இன்டர்நெட்டில் அரசு அலுவலர்கள் ஏராளமாய் இருக்கலாம். அவர்கள் படித்து மனது வைத்தால் இந்த பதிவு சேர வேண்டிய துறைகளுக்கு சென்று சேரும் என்ற நம்பிக்கையால் உந்தப்பட்டு இப்பதிவு...
அரை அடி விட்டம், வெவ்வேறு ஆழங்களில் நாடு முழுதும் குழந்தைகளுக்காக காத்திருக்கின்றன புதைகுழிகள்.
ஆழ்துளை கிணறுகள் இரு வகை. வேளாண் நிலங்களின் நீர்த்தேவைகளுக்காக தோண்டப்படுபவை ஒரு வகை. இதற்கு பல மாநிலங்களில் அனுமதி தேவை இல்லை.
குடி நீர் தேவையை தணிக்க என்ற போர்வையில் நீர் வணிகத்திற்காக அனுமதியின்றி கள்ளத்தனமாக தோண்டப்படுபவை இன்னொரு வகை.
தோண்டிய ஆழத்தில் நீர் வற்றிப்போனால் வேறு இடத்தில் உடனே இன்னொரு குழி. நீரின்றி அமையாது உலகு அல்லவா!
வேளாண் நிலங்களில் ஆழ்துளை கிணறுகள் தோண்ட அனுமதி கட்டாயமாக்கப்பட்டு,
தோண்டிய ஆழ்துளை கிணறுகள் அடையாளமிடப்பட்டு மின் இணைப்பு எண்ணோடு அரசு நிலப்பதிவேடுகளில் பதியப்பட்டு,
வில்லங்க சான்றிதழில் ஆழ்துளை கிணறு பயன்பாட்டில் உள்ளதா இல்லையா? இல்லையென்றால் மூடி போடப்பட்டுள்ளதா இல்லையா? (மூடியின் விலை 250 ரூபாயில் தொடங்குகிறது) என பதியப்பட்டு,
பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடும் பொறுப்பை அந்த நிலம் அமைந்துள்ள ஊரின் வேளாண் அலுவலரிடம் ஒப்படைத்து,
அரசிடம் நிதியிருந்தால் அந்தக்கிணறையும் குறைந்த செலவில் மழைநீர் சேகரிப்பு கிணறாக மாற்றியமைத்து...
தீர்வு எளிதாக நடைமுறைபடுத்தப்படலாம்... ஏன் இயலவில்லை என்று இன்றளவும் தெரியவில்லை.
டெக்னாலஜி கொண்டு ரெஸ்க்யூ பணிகளை செய்யும் முயற்சி, புண்ணுக்கு மருந்திடுவது போன்றது. அது நிரந்தரத்தீர்வாகாது.
அனுமதியில்லா நீர் வணிகம் - இதன் முதுகெலும்பு இலஞ்சம், பேராசை. போர்வெல் நிறுவனங்கள், அரசு அனுமதி பெற்ற நிலங்களில் மட்டுமே துளையிடலாம் எனவும், உள்ளூர் வேளாண் அலுவலரின் கையொப்பம் பெற்ற பின்னரே போர்வெல் வண்டிகள் ஊருக்குள் / நிலத்தில் நுழையலாம் எனவும் சட்டங்கள் தீட்டி அமல்படுத்தினால்... குறையலாம்.
கொசுறு செய்தி: ஒரு ஆழ.துளை கிணறு செய்ய இலட்ச ரூபாய் செலவானாலும் பில் கிடையாது, GST கிடையாது. ஒன்லி கேஷ், இன்றுவரையில்.
கருத்துகள்
கருத்துரையிடுக