முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

எனக்கு ஆயிரமாயிரம் தோழிகள்

கண்விழிக்கும்போதே என்னுள் தளும்புது காடு. கண்மூடும் விழிக்குவிப்பில் குவியும் காடு, உறங்கும் என்னுள்ளே. உள்ளிழுக்கும் மூச்சிலும் அதுவே உயிரில் நனைந்து வெளியேறும் காற்றிலும் அதுவே. காண்பதனைத்திலும் காட்டின் சுவடு காணும் கண்கள். காட்டின் இடையறாத ஓசை கேட்கும் காதுகள். இலக்கின்றி காட்டுள்ளோடும் உயிரிகளாய் எண்ணங்கள். காட்டு மரங்களில் உதிரும் இலைபோல மலர்போல சொல்லுதிர்க்கும் நா. முறிந்து விழும் மரக்கிளையாய், சாயும் பெருமரமாய் எப்போதாவது அனல்மூட்டும் காட்டின் கனப்பு உள்ளுலவும் உடல். காட்டுள் ஆயிரமாயிரம் உயிரினங்கள் அங்குமிங்கும் அலைந்தாலும் அத்தனையும் உள்ளடக்கி அடர்மௌனம் காக்கும் இதயம். காட்டுள்ளே உயிரனைத்தையும் பொத்திக்கதகதப்பாய் காத்துநிற்கும் பேரன்பில் சொதசொதப்பாய் நெகிழ்ந்த ஆன்மா. கனிந்து விழுந்த பழம் விதையாகி துளிராவதுபோலே செயல். காடு தேடி அலைவதில் நாட்டமில்லை எனக்கு. ஏனெனில், தான் காடென்பதே அறியாத ஏனைய காடுகள் போலன்றி, தன்னுணர்ந்த ஒரு பெருங்காடு நான். என் சிந்தனையும் காடுருவாக்கும், இனி பிறக்கப்போகும் பறவைக்கும் சேர்த்தே. மனிதரின் கால்தடம் பட்ட இடமெலாம் கல்லாய் சமைந்துபோன காடுகள் அனைத்து

அதுதாண்டா கல்வி!

ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா கல்வி! தவறான புரிதல்களையே உண்மையென்று நம்பி... போராடிக்கொண்டே இருக்கும் சமூகமாகிவிட்டோம். 1850 களுக்கு முன் இங்கு இயற்கையே பள்ளிக்கூடமாக இருந்தது. நம் கிராம சிறு பிள்ளைகள் வயல்வெளிகளிலும், தானிய களங்களிலும் பல வயது மனிதர்களோடு ஊடாடி வாழ்வு கற்றனர். பள்ளிகள் இந்த கூடாரத்திற்குள் ஒட்டகமாய் நுழைந்து, முதலில் நான்காம் வகுப்பு வரை மட்டுமே என்று தொடங்கி, நாலு எட்டாகி பன்னிரண்டாகி பதினாறாகி இன்று ஐம்பதிலும் அஞ்சல் வழி / பகுதி நேரம் / முழு நேரம் என கற்பித்துக்கொண்டே இருக்கிறது, இயற்கைக்கு எதிரான வாழ்வியலை... இன்று உலகெங்கும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த மகாமாரி தொடர்ந்தால் மாதக்கணக்கில், வருடக்கணக்கில்கூட பள்ளிகள் மூடப்படலாம். அப்போது நம் சமூகம் என்ன செய்யப்போகிறது?  செயற்கைப்பள்ளிகள் இல்லாத சென்ற நூற்றாண்டுகளில் இயற்கைப்பள்ளி இந்த சிறார்களை வளர்த்தது. இன்றைய நம் வாழ்வில் அத்தகைய வாய்ப்பு??? தேவை இல்லாத ஒன்றிற்கு ஏராளமான 'தேவையை' உண்டாக்கி, அது நமக்கு கிடைத்தே ஆக வேண்டும் என போராடவைத்ததில் அங்கும் வணிகம் வென்றது. போராளிகளாவே வாழ்ந்து முடிவத

நீங்களும் ஆகலாம் மந்திரவாதி!

மேஜிக் - மாயாஜாலம், என்பது மூன்று நிலைகளை கொண்டது்: முதல் நிலை, The Pledge: ஒன்றை மறையவைத்தல். இரண்டாம் நிலை: The Turn: மறைத்ததை வேறொன்றாக மாற்றி நம் கண்முன்னே  தோன்றவைத்தல். மூன்றாம் நிலை: The Prestige:  முதலில் மறையவைத்ததை மீண்டும் நம் கண்முன்னே தோன்றவைத்தல். இவை மூன்றும் நிகழ்ந்தால்தான் மேஜிக் முழுமை பெறும். இவை மூன்றையும் நிகழ்த்தி முடித்ததும், வியப்பில் ஆர்ப்பரித்து ஒலிக்கும் காண்பவரின் கைதட்டல், கிடைக்கும் 'வாழ்த்துக்கள்'... இதுவே எந்த ஒரு மாயாஜால வித்தைக்காரருக்கும் உந்துவிசையாக இருப்பது. நீங்களும் Magician ஆகலாம், எளிதாய்! முதல் நிலை: The Pledge: விதை ஒன்றை மண்ணில் மறையவையுங்கள். இரண்டாம் நிலை: The Turn: அது மரமாக வளர்ந்து இலை, பூ, காய், கனி என குலுங்கும் வரை நீர் ஊற்றுங்கள். Magic இதனுடன் முடிவதில்லை. ஏனெனில் மூன்றாம் நிலையான The Prestige இன்னும் எஞ்சியிருக்கிறதே! மூன்றாம் நிலை: The Prestige: கனியிலிருந்து விதை(கள்) மீண்டும் வருவது! இந்த Magic இன்னும் உன்னதமானது. ஏனெனில், நீங்கள் வளர்த்த மர நிழலில் ஒதுங்கி, பழத்தை உண்டு, விதை மீண்டு(ம் )அதனுள் இருந்து தோன்றும் அற்புதத்

21_ஆம்_நூற்றாண்டின்_ஒப்பற்ற_புதிய_பொருளாதாரத்துவம்!

ஒரு ஊர்ல வருமானத்துக்கு வழியில்லாம ஏழ ஒருத்தன் தவிச்சானாம். பல ஐடியாக்கள முயற்சி பண்ணிப்பாத்தும் முடிலயாம். "யப்பா!, இந்த அண்ணாடங்காய்ச்சி பொழப்புலயும் மண்ணு உளுந்திருச்சே!!"ன்னு ஆதங்கத்தில அளுக அளுகயா வந்ததாம். அளுக பெருசாகி, சோகம் அப்பிக்கிச்சாம். சோகத்தக்கொறைக்க சரக்கடிக்கலாம்னா அதுக்கும் காசில்லயாம். 'சே! என்ன பொழப்புடா இது!' ன்னு... அவனே காச்ச ஆரம்பிச்சிட்டானாம். மிச்சமானத பக்கத்தில உள்ள அளுகாச்சிங்களுக்கு தந்தானாம். சரக்கு, தளும்ப தளும்ப தந்த ஃபீலிங்ஸ்ல அங்க உள்ள காச்சிங்கள்லாம் ஒண்ணா சேந்து மப்புல ஒரு தொழில் தொடங்குனாங்களாம். காச்சுற தொழுலுதான்... தொழில் வளர வளர, ஒரு ஸ்டேஜில நாடாள்கிற ராசாவோட வருமானத்த விட இவிங்க வருமானம் அதிகமானத கண்ட ராசா காண்டாயி, 'இன்னைலேந்து காச்சுகிற வேலய அரசுடைமையாக்குறேன். நானே காச்சிறேன்!'னு வரிஞ்சி கட்டி காச்ச ஆரம்பிச்சாராம். தொழிலு கைய உட்டு போன சோகத்தில அந்த அண்ணாடங்காச்சிங்கள்லாம் க்யூல நின்னு சரக்கு வாங்கி அடிச்சி, உருண்டு பொரண்டு வூடுபோய் சேந்தாங்களாம். ராசாவுக்கு கஜானா நெம்பிகிட்டே இருந்துச்சாம். காச்சிங்களோட பொண்டு பிள்

இந்த தரிசனம், வரம்!

அதிகாலையில் வெளியில் கிளம்பி காரில் ஏறி கதவை மூடும் அந்த சிறிய இடைவெளியில், காற்றில் மிதந்து இலை ஒன்று உள்ளிறங்கியது. "என்ன அழகான நிகழ்வு! இந்த இலைக்கு இன்று free ride வேண்டுமாம்!' என்று மகிழ்வாய் கிளப்ப, இலை அசைந்தது, நகர்ந்தது! "விரல் நக அளவே உள்ள இது என்ன?" என வியந்து கேமரா கண் வழியே பார்த்தேன். பட்டு பச்சையில் நெய்ததுபோலான முதுகு காட்டி, 'அது' ஒரு சப்போட்டா விதையின் மீது ஒண்டியிருந்தது. சற்றே நகர்ந்து மறுபடி ஒண்டியது. முடிந்தவரை கேமராவை அதனருகில் கொண்டு சென்று பல படங்கள் எடுத்தேன், அது நகரவேயில்லை... நாமதான் நல்ல படங்களை தேடித்தேடி பதிவு செய்யும் இனமாயிற்றே என்ற இறுமாப்போடு எனது பேனாவைக்கொண்டு அதை மெல்ல நகர்த்தினேன், ஒரு தேர்ந்த மாடலை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் படமெடுக்க விழையும் கலைஞனின் தாகத்தோடு. பேனாவின் அடிப்பகுதி அதன்மேல் பட்டதுதான் கண்டேன்...அடுத்த நொடியில் என் நகமளவே இருந்த அது, இழுத்து நாண்பூட்டிய வில்லிலிருந்து தெறித்துப்பறக்கும் அம்பு போல ஆறடி உயரம் தாண்டி எகிறிப்பறந்து கட்டாந்தரையில் அமர்ந்து திரும்பி முறைத்தது 'போடா ம**' என்று திட்டியப

வானம் பார்த்தல்

உல்லாச உலகம் நமக்கே சொந்தம் தையடா தையடா தையடா! கொரோனா வியாதியால் இந்தியாவில் வெகுவேகமாக வளர்ந்துவரும் உயிர்காக்கும் தொழிலில் மிக மலிவானது மாஸ்க் தைக்கும் தொழில். கருணை உணர்வினால் தொடங்கப்பட்ட இந்த சேவை, இன்று மேட்சிங் ப்ளவுஸ் ரேஞ்சுக்கு வளர்ந்திருக்கிறது. வீதிக்கு வீதி நடைபாதைக்கடைகளில் மலிவாய் கிடைக்கிறது. கேரளத்து சேட்டன் ஒருவர் மாஸ்க் மறைக்கும் தன் மீசை தாடியை உலகிற்கு காட்டியே தீருவேன் என மாஸ்க் மீது அது மறைக்கும் தன் முகப்பகுதியின் புகைப்படத்தை பிரிண்ட் செய்து, இப்போது அது ஒரு வல்லிய ரோரிங் பிசினசானு! கூடிய விரைவில் ஐ.எஸ்.ஓ முத்திரையிட்ட உலகத்தரமான மாஸ்க்குகள் அனைத்துக்கடைகளிலும் சானிடரி நாப்கின்போலவே விற்கப்படும். பயன்பாடும் நாப்கின்கள் போலவே வருடக்கணக்கில் தொடரவேண்டியிருக்கும்; அதிகரிக்கும் மகாமாரிகள் ஓரு காரணமாக இருக்கலாம் அல்லது சைனாவிலிருந்து வெளியேறும் உற்பத்தி நிறுவனங்களை இங்கு இழுத்து நம் இயற்கை வளங்கள் ஆலைப்புகையாக மாறிப்போய்... நாம் சுவாசிக்க மாஸ்க் தொடர்ந்து அணியவேண்டி வரலாம். 2020 ஆம் ஆண்டு உலகிற்கே மாஸ்க் போட்ட ஆண்டாக ஆகிப்போனது எதனால் என நாமெல்லாம் சிந்திக்க நேரமின்ற

இப்படி பண்ணீட்டாளேடா முகுந்தா!

நிலாநிழல் என்று சுஜாதா ஒரு நாவல் எழுதியிருந்தார். மிடில் கிளாஸ் முகுந்தனுக்கு கிரிக்கெட்டே சுவாசம். இந்திய அணியின் ஜெர்சி அணிவது அவனது கனவு. பல தடைகளை தாண்டி உயரம் தொட முயன்று, சில வெற்றிகள், பல (அரசியல் கிறுக்கீட்டு) தோல்விகள், இடையில் ஒரு காதல், அதன் பின் அவிழும் துரோகம்... இவையெல்லாவற்றையும் கடந்து... மீண்டும் படிக்கப்போய்விடுவான். அந்தக்கதையில், காதலி அவனது வீட்டுக்கு வந்துசென்றபின்னான அவனது மனநிலை மிக பொயட்டிக்கான ஒன்று. நான் இளையராஜாவின் இசைக்கு பரம ரசிகன். ராஜா அல்லாத இசையமைப்பாளர்களின் இசை எதுவும் நீண்ட காலத்துக்கு மனதை ஏனோ வருடுவதில்லை... தப்பிப்பிழைத்த சில பாடல்களுள் இந்த ஒரு பாடல் மட்டுமே ரிபீட் மோடில் எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை... இந்தப்பாடல் கேட்கும்போதெல்லாம் முகுந்தனது ஏக்கம் என்னிடமும் தொற்றிக்கொள்ளும்... அது பாடகன் பாலுவின் வெற்றி! -------- ஆண் : மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே ஒரு காயமென்னடி என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே ஆண் : மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே ஒரு