முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்


பாரத தேசமென்று...

மிகப்பெரிய வணிகன், செல்வந்தன், ஒரு நாள் திடீரென அனைத்தையும் துறந்து வீட்டை விட்டே வெளியேறுகிறான், உறவின் பொன் சங்கிலிகளிலிருந்து விடுபட்டு.

பிச்சை பெற்று உண் என உடல் வளர்த்து இறையோடு சேர ஏங்குகிறான்.

"கண்காணாமல் தொலைந்து போய் பிச்சை எடுத்தாலாவது நம் மானம் தப்பும். சொந்த ஊரிலேயே, நம் ஊரிலேயே, நம் வீட்டுக்கு வெளியே இப்போது பிச்சை கேட்டு நிற்கிறானே, மானக்கேடாய் இருக்கிறதே! செத்து ஒழிந்தால்தான் நிம்மதி" என நஞ்சில் தோய்த்து அப்பம் தருகிறாள் சகோதரி.

நஞ்சு உண்ட இறை ஆட்கொண்ட ஆன்மாவல்லவா பிச்சை கேட்டு நிற்கிறது! நஞ்சுண்டன் அறியாத நஞ்சா?

அப்பத்தை தூக்கி வீட்டு ஓட்டுக்கூரையில் தூக்கி எறிந்துவிட்டு பிச்சை சொன்னது இதுதான்; 'நஞ்சப்பம் நெஞ்சைச்சுடும், வீட்டப்பம் ஓட்டைச்சுடும்'.

பற்றி எரிந்தது வீடு.

இன்று பற்றி எரியுது நாடு.

ஆன்மீகம் காற்றில் அலையும் தேசமிது. இதில் நஞ்சைத்தூவும் எதுவும் மிஞ்சாது. ஏனெனில் இது நஞ்சுண்டனின் தேசம்.

இந்த நெருப்பும் அணையும். நஞ்சுண்டனின் பூமியில் நஞ்சப்பம் தேவையில்லை என அநேகருக்கு மனதுக்கு எட்டியது அறிவுக்கு எட்டாமல் போனது காலத்தின் கோலம்...

தமிழகத்தையும் கேரளாவையும் நீண்ட புவியியல் எல்லைக்கோடுகள் பிணைக்கின்றன (பிரிப்பதில்லை). எல்லையின் இரு புறமும் பல ஊர்களில் தமிழ் மண்ணில் மலையாளமும் கேரளத்தில் தமிழும் பல்லாண்டுகளாய் பிணக்கின்றி வாழ்கின்றன. ஏனெனில் ஒரு காலத்தில் எல்லைக்கோடுகளே அங்கு இல்லை.

நாளை என் கோடு எனக்கே என முறுக்கினால்?

"அகண்ட பாரத"த்தில் வாழ்ந்த அனைவரின் பூர்வ குடியும் பாரதம்தானே?

இன்றைய பாரத எல்லைக்கோட்டுக்குள் அவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வேர்கள் இந்த மண்ணிலிருந்துதானே!


ஆஸ.திரேலியா இன்று ஒரு வளமான வளர்ந்த நாடு. அதன் ஆதிவாசி ஆன்மாவின்மீது எழுப்பப்பட்ட திறந்தவெளி சிறைதானே இன்று இவ்வாறு 'வளர்ந்து' நிற்கிறது? இன்று அங்கு 'மண்ணின் மைந்தர்க்கே நாடு' என்ற முடிவுக்கு வந்தால் என்ன ஆகும்?

நம் நாட்டிலும் பூர்வ குடிகள் இன்றுகூட அவர்களது வீடுகளான கானகங்களிலிருந்து விரட்டப்பட்டு மண்ணுரிமையின்றி சொந்த நாட்டிலேயே அடையாளமிழந்து அலைவது நம் ஆன்மாவை சுடவில்லையா? அவர்களது குடியுரிமைக்கு என்ன செய்யப்போகிறோம்?

யாதும் ஊரே யாவரும் கேளிர் எஎன்ற கணியன் பூங்குன்றனாரை நாளையும் கொண்டாடுவோம்...

பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் மிடிப்பயங்கொள்ளுவார் என்று முழங்கிய பாரதியையும் அவ்வப்போது தொட்டுக்கொள்(ளு)வோம்...

பாரத தேசம்

ராகம் - புன்னாகவராளி

பல்லவி

பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.

சரணங்கள்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)
வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)
முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)
சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத)
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)
காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத)
பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)
ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)
குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)
மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத)
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்
ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத)
சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். (பாரத)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்