சிறு வண்ணப்பூச்சியின் சிறகசைப்பு தீர்மானிக்குமாம் புவியின் மறுகோடியில் பெய்யும் மழையை!
நம் கண்ணுக்குத்தெரியாத சூட்சும இழைகளால் பின்னப்பட்டிருக்கும் இவ்வுலகின் இயக்க ஆற்றலை நம்மால் உணர மட்டுமே முடியும். அதுவும் நம் அறிவை சற்றே ஒதுக்கி வைக்கும் தருணங்களில் மட்டுமே!
அறிவியலின் எல்லைக்கு வெளியேயும் முடிவற்ற இந்த இழைகள் நீண்டுகொண்டே செல்லும்.
அடி நுனி காண்பதல்ல நம் வாழ்வின் நோக்கம். நீக்கமற நிறைந்திருக்கும் வாழ்வின் கண்ணிகளை 'நோக்குதல் மறந்து நோக்குதலே' நம் படைப்பின் மூலம்.
நாம் சந்திக்கும் ஒவ்வொரு பறவையையும், விலங்கையும் நட்போடு கண் நோக்க நாமும் இந்தக்கண்ணியில் இணைவோம் என்பது ஒரு ஆப்பிரிக்க நம்பிக்கை. பார்வைகளின் சந்திப்புகள் கூடக்கூட கண்ணிகளின் அடர்த்தியும் கூடுமாம். இந்தக்கண்ணிகளை பிணைக்கும் 'கரங்களாய்' மரங்களும் தாவரங்களும் என்பது எனது நம்பிக்கை.
மனிதர்களை சற்றே விடுத்து மரங்கள், மலர்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள் என சற்றே நோக்கித்தான் பாருங்களேன்!
கருத்துகள்
கருத்துரையிடுக