முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஒற்றை மனிதனுக்கு ஓராயிரம் கல்லறைகள்!

உலகின் ஒப்பற்ற வீரன் இறந்தபின்னும் இன்றுவரை அலைந்துகொண்டே இருக்கும் அவலம் தெரியுமா? 20 வயதில் தொடங்கிய போர் முழக்கம் 32 இல் அவன் இறக்கும்வரை சுருதி குறையவில்லை. சென்ற இடமெங்கும் வெற்றி, வெற்றியன்றி வேறில்லை. உலகெங்கும் தன் குடையின் கீழ் கொணர அவன் தொடங்கிய, தொடர்ந்த முடிவற்ற யுத்தம் அவனைத்தின்று எச்சமிட்டு, கடந்து, சுற்றிக்கொண்டிருக்கிறது இன்றளவும், அவன் சடலம் போலவே, அவன் மிச்சத்தைத்தேடியே! உலகாண்ட ஒற்றை மனிதனுக்கு ஆறடி நிலமும் நிரந்தரமில்லை. வழி வந்தவர்களின் வெற்றிக்கோப்பையாய் மாறிய அவனது மிச்சம், கடத்தப்பட்டு, பூஜிக்கப்பட்டு, களவாடப்பட்டு, மீண்டும் மீண்டும் இடம் மாற்றப்பட்டு,  கண்டெடுக்க இயலாததாகவே இன்று வரையில். ஆள் மாறாட்டம் கூட நிகழ்ந்திருக்கலாம். வேறு யார் பெயரிலோ இங்கிருக்கும் மிச்சம் அவரதுதான், இல்லையில்லை அங்கிருக்கும் மிச்சம்தான் உண்மையில் அவரது என பஞ்சாயத்துகளும் நடந்துகொண்டே இருக்கிறது. அப்படி என்னதான் பேராவல் நமக்கு அவனது மிச்சத்தின் மேல்? Closure...அவனது இன்றைய தங்குமிடம் கண்டுபிடித்து நினைவு மாளிகை ஒன்று எழுப்பி மரியாதை செலுத்துவோருக்கு வழிசெய்யத

நாலாம் தமிழ் - 5 - அலெக்சு, அவுட்சைட் த பாக்சு!

ஒரு பண்டைய நகர நுழைவாயிலில் யாராலும் அவிழ்க்க முடியாத ஒரு கயிற்று முடிச்சு காற்றில் ஆடிக்கொண்டே இருந்ததாம்.  எவன் அதை அவிழ்க்கிறானோ அவன் உலகாளுவான் என முடிச்சை இட்டவன் சொல்லிச்சென்றதை முயன்று தோற்றவர்களிடம் வேடிக்கை பார்ப்பவர்கள் சொல்வது வாடிக்கையாம். ஒரு நாள் ஒரு குருதை மேல ஒரு ராசா வந்தானாம். அவனுக்கு உலகத்தையே செயிக்கணும்னு பேராசையாம். காத்தில ஆடற கயித்து முடிச்ச பாத்தானாம், கதைய கேட்டானாம், யோசிச்சானாம், கத்தியால வகுந்துட்டு போய்ட்டே இருந்தானாம். 'ஏய், இது போங்காட்டம், யாருலே நீ?, சொல்லிட்டுப்போ'' ன்னு மக்கமாருங்க கொரலு குடுக்கவும், 'மை நேம் இஸ் அலெக்சு, ஐ திங்க்கு அவுட்சைட் த பாக்சு' ன்னு சொல்லிட்டுப்போனானாம். இந்த சேதி ஊரெல்லாம் பரவிச்சாம். ராசாவும் எதிரிங்களோட பயத்தில சுலபமா செயிச்சிக்கிட்டே வந்தானாம். பாரசீகத்தில இவன் வர்றதை பாத்ததுமே ஒரு ராசா பயந்து ஓடிட்டானாம். நம்ம ராசா நேர மாளிகைக்குள்ள நுழைஞ்சானாம். 'அம்மாடீ, நாம எல்லாரும் இன்னியோட முடிஞ்சம்' என அரச பெண்டு பிள்ளைகள்லாம் பதற, ஓடிப்போன ராசாவோட அம்மா மட்டும் பயப்படாம நம்ம ராசா

சிறகு வேண்டுதல்!

சிறு வண்ணப்பூச்சியின் சிறகசைப்பு தீர்மானிக்குமாம் புவியின் மறுகோடியில் பெய்யும் மழையை! நம் கண்ணுக்குத்தெரியாத சூட்சும இழைகளால் பின்னப்பட்டிருக்கும் இவ்வுலகின் இயக்க ஆற்றலை நம்மால் உணர மட்டுமே முடியும். அதுவும் நம் அறிவை சற்றே ஒதுக்கி வைக்கும் தருணங்களில் மட்டுமே! அறிவியலின் எல்லைக்கு வெளியேயும் முடிவற்ற இந்த இழைகள் நீண்டுகொண்டே செல்லும்.  அடி நுனி காண்பதல்ல நம் வாழ்வின் நோக்கம். நீக்கமற நிறைந்திருக்கும் வாழ்வின் கண்ணிகளை 'நோக்குதல் மறந்து நோக்குதலே' நம் படைப்பின் மூலம். நாம் சந்திக்கும் ஒவ்வொரு பறவையையும், விலங்கையும் நட்போடு கண் நோக்க நாமும் இந்தக்கண்ணியில் இணைவோம் என்பது ஒரு ஆப்பிரிக்க நம்பிக்கை. பார்வைகளின் சந்திப்புகள் கூடக்கூட கண்ணிகளின் அடர்த்தியும் கூடுமாம். இந்தக்கண்ணிகளை பிணைக்கும் 'கரங்களாய்' மரங்களும் தாவரங்களும் என்பது எனது நம்பிக்கை. மனிதர்களை சற்றே விடுத்து மரங்கள், மலர்கள்,  பறவைகள், விலங்குகள், பூச்சிகள் என சற்றே நோக்கித்தான் பாருங்களேன்! 

வருமா?

பருவமழை தொடர்ந்து பொய்த்துக்கொண்டே இருக்கிறது. இனி வரும் காலங்களில் அவற்றின் அளவு குறையலாம், காணாமலே போகலாம். ரமணன் போன்றவர்களுக்கு 15 minutes of fame கிட்டாமல் போகலாம். டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மழை முன்கணிப்பின் அடிப்படையில் எந்த மாதத்தில் எந்த வகை நெல் பயிரிட வேண்டும், நெல்லுக்கு பதிலாய் சிறு தானியங்கள் பயிரிடலாமா என்பது போன்ற பயனுள்ள தகவல்களை யார் தருவார்? எப்போது? எவ்வழியே? சென்னை வெதர்மேன் தமிழ்நாடு வெதர்மேனானது பெரிய முன்னேற்றம். ஆனால் அவரால் மழைக்காக ஏங்கும் ஆறு கோடிப்பேருக்கு வருடம் முழுதும் தகவல் அளிக்க இயலாது. (இப்பவே அவரை வாதம் வம்புகளில் இழுக்கிறார்கள், இன்னும் பாப்புலரானால் வழக்கும் வரலாம்!). இயலும் நிலையில் உள்ள அரசுத்துறைக்கோ மக்களை உடனடியாக reach செய்வதில் கட்டுப்பாடுகள் / தடைகள் ஏராளம் (bureaucratic hurdles). தகவல் தொழில்நுட்பத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம்...நம் மக்களுக்கும் பயன்பட்டால் நலம்.  மண்ணை வளமாக்க வேண்டிய விவசாய பல்கலையோ மண்ணைக்கெடுக்கும் துரித சேவையில்... எனக்கு அவர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளில் சில, எடுத்துக்காட்டாக: அ

என் விழித்திரையில் - 2 : Il Postino - தபால்காரர்

இத்தாலியில் ஒரு சிறு தீவு. ஒரு மீனவன், தலைமுறையாய் மீனவனாய் இருப்பதன் துயரம் உணர்ந்தவன். வேறு வேலைக்காக ஏங்குபவன், சிறிது கம்யூனிச ஆர்வலன். உலகம் புகழும் ஒரு கவிஞர், பாப்லோ நெரூடா. சொந்த நாட்டில் அவரது அரசுக்கெதிரான நிலைப்பாட்டினால் நாடுகடத்தப்பட்டு இந்த இத்தாலிய சிறு தீவில் சில மாதங்கள் தங்க வருகிறார். இருவரையும் பிணைக்கிறது கவிஞரின் ரசிகர் கடிதங்கள். கூடை கூடையாக வரும் கடிதங்களை அவரிடம் கொண்டு சேர்க்க தபால் ஆபீசுக்கு ஆள் தேவைப்பட்டு நம் மீனவர் தற்காலிக தபால்காரர் ஆகிறார். ஏராளமான கடிதங்களை வாரத்தில் பலமுறை சைக்கிளில் கடல்மணல் சாலைகளில் சென்று சேர்க்கிறார்.  கவிஞருடன் சிற்றுரையாடல் நீள்கிறது. தபால்காரருக்கு கவிதைத்தீ பற்றிக்கொள்கிறது. கவிஞரின் கவிதையை தனதாய் பாவித்து காதலில் வென்று கணவனாகிறார். குழந்தை பிறப்பதற்கு முன்பே நெரூடா தாயகம் மகிழ்வுடன்  திரும்புகிறார்.   சென்று நெடுநாட்களுக்கு பிறகு நெரூடாவின் உடைமைகளை pack செய்து அனுப்பச்சொல்லி நெரூடா office இலிருந்து கடிதம், தபால்கார ரைப்பற்றிய விசாரிப்பு எதுவும் இன்றி. Pack செய்கையில் நெரூடாவின் டேப் ரெகார்டர்

மூன்று பிகா நிலத்தில் விதைத்தது...

துப்பாக்கிகளுக்கும் அடியாட்களுக்கும் மத்தியில் ராஜ்குமார் சுக்லா.  'இந்த வருஷ ஒப்பந்தப்படி உன்னோட நிலத்தில 3 பிகா கவுரி (indigo plant - source of blue dye) விளைச்சல் எங்க?' 'ஐயா, நாடே அறியும் கடும் பஞ்சமுன்னு. புல்லு கூட முளைக்கலய்யா' 'Nonsense, you must pay the assumed harvest price plus the forty odd taxes we imposed on farming. If you don't pay up, we shall confiscate all your lands and properties!' பாதிப்பு அவனுக்குமட்டுமில்லை, சம்ப்பரண் கிராம விவசாயிகள் அனைவருக்கும்தான். பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான இயற்கை ஊதா சாயம் தரும் பயிரை அங்குள்ள விவசாயி ஒவ்வொருவரும் தம் நிலத்தில் கட்டாயமாக சுமார் இரண்டு ஏக்கரில் பயிரிட்டு (3 bigha / 3 kathiya) நிறுவனங்களின் ஏஜண்டுகளிடம் தரவேண்டும். விவசாயம் செய்ய ஏராளமான வரிகள். நீலச்சாய விலை குறைந்தால் விவசாய வரி கூடும்! கட்ட முடியாதோர் அடி, உதை இன்னபிற கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு நிலம் பிடுங்கப்பட்டு துரத்தப்படுவர் / சிறையில் அடைக்கப்படுவர். நீலச்சாய விலை வெளிக்காரணங்களால் (external factors)

அபார வெண்மை, அய்யகோ!

கட்டுக்கடங்காத மகிழ்ச்சியில் கிராமம் நோக்கி பயணம். இந்த கிராமத்து விதை ஒண்ணு இந்தியாலயே பெரிய software company யில கிளை விரிக்கப்போறதுன்னா சும்மாவா பின்னே? இந்தியா தனது விவசாயம் சார்ந்த மக்களுக்காக முயற்சித்த பல பொருளாதாரக்கனவுகளை கைவிட்டு உலகமய சோதியில் கலந்த தருணத்தில்தான் எனது துள்ளல் பயணம். தாத்தா அந்த ஊரில் மதிப்புடன் வாழ்ந்தவர். அவரை அறிந்தவர்களை இன்றும் 'அவரைப்போல யாரு இருக்கா இப்ப' என nostalgiaவில் முழுகச்செய்பவர். அவர் வீட்டில் எந்நேரமும் மனிதர்கள், விலங்குகள் புழங்கிக்கொண்டிருந்த காலம். கிணற்றில் பத்தடியில் தண்ணீர் (சாமி சத்தியமா!). வீட்டுக்கொல்லையில் மா, பலா, வாழை, கொய்யா, தென்னை, முருங்கை, காய்கறிச்செடி கொடிகள் என கலந்து கட்டி...கிணற்று நீர் பயன்பாடு முடிந்ததும் கடமையாய் இவைகளின் வேர் தேடி ஓடும். ஊர் மக்களுக்கு, குறிப்பாக வேலைநாட்களுக்கு சிம்ம சொப்பனம். கரடுமுரடான பலாப்பழ மனிதர். இதயம் அவ்வளவு இனிமை, ஆனால் a feudalist, typical product of his times. அவருடன் சமத்துவ வாள் சுழட்டி அநேகமுறை சிறுவயதிலேயே மோதியதால் 'சின்ன அய்யா the rebel' என்ற முத்திர