முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூன்று பிகா நிலத்தில் விதைத்தது...


துப்பாக்கிகளுக்கும் அடியாட்களுக்கும் மத்தியில் ராஜ்குமார் சுக்லா. 

'இந்த வருஷ ஒப்பந்தப்படி உன்னோட நிலத்தில 3 பிகா கவுரி (indigo plant - source of blue dye) விளைச்சல் எங்க?'

'ஐயா, நாடே அறியும் கடும் பஞ்சமுன்னு. புல்லு கூட முளைக்கலய்யா'

'Nonsense, you must pay the assumed harvest price plus the forty odd taxes we imposed on farming. If you don't pay up, we shall confiscate all your lands and properties!'

பாதிப்பு அவனுக்குமட்டுமில்லை, சம்ப்பரண் கிராம விவசாயிகள் அனைவருக்கும்தான்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான இயற்கை ஊதா சாயம் தரும் பயிரை அங்குள்ள விவசாயி ஒவ்வொருவரும் தம் நிலத்தில் கட்டாயமாக சுமார் இரண்டு ஏக்கரில் பயிரிட்டு (3 bigha / 3 kathiya) நிறுவனங்களின் ஏஜண்டுகளிடம் தரவேண்டும். விவசாயம் செய்ய ஏராளமான வரிகள். நீலச்சாய விலை குறைந்தால் விவசாய வரி கூடும்! கட்ட முடியாதோர் அடி, உதை இன்னபிற கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு நிலம் பிடுங்கப்பட்டு துரத்தப்படுவர் / சிறையில் அடைக்கப்படுவர்.

நீலச்சாய விலை வெளிக்காரணங்களால் (external factors) தாறுமாறு. உணவுப்பஞ்சமும் சேர்ந்து கொள்ள விவசாயிகளின் பசிக்கூக்குரல் மெள்ள மெள்ள மரண ஓலமாய் தேய்ந்த காலம்.

ஏழை விவசாயியின் சொல் அந்தம்பலத்தில் ஏறவில்லை.

ஓடினான், அருகில் உள்ள ஊரில் கூடிய அறிஞர் கூட்டத்தில் முறையிட. 'தயவு செய்து சம்பரணுக்கு வாருங்கள். ஒரு முறையாவது' என்ற அவனது ஓலம் சிறிதளவே கவனிக்கப்பட்டது அக்கூட்டத்தில்.

ஆனாலும் விடாது கதவைத்தட்டினான் தொடர்ந்து. அது உள்ளூர் அரசியலில் முதல் அடி வைத்த ஒரு வக்கீலின் கதவு.

சில மாத தட்டலுக்குப்பின் அந்த வக்கீல் ஒரு சிறிய ஆனால் சீரியசான குழுவோடு ராஜ்குமார் சுக்லாவின் ஊருக்கு செல்கிறார். கள ஆய்வுகள் செய்கிறார்கள். ஊர் மக்களின் நிலையை அறிகிறார்கள். வரி கட்ட வேண்டாம். நீலச்சாயப்பயிரும் வேண்டாம் என வலியுறுத்துகிறார் அந்த வக்கீல். கட்டுப்பட்ட கூட்டம் அப்படியே செய்ய, நிலம் பிடுங்கப்படுகிறது. சிறை தண்டனையும் பாய்கிறது. சொத்து வரி சில விகிதம் ஏற்றப்பட்டாலே கவுன்சிலர் முதல் கோர்ட் வரை முறையிடுவது எல்லாம் பழகாத அந்த ஏழை ஒவ்வொருவரும் அமைதியாக தம் சொத்துகளை அரசு பிடுங்க அனுமதிக்கிறார்கள். ஆனால் புறக்கணிப்பு புறக்கணிப்புதான்; no more 3 bighas, no more taxes and no more indigo!
அரசு பிடுங்கிய நிலங்களை யார் யாருக்கோ தாரை வார்க்கிறது. சிறு எதிர்ப்பு கூட இல்லை. அதிர்ந்த அரசு சமாதானத்திற்கு அழைக்கிறது (we need indigo for our business; our business keeps us afloat).

வரிகளைத்தளர்த்துகிறது. மூன்று பிகா கட்டளையையும் திரும்பப்பெறுகிறது. 
Then magic happens! Every single farmer who gave up his / her land gets it back from current owners either voluntary or by moral pressure exerted silently on them!

உள்ளூர் அரசியல் அதிகம் பழகாதவர், சம்ப்பரண் எந்தப்பக்கம் இருக்கிறது என்பதையே ஒரு வருடம் முன்பு அறித்திராதவர், ஒரு சாதாரண வக்கீலை மகாத்மாகவா மாற்றிய, உலகம் கண்டிராத, வலிமையான 'சத்தியாக்கிரகம்' எனும் 'அறப்போர்' ஆயுதம் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது அங்குதான்.  சத்தியாக்கிரகத்தை அடிநாதமாய்க்கொண்ட நம் நாட்டு விடுதலையின் முதல் விதை சம்ப்பரணில் உள்ள இந்த மூன்று பிகா நிலத்தில்தான் மகாத்மாவால் விதைக்கப்பட்டது...

மகாத்மாவை மகா ஆத்மா ஆக்கியவருள் ஒருவரான ராஜ்குமார் சுக்லா பொருளாதார மேம்பாடு ஏதும் அடையாமலே இறந்துபோனார். அவரை நினைவேந்துவோர் அதிகமில்லை...

சம்ப்பரண் போராட்டம் முடிந்து சரியாக நூறு ஆண்டுகள் ஆச்சி. தடுக்கி விழுந்தாலே மாபெரும் அரசு விழா நடத்தப்படும் நிகழ்காலத்தில் இந்த மாபெரும் நிகழ்வு எப்படியெல்லாம் கொண்டாடப் பட்டிருக்கவேண்டும்?!

இன்றும் விவசாயிகள் பசியோடே உறங்குகின்றனர். மூன்று பிகா மட்டுமல்ல, மொத்த நலமுமே சந்தைகளால் கடிவாளமிடப்பட்டு, தரகர்களுக்கு லாபத்தையும் உற்பத்தியாளருக்கு தற்கொலையையும் தருவதற்கே பயன்படுத்தப்படுகிறது. மகாத்மா மட்டுமே missing!

சந்தைப்பெருவணிகக்கயிற்றில் ஊசலாடும் பொருளாதாரக்கொள்கைகளில் சிக்கிய இந்திய விவசாயியின் கதி என்ன தெரியுமா? சிறு விவசாயிக்கு சில லட்சம் கடன், பெரு விவசாயிக்கு பல லட்சம் அதே!

Just think about it; there is no life security for farmers and farm labourers, forget food security and shelter! இந்தியாவில் இன்றளவும் சந்தைப்பொருளாதார (market driven economics) அழுத்தத்தில் மனச்சிதைவின் விளிம்பில் தொங்கிக்கொண்டு வாழத்தவிக்கும் இவர்களில், ஒரு நாளில் பாம்பு கடித்து இறக்கும் விவசாயிகள் எத்தனை பேர் என்று உங்களுக்கு தெரியுமா?

எந்திரங்களாலான உற்பத்திப்பொருளாதாரத்தில் கடைநிலை ஊழயருக்கும் எத்தனை பாதுகாப்பு வசதிகள்? தலைக்கவசம் முதல் காலுறை வரை? ஆயுள் காப்பீடு, விபத்துக்காப்பீடு, மருத்துவக்காப்பீடு ஓய்வூதியம் என எத்தனை எத்தனை! ஆனால் இவர் அனைவருக்குமான உணவை உற்பத்தி செய்பவர்க்கு என்ன பாதுகாப்பு வளையங்கள் அமைத்துத்தந்துள்ளோம் இதுவரை?

விவசாயிகள் ஏனைய மக்களுக்காக உழைக்கும் ஊழியர்கள் இல்லையா என்ன? அரசுத்துறை, தனியார் துறை என்று பிரிக்கும் எல்லைக்கோடு, துறைஅறியாத இவர்களின் வயிற்றைக்கிழித்துச்செல்வது தெரியவில்லையா உதிரம் மறைக்கும் நம் கண்களுக்கு?

நூறாண்டுகளுக்குமுன்னர் பீகாரில் விதைத்ததை இன்னும் எவ்வளவு ஆண்டுகளுக்கு கண்ணீரால் மட்டுமே காப்பது?

கருகத்திருவுளமோ!?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்