முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் விழித்திரையில் - 2 : Il Postino - தபால்காரர்


இத்தாலியில் ஒரு சிறு தீவு. ஒரு மீனவன், தலைமுறையாய் மீனவனாய் இருப்பதன் துயரம் உணர்ந்தவன். வேறு வேலைக்காக ஏங்குபவன், சிறிது கம்யூனிச ஆர்வலன்.

உலகம் புகழும் ஒரு கவிஞர், பாப்லோ நெரூடா. சொந்த நாட்டில் அவரது அரசுக்கெதிரான நிலைப்பாட்டினால் நாடுகடத்தப்பட்டு இந்த இத்தாலிய சிறு தீவில் சில மாதங்கள் தங்க வருகிறார்.

இருவரையும் பிணைக்கிறது கவிஞரின் ரசிகர் கடிதங்கள். கூடை கூடையாக வரும் கடிதங்களை அவரிடம் கொண்டு சேர்க்க தபால் ஆபீசுக்கு ஆள் தேவைப்பட்டு நம் மீனவர் தற்காலிக தபால்காரர் ஆகிறார்.
ஏராளமான கடிதங்களை வாரத்தில் பலமுறை சைக்கிளில் கடல்மணல் சாலைகளில் சென்று சேர்க்கிறார். 

கவிஞருடன் சிற்றுரையாடல் நீள்கிறது. தபால்காரருக்கு கவிதைத்தீ பற்றிக்கொள்கிறது. கவிஞரின் கவிதையை தனதாய் பாவித்து காதலில் வென்று கணவனாகிறார். குழந்தை பிறப்பதற்கு முன்பே நெரூடா தாயகம் மகிழ்வுடன்  திரும்புகிறார்.  

சென்று நெடுநாட்களுக்கு பிறகு நெரூடாவின் உடைமைகளை pack செய்து அனுப்பச்சொல்லி நெரூடா office இலிருந்து கடிதம், தபால்கார ரைப்பற்றிய விசாரிப்பு எதுவும் இன்றி.

Pack செய்கையில் நெரூடாவின் டேப் ரெகார்டர் அவர் கண்ணில் பட, பரவசமாய் எடுத்து பயன்படுத்த தொடங்குகிறார். தபால் வேலை நெரூடாவோடு போச்சி. மீனவ வாழ்வில் விருப்பமின்றி அந்தத்தீவின் ஒலி அனைத்தையும் ஒரு கேசட்டில் பதிவு செய்து அதன் இறுதிப்பதிவாக தன் குழந்தையின் இதயத்துடிப்பை பதிகிறார்.

இடையில் கிடைக்கும் நேரத்தில் சொந்தமாய் கவிதை எழுதுகிறார். ஒரு கம்யூனிஸ கூட்டத்தில் தனது கவிதையை படித்துக்காட்டுகையில் சட்ட ஒழுங்கினால் கூட்டம் கலைக்க, நகழ்ந்த கலவரத்தில் குண்டடி பட்டு மரிக்கிறார்.

பின்னாளில் பாப்லோ நெரூடா அத்தீவுக்கு வருகிறார். தபால்காரரின் மனைவி, மகனை சத்திக்கிறார். அப்போது மனைவி அந்த கேசட்டை நெரூடாவிடம் தருகிறார். பாதி screen இல் நெரூடா தீவின் கடற்கரையில் நடக்க மறு  பாதி screen இல் தபால்காரர் கொல்லப்பட்ட கம்யூனிஸ கூட்டம் அப்போதுதான் கூடத்தொடங்குகிறது.

இந்தப்படம் என்ன சொல்கிறதென்றால்...வேண்டாம், விட்டுடலாம். நெட்டில நிறையவே கொட்டிக்கிடக்கு.

இந்தப்படம் ஒரு 'காணனுபவம்'! படம் பார்க்கும் நேரம் முழுதும் ஒரு இத்தாலியத்தீவின் மீனவ வலையில் விரும்பி சிக்குண்டதுபோல மாய அனுபவம்! அதற்காகவே பார்க்கலாம். கூடவே நெரூடாவின் கவிதைகள், கவிதைகள்!- கண் திறந்து கனவில் திளைக்கவைக்கும்.

Sample this:

And now you’re mine
---------------------------------
Now, you are mine. Rest with your dream inside my dream. 
Love, pain, and work, must sleep now. 
Night revolves on invisible wheels 
and joined to me you are pure as sleeping amber.

No one else will sleep with my dream, love. 
You will go; we will go joined by the waters of time. 
No other one will travel the shadows with me, 
only you, ever green, ever sun, ever moon.

Already your hands have opened their delicate fists 
and let fall, without direction, their gentle signs, 
your eyes enclosing themselves like two grey wings, 
while I follow the waters you bring that take me onwards: 
night, Earth, winds weave their fate, and already, 
not only am I not without you, I alone am your dream.

சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று, மிகச்சிறந்த காதல் படங்களிலும் ஒன்று!

கதையின் நாயகனுக்கு, நம் தபால் காரருக்கு, இப்படம் அவரது வாழ்நாள் கனவு. இருபது வயதில் படித்த கதையை திரைப்படமாக்க இன்னும் இருபது ஆண்டுகள் முயற்சித்து, பழுதான இதயத்துடன் (postponed his heart transplant operation just to complete this film) ஒரு நாளில் ஒரு மணி நேரம் மட்டுமே நடிக்க இயலும், அதிலும் மிக சிரமத்துடனே என்ற நிலையில் கனவு மெய்ப்படவும் உயிரைத்துச்சமாக மதித்து படத்தில் நடித்து முடித்த மறுநாளில் மாரடைப்பால் மாண்டுபோன ஒரு பெருங்கலைஞன், மாஸிமோ ட்ரோய்சி. படம் பார்த்து முடித்தபின் மறுமுறை பாருங்கள், படத்தில் இவரது கைகளை மட்டும், கைகளுக்காக மட்டும்!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்