அர்த்த சாஸ்திரம்
நாலு வேதம்
உபநிடதம்
கடோபநிடதம்
மகா வாக்யம்
இதிகாச புராணம்
தொல்லியல் காப்பியங்கள்
எல்லாம் கற்ற
மனுஷ்ய சரித்ரம்,
இவையனைத்தும் போதித்த
அன்பென்ற அளவீட்டில்
பரம தரித்ரம்!
சாத்திரங்கள் சாத்தியங்கள்
பயின்ற அளவிற்கு
அன்பு செய்வதை
பயில மறந்து,
சாத்திரம் தந்தோரின்
பழைய சுவடு
எதிரில் நீள்வதை
கண்டும் புறம்தள்ளி,
வழியற்ற திசையில்
பாராயணம் செய்துகொண்டே
வெகுவேக பயணம்...
Liquor drinking is injurious to health
ஆனால் விற்போம்
Food IS Medicine
ஆனால் நஞ்சிடுவோம்
சுழன்றும் ஏர்ப்பின்னது
நீதி கேட்டால்
நெடுஞ்சாலையில் முள்பதிப்போம்
அவர்கேட்கும் நீதிக்கு
வண்ணமடிப்போம் நோகடிப்போம்
ஒருவர் மிதிக்க
ஒருவர் இறக்க
போராடி நகர்வோம்
பலர் மிதிக்க
ஒருத்தி இறக்க
போராடாமலே நகர்வோம்...
சாத்திரங்கள் சாத்தியங்கள்
பயின்ற அளவிற்கு
அன்பு செய்வதை
பயில மறந்து,
சாத்திரம் தந்தோரின்
பழைய சுவடு
எதிரில் நீள்வதை
கண்டும் புறம்தள்ளி,
வழியற்ற திசையில்
பாராயணம் செய்துகொண்டே
வெகுவேக பயணம்...
அக்கப்பக்கம் பாரடா சின்ன ராசா...
அக்கம்பக்கம் பாரடி சின்ன ராணி!
கருத்துகள்
கருத்துரையிடுக