உலகின் ஒப்பற்ற வீரன் இறந்தபின்னும் இன்றுவரை அலைந்துகொண்டே இருக்கும் அவலம் தெரியுமா?
20 வயதில் தொடங்கிய போர் முழக்கம் 32 இல் அவன் இறக்கும்வரை சுருதி குறையவில்லை. சென்ற இடமெங்கும் வெற்றி, வெற்றியன்றி வேறில்லை.
உலகெங்கும் தன் குடையின் கீழ் கொணர அவன் தொடங்கிய, தொடர்ந்த முடிவற்ற யுத்தம் அவனைத்தின்று எச்சமிட்டு, கடந்து, சுற்றிக்கொண்டிருக்கிறது இன்றளவும், அவன் சடலம் போலவே, அவன் மிச்சத்தைத்தேடியே!
உலகாண்ட ஒற்றை மனிதனுக்கு ஆறடி நிலமும் நிரந்தரமில்லை. வழி வந்தவர்களின் வெற்றிக்கோப்பையாய் மாறிய அவனது மிச்சம், கடத்தப்பட்டு, பூஜிக்கப்பட்டு, களவாடப்பட்டு, மீண்டும் மீண்டும் இடம் மாற்றப்பட்டு, கண்டெடுக்க இயலாததாகவே இன்று வரையில். ஆள் மாறாட்டம் கூட நிகழ்ந்திருக்கலாம். வேறு யார் பெயரிலோ இங்கிருக்கும் மிச்சம் அவரதுதான், இல்லையில்லை அங்கிருக்கும் மிச்சம்தான் உண்மையில் அவரது என பஞ்சாயத்துகளும் நடந்துகொண்டே இருக்கிறது.
அப்படி என்னதான் பேராவல் நமக்கு அவனது மிச்சத்தின் மேல்?
Closure...அவனது இன்றைய தங்குமிடம் கண்டுபிடித்து நினைவு மாளிகை ஒன்று எழுப்பி மரியாதை செலுத்துவோருக்கு வழிசெய்யத்தான் என்றாலும், he being probably the first and biggest global brand of our ancient world, it also means a billion bucks in tourism revenue!
ஒரு நாள் எஞ்சியிருக்கும் அவனது மிச்சம் கண்டுபிடிக்கப்படலாம். அந்த நாளில் யுத்தங்கள் அனைத்தும் ஓய்வுக்கு வரலாம்...
அதன்பின்னாவது அலெக்ஸாண்டர் தி கிரேட் யுத்தத்திற்கு தந்த 'விலை'யை நாம் உணரலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக