முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தீற்றல்

இருட்டுப்பெருமரமெங்கும் தீப்பொறி சிதறலாய்  சிற்றூரின் வயல்நடுவே முன்னிரவில் காண்பவரின் கனவுக்கு பாதையிட்டு  இருளில் கரைந்துபோகும் வால்வெளிச்சம், ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம்... கண்டு கடந்துபோன நொடியில் வாழ்ந்து முடித்த வாழ்வின்  மிச்சம் ஊறிய கருவிழிகளில்  உடைந்த நிலவாய் உறைந்துமின்னும் இன்னுமந்த  வால்வெளிச்சம். காலமென்ற ஒன்றே  மின்மினியாய் மின்னிமறைந்த பேரிருளில் கரைந்துபோன ஒற்றைமரம் விடிந்ததும் தன்னைத்தேடி தன்னையடைந்து தனியே தன்னந்தனியே மின்மினிக்காய் காத்திருக்கும் மீண்டுமங்கே. என்ன முயன்றும் அதேமரம் ஆகாது அம்மரம். என்ன முயன்றும் மின்மினியாகாது சூரியனும், ஒருபோதும். இருளும் ஒளியும் கூடிக்கலந்து கலைந்து பிரிந்து மீண்டும் கூடிக்கலந்து... ஆடிச்செல்லும் காலத்தின் பெருநடனம். x

பொறுக்க மறந்த கோழி

கோழியொன்று கையிலே பையுடன் ரேஷன் கடைக்கு புறப்பட்டது. எதிரில் வந்த பலநாள் நட்புக்களுடன் வணக்கம் பறிமாறிக்கொண்டே வந்ததில் லேட் ஆகிப்போச்சி. ரேஷன் கடையை இழுத்து மூடி கடைக்காரனும் புறப்பட்டு போயாச்சி. பொட்டு அரிசி கூட தரையில் சிந்தாமல் டெக்னாலஜி துணையோடு பட்டுவாடா நடப்பதால் துடைத்து எடுக்கவும் ஒன்றுமில்லை.  இனி அடுத்த வாரம்தான் அரிசி கிடைக்கும் என்ற நினைவில் கொண்டையை தொங்கப்போட்டுக்கொண்டு வெயிலில் உஸ் உஸ் என காற்றை ஊதிக்கொண்டு அலுவலகம் நோக்கி நடையை கட்டியது. நிழலுக்கு ஒதுங்க மரங்களில்லை. தார் சாலைகள் அதன் கால் தோலை வறுக்க, வயிற்றை பசி கிள்ள, தள்ளாடி தள்ளாடி நடைபோட்டது. சாலையில் விரையும் வாகனங்களில் செல்பவர் எவரும் கோழியை கவனித்ததாக தெரியவில்லை. கழுத்தில் தொங்கும் அடையாள அட்டைகூட சுமக்கமுடியாத கனமாக ஆகிப்போன உணர்வில் எட்டி நடை போட்டது. கண்கள் செருகி கால்கள் பிண்ணி தரையில் சாய்ந்து மயக்கமாகிப்போன அந்த நொடிகளில் அதன் நினைவுப்படலத்தில் விரிந்தது காட்சியொன்று... 'மரங்கள் அடர்ந்த பச்சை நிலம். விதம் விதமான வண்ணங்களில் பறவைகள், விலங்குகள், பூச்சிகள், மலர்கள்,

சாமீ என் வூட்டக்காணோம் சாமீ!

அண்மையில் கோவாவில் ஒரு கிராமத்தில் பசு மாடுகளை புலி அடித்துக்கொன்று தின்றதாக கொதித்தெழுந்த ஊர் மக்கள் ஊருக்கு அருகில் உள்ள ஒரு விலங்குகள் காப்பகத்தில்(!) மூன்று குட்டிகளுடன் அடைபட்டிருந்த ஒரு புலிக்கும் குட்டிகளுக்கும் சேர்த்து விஷ உணவு தந்து அனுப்பி விட்டார்கள். இது தொடர்பாக ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் நேற்று சட்டசபையில் ஆணித்தரமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்; 'மனிதர்கள் பசுக்களை வதைத்து தின்றால் தண்டனை தருகிறோம். அதுபோல புலிகளையும் தண்டிக்கவேண்டுமல்லவா?' 1. ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து வலம்வரும் புலி மனுஷனைக்கடிக்கும்போது "கண்டதும் சுட உத்தரவு" என்பது மாறிப்போய், 'ஆட்டைக்கடித்தால் சுடு, மாட்டைக்கடித்தால் சுடு' என அரசாணை பிறப்பிக்கலாம். 2. விலங்கு உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பரித்தால் அடக்கலாம், நசுக்கலாம் அல்லது போனால் போகிறதென்று Animals Penal Code வரையறுத்து, இன்னன்ன குற்றங்களுக்கு இன்னன்ன தண்டனைகள் என வடித்து, விலங்குகள் சார்பாக வாதாட வழக்கறிஞர்களை வளர்த்து, சட்ட மன்றங்களில் வாதாடவைத்து, சேதாரம் பொறுத்து செய்கூலி தண்டனைகள் வழங்கலாம். Only N

ஆகவே ஆகாது

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் மனம் மனம் அது கோவிலாகலாம் மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம் வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம் ... இதை விட்டு மலையில கடுகை தேடினால் காண்பதெல்லாம் கடுகாய் தெரியுதே, கண்ணு எரியுதே... காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் காணும் திசையெலாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்க களியாட்டம்... கொட்டடா ஜெய பேரிகை கொட்டடா! பாரதிக்கு இருந்த பார்வை, அனைத்துயிரையும் நேசித்த பார்வை. அன்றும் இன்றும் காக்கை குருவியிடம் அடையாள அட்டைகள் இல்லை. இன்றைய நம் மண்ணின் மைந்தர்க்கு சக மனிதர்கள் மீதான நம்பிக்கைக்கு ஏனோ குறிப்பிட்ட வண்ணங்கள் தேவை என்றானது... குறிப்பிட்ட அடையாளமுள்ளவருக்கு குடியுரிமை கிடையாது என்ற நிலைப்பாட்டைவிட அவர்கள் நம் மண்ணில் இத்தனை ஆண்டுகள் இருந்திருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பித்து குடியுரிமை பெறலாம் என்று மாற்றலாமே... அவர்களது வேற்று வண்ண ஆத்மார்த்த நட்புகளின் உத்தரவாதம் வேண்டுமென்றாலும் கேட்டுப்பெறலாமே? இந்தியாவிலிருந்து மேலை நாடுகளில் குடியுரிமை பெற்று

போந்தா கோலி

சுரேஷும் நானும் பக்கத்து பக்கத்து லைன் வீடு. பதின்பருவம். ஒரே வயது, வெவ்வேறு பள்ளிகள். கோலிக்குண்டு எங்களை நட்பாக்கியது, முட்டிக்கொள்ள வைத்தது, நட்பாக்கியது. வீட்டுக்கு வெளியே மண் தரை. மழை விழுந்து இறுகி மேலே மணல் படிந்து என கோலி குண்டு விளையாட சரியான பதத்தில். பள்ளி முடிந்த நேரங்களில், விடுமுறை தினங்களில் கால் டவுசர் பைகளில் கோலிக்குண்டுகள் சிணுங்க சிணுங்க விளையாடுவோம். பதினைந்தடி தூரத்தில் இடமிருந்து வலமாக ஒரு கோடு கிழிப்போம். கோட்டிலிருந்து இரண்டு அடிகள் மேலே தள்ளி ஒரு சிறு குழி எடுப்போம், சில கோலிகள் மட்டும் சிக்கும் அளவில். கோலி வீரர்கள் வரிசையாய் அணிவகுத்து ஆளுக்கு இத்தனை கோலி (ஒன்றிலிருந்து கைகொள்ளும்வரையிலான அளவில் பந்தயம் கட்டலாம், எல்லா வீரர்களும் ஒரே எண்ணிக்கையில் கட்டவேண்டும் ) என முடிவுசெய்து, சாட் பூட் த்ரீ போட்டு ஓபனிங் அண்ட் ப்ளேயிங் ஆர்டரை முடிவு செய்வோம். அந்த வீரரும் குறிப்பிட்ட இடத்திலிருந்து கோடு தாண்டி கோலிகளை வீசுவார். குழியில் விழுந்த கோலிகள் அவருக்கே சொந்தம். எஞ்சிய கோலிகளில் எதை அடிக்கவேண்டும் என வரிசையில் அடுத்து உள்ள

பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்

பாரத தேசமென்று... மிகப்பெரிய வணிகன், செல்வந்தன், ஒரு நாள் திடீரென அனைத்தையும் துறந்து வீட்டை விட்டே வெளியேறுகிறான், உறவின் பொன் சங்கிலிகளிலிருந்து விடுபட்டு. பிச்சை பெற்று உண் என உடல் வளர்த்து இறையோடு சேர ஏங்குகிறான். "கண்காணாமல் தொலைந்து போய் பிச்சை எடுத்தாலாவது நம் மானம் தப்பும். சொந்த ஊரிலேயே, நம் ஊரிலேயே, நம் வீட்டுக்கு வெளியே இப்போது பிச்சை கேட்டு நிற்கிறானே, மானக்கேடாய் இருக்கிறதே! செத்து ஒழிந்தால்தான் நிம்மதி" என நஞ்சில் தோய்த்து அப்பம் தருகிறாள் சகோதரி. நஞ்சு உண்ட இறை ஆட்கொண்ட ஆன்மாவல்லவா பிச்சை கேட்டு நிற்கிறது! நஞ்சுண்டன் அறியாத நஞ்சா? அப்பத்தை தூக்கி வீட்டு ஓட்டுக்கூரையில் தூக்கி எறிந்துவிட்டு பிச்சை சொன்னது இதுதான்; 'நஞ்சப்பம் நெஞ்சைச்சுடும், வீட்டப்பம் ஓட்டைச்சுடும்'. பற்றி எரிந்தது வீடு. இன்று பற்றி எரியுது நாடு. ஆன்மீகம் காற்றில் அலையும் தேசமிது. இதில் நஞ்சைத்தூவும் எதுவும் மிஞ்சாது. ஏனெனில் இது நஞ்சுண்டனின் தேசம். இந்த நெருப்பும் அணையும். நஞ்சுண்டனின் பூமியில் நஞ்சப்பம் தேவையில்லை என அநேகருக்கு மனதுக்கு எட்டியது

உயிரின் விலை 250 ரூபாய் மட்டுமே

இன்டர்நெட்டில் அரசு அலுவலர்கள் ஏராளமாய் இருக்கலாம். அவர்கள் படித்து மனது வைத்தால் இந்த பதிவு சேர வேண்டிய துறைகளுக்கு சென்று சேரும் என்ற நம்பிக்கையால் உந்தப்பட்டு இப்பதிவு... அரை அடி விட்டம், வெவ்வேறு ஆழங்களில் நாடு முழுதும் குழந்தைகளுக்காக காத்திருக்கின்றன புதைகுழிகள்.  ஆழ்துளை கிணறுகள் இரு வகை. வேளாண் நிலங்களின் நீர்த்தேவைகளுக்காக தோண்டப்படுபவை ஒரு வகை. இதற்கு பல மாநிலங்களில் அனுமதி தேவை இல்லை. குடி நீர் தேவையை தணிக்க என்ற போர்வையில் நீர் வணிகத்திற்காக அனுமதியின்றி கள்ளத்தனமாக தோண்டப்படுபவை இன்னொரு வகை. தோண்டிய ஆழத்தில் நீர் வற்றிப்போனால் வேறு இடத்தில் உடனே இன்னொரு குழி. நீரின்றி அமையாது உலகு அல்லவா! வேளாண் நிலங்களில் ஆழ்துளை கிணறுகள் தோண்ட அனுமதி கட்டாயமாக்கப்பட்டு, தோண்டிய ஆழ்துளை கிணறுகள் அடையாளமிடப்பட்டு மின் இணைப்பு எண்ணோடு அரசு நிலப்பதிவேடுகளில் பதியப்பட்டு, வில்லங்க சான்றிதழில் ஆழ்துளை கிணறு பயன்பாட்டில் உள்ளதா இல்லையா? இல்லையென்றால் மூடி போடப்பட்டுள்ளதா இல்லையா? (மூடியின் விலை 250 ரூபாயில் தொடங்குகிறது) என பதியப்பட்டு, பயன்பாட்டில் இல்லாத ஆழ