ற திசையில் பாராயணம் செய்துகொண்டே வெகுவேக பயணம்... Liquor drinking is injurious to health ஆனால் விற்போம் Food IS Medicine ஆனால் நஞ்சிடுவோம் சுழன்றும் ஏர்ப்பின்னது நீதி கேட்டால் நெடுஞ்சாலையில் முள்பதிப்போம் அவர்கேட்கும் நீதிக்கு வண்ணமடிப்போம் நோகடிப்போம் ஒருவர் மிதிக்க ஒருவர் இறக்க போராடி நகர்வோம் பலர் மிதிக்க ஒருத்தி இறக்க போராடாமலே நகர்வோம்... சாத்திரங்கள் சாத்தியங்கள் பயின்ற அளவிற்கு அன்பு செய்வதை பயில மறந்து, சாத்திரம் தந்தோரின் பழைய சுவடு எதிரில் நீள்வதை கண்டும் புறம்தள்ளி, வழியற்ற திசையில் பாராயணம் செய்துகொண்டே வெகுவேக பயணம்... அக்கப்பக்கம் பாரடா சின்ன ராசா... அக்கம்பக்கம் பாரடி சின்ன ராணி!

புள்ளிகளுக்குள் சிக்கிக்கொண்ட கோலங்கள்

  கடற்கரையோர டவுன் ஒன்றில் பத்தாம்ப்பு படிக்கையிலே ட்யூஷன் ஆசை தொற்றிக்கொள்ள, 'ஒனக்கெதுக்குடா!!!... சரி, இப்படியாவது நேரம் ஒதுக்கி படிக்கிற பழக்கம் வரட்டும்...' என அப்பா பெரிய மனதுடன் அனுமதிக்க, தொடங்கியது எனது மாலை நேர ஒதுக்கல்கள். 'கற்பூரம்... நீயெல்லாம் எதுக்குடா வர்ற?!' என இரண்டாம் நாளிலேயே கிருஷ்ணா மாஸ்டர் கண்டுபிடிக்க, சென்டரில் வெயிட் கூடிப்போச்சி. ஏராளமாய் கேள்வித்தாள்கள், குறிப்பாய் கணக்கு! அவ்வளவு குஷியாயிருக்கும் மார்க் வருகையில். இந்தப்பதிவு கற்பூரம் பற்றியதல்ல, கிருஷ்ணா மாஸ்டர் பற்றியது! நல்ல சிவப்பு, வெட வெட உடல், உயரம், வசீகர சிரிப்பு, சுருட்டை முடி, அழியாத கோலங்கள் ப்ரதாப் போத்தன் போல ஸ்டைலாய் சிகரெட்டு, முழங்கை வரை சுருட்டிய முழுக்கை சட்டை சகிதமாய் எப்பொழுதும் மந்தகாசம். "ஆசீர்வதிக்கப்பட்ட மனுசன்டா! எப்பப்பாரு அப்படி ஒரு சிரிப்பு!' என ஏரியா இளவட்டங்கள் பொறாமையில் வேகும். கருணாகரன் என்று ஒரு வகுப்புத்தோழன், படிப்பில் என்னோடு போட்டி, ஆனால் பாடத்தொடங்கினால் நானும் சொக்கி கேட்பேன், அப்படி குரல் வளம். கிருஷ்ணா மாஸ்டர் க்ளாசில் தொய்வு ஏற்பட்டதாக நினை

என்ன செய்யப்போகிறோம்?!

  அரூபமாய் காற்றில் அலையும் கனவுகளின் வேர்கள் பெரும்பாலும் நம் எண்ணத்தில் உதித்தவைதான். டெஸ்லா என்றொரு விஞ்ஞானி, காற்றிலேயே மின்சாரத்தை கம்பிகளின்றி அனுப்ப கனவு கண்டார். அன்று உலகம் நகைத்தது. இன்று கேபிள் இல்லாமலே சாம்சங் மொபைல் சார்ஜ் ஆகிறது! கனவு என்பதற்கு இலக்கண இலக்கியம் கிடையாது. கொம்பு வைத்த குதிரையாகவும் இருக்கலாம், சக்கரங்களற்ற கப்பலாகவும் இருக்கலாம். லாஜிக் இருப்பது அவசியமில்லை. நம் குழந்தைகளுக்கு இன்றைய கல்விக்கூடங்களில் கனவு காண யாரும் கற்றுத்தருவதில்லை. பாடங்கள் பிடிக்காமல் மாணவர்கள் கண்ணயர்ந்தால் கனவிலும் யாராவது பாடம் நடத்துவதாகவோ அல்லது தேர்வில் ஃபெயிலாவது போலவோ தோன்றி திடுக்கிட்டு கண் விழிக்கும் மாணவர்கள்தான் அதிகம் இன்று. டேனியல் க்வின் என்கிற ஆசிரியர், நம் புதிய உலகின் கல்விக்கூடங்களை சிறைச்சாலைகள் என்கிறார். கனவு காண விடாமல், கனவிலும் நிகழாத அற்புதங்கள் நம் கண் முன்னே நம்மைச்சுற்றியுள்ள வெளியில் ஒவ்வொரு நொடியிலும் நிகழ்வதைக்கூட உணர விடாமல் அடைத்து வைத்து, காற்றில் புரளும் இலையில் ஒருங்கிணைந்து அரங்கேறும் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணித நிகழ்வுகளை செயற்கையாய் தனி