அண்மையில் கோவாவில் ஒரு கிராமத்தில் பசு மாடுகளை புலி அடித்துக்கொன்று தின்றதாக கொதித்தெழுந்த ஊர் மக்கள் ஊருக்கு அருகில் உள்ள ஒரு விலங்குகள் காப்பகத்தில்(!) மூன்று குட்டிகளுடன் அடைபட்டிருந்த ஒரு புலிக்கும் குட்டிகளுக்கும் சேர்த்து விஷ உணவு தந்து அனுப்பி விட்டார்கள்.
இது தொடர்பாக ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் நேற்று சட்டசபையில் ஆணித்தரமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்; 'மனிதர்கள் பசுக்களை வதைத்து தின்றால் தண்டனை தருகிறோம். அதுபோல புலிகளையும் தண்டிக்கவேண்டுமல்லவா?'
1. ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து வலம்வரும் புலி மனுஷனைக்கடிக்கும்போது "கண்டதும் சுட உத்தரவு" என்பது மாறிப்போய், 'ஆட்டைக்கடித்தால் சுடு, மாட்டைக்கடித்தால் சுடு' என அரசாணை பிறப்பிக்கலாம்.
2. விலங்கு உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பரித்தால் அடக்கலாம், நசுக்கலாம் அல்லது போனால் போகிறதென்று Animals Penal Code வரையறுத்து, இன்னன்ன குற்றங்களுக்கு இன்னன்ன தண்டனைகள் என வடித்து, விலங்குகள் சார்பாக வாதாட வழக்கறிஞர்களை வளர்த்து, சட்ட மன்றங்களில் வாதாடவைத்து, சேதாரம் பொறுத்து செய்கூலி தண்டனைகள் வழங்கலாம். Only Non Bailable Offence என முடிவு செய்யலாம். Bailஇல் விட்டால் சேதாரம் தொடரும்.
2. இப்படி வன்முறை செய்யும் விலங்குகளுக்கு காப்பகம் எதற்கு என அவற்றை காப்பகங்களில் இருந்து விரட்டிவிடலாம்.
3. விரட்டப்பட்ட விலங்குகள் தஞ்சமடைய காடுகளை தேடினால் 'டேக் டைவர்ஷன்' போர்டு காட்டி காட்டி நம் எதிரி நாடுகளுக்கு அனுப்பிவிடலாம்.
4. அல்லது காடுகளை விரிவாக்கி பாதுகாத்து,விலங்குகளை காப்பகங்களை விட்டு நீக்கி இழுத்து மூடி, அவற்றை காடுகளில் அவற்றின் இயல்பிலேயே அவற்றிற்கான உணவுகளை மனிதர்கள் வேட்டையாடாதவண்ணம் காத்து, விட்டுவிடலாம்.
5. அல்லது காப்பகங்களின் எல்லைகளை ஓட்டைகள் இன்றி அடைத்து "உள்ளே உள்ள விலங்குகளை வெளியே உள்ள மனிதர்களிடமிருந்து" காப்பாற்றலாம்.
நம் நாட்டின் இறையாண்மையை இந்த ஐந்தில் எதை நம் நாடு செய்யப்போகிறது என்பதே வடிவமைக்கப்போகிறது!
கருத்துகள்
கருத்துரையிடுக