முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

காதற்ற ஊசியும்...

அலெக்சாண்ட மாவீரன் உயிரிழக்கும் தருணத்தில் ஒரு வேண்டுகோள் வைத்தானாம்; என் கைகள் வெளியே தெரியும்படி என்னை சுமந்துசெல்லுங்கள் என. எகிப்திய அரச கடவுள்கள் இறந்து புதைக்கப்படுகையில் ஏராளமான செல்வங்களையும் சேர்த்தே புதைக்க உத்தரவிட்டனராம்; போகிற இடத்திலயும் செல்வாக்காய் இருக்கும் பேராவலில். உலகாண்ட பலர் அவர்கள் வாழும் நாளில் சிந்திக்க மறந்ததை, மகாசாண்டரு தான் இறக்கையில் கண்டுபிடித்த பேருண்மையை, நம் பட்டினத்தார் பையன் எவ்வளவு சுருக்கமா சொல்லிட்டு போய்ட்டாரு! "ஊசியில் கூட, காதற்ற ஊசிதான் வேணும்னு நெனச்சி ட்ரை பண்ணாலும் முடியாது!" என்றார். ஏன் காதற்ற ஊசி? இறந்த மனிதரை புதைக்கையில், இருக்கும் மனிதர்கள் (உறவினரோ, புதைப்பவரோ) தங்களுக்குப்பயனுள்ள எதையும் சேர்த்துப்புதைக்க அவர்களது அறிவோ, புதைதொழில் செய்பவரின் தேவைகளோ இடம் தராது. கண்டிப்பாய் களவாடப்படும். இதுவே காது உடைந்த ஊசியென்றால் எவரும் சீந்தார். ஆனாலும் தந்தையே, இதைக்கூட நீ 'கொண்டு செல்ல' முடியாது என பட்டினத்தார் மகன் தந்தைக்கு விட்டுச்சென்ற ஓலை இந்த உலகின் முதல் பெர்சனல் ட்வீட் (tweet)! ; சித்தன

மூன்று: "பட்டியல் சமூகங்களும் பாழாய்ப்போன அவர்களது தேசமும்" - பகுதி மூன்று

காவல் கோட்டம் வரலாறு சார்ந்த கதை. பட்டியல் சமூகங்களின் வலி மிகுந்த வாழ்வின் பதிவு. நிஜத்தில் ரத்தமும் சதையுமாய் இந்த பூமியின் பட்டியல் சமூகத்திலிருந்து வெடித்துக்கிளம்பி ஆங்கில ஆதிக்கத்தை உலுக்கிய ஒரு தனிமனிதன் பற்றி நம்மில் எத்தனை பேர் படித்திருப்போம்? பிர்சா முண்டா! பூமியின் தந்தை! பூமியை நேசித்தவன், காந்திக்கு ஆறு வருடம் பின்னால் பிறந்தவன்... அன்றைய அடக்குமுறை சூழலில் பழங்குடியினர் பலர் தம் அடையாளங்களை மறைத்து பொய்யான பெயர்களில், வெவ்வேறு சாதிப்பட்டியல்களுள் எப்படியாவது இடம் பிடித்தால்தான் அடிப்படை தேவைகள் நிறைவேறும், சமுதாயம் மதிக்கும் என்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்... இவனது சமூகமும் அவ்வாறே. "நல்ல படிப்பு படிக்கணுமா? கிறிஸ்துவனாய் மாறு" என மத மாற்றம் செய்யப்பட்டு கான்வென்டில் கல்வி பயின்ற ஆதிவாசி சிறுவன். இன மரியாதையை விற்று கல்வி வேண்டுமா என்ற கேள்வி எழுந்தபோது பதின்வயதுகூட தாண்டவில்லை அவன்; வெளியேறினான், தன் பூர்வீகம் தேடி, கானகம் நோக்கி. பிரிட்டிஷ் அரசு, உள்ளூர் நில முதலாளிகள் மற்றும் கந்துவட்டிக்காரர்கள் மூலம் கானகங்களை வளைத்து விளை

இரண்டு : "பட்டியல் சமூகங்களும் பாழாய்ப்போன அவர்களது தேசமும்" - பகுதி இரண்டு.

சுக வாழ்வில் திளைத்திருக்கும் நம்மை திடீரென அதிகாரம் நம் இருப்பிடத்திலிருந்து வெளியேற்றி கொட்டடிக்குள் அடைத்து இதை செய் / அதை செய்யாதே என கை முறுக்கினால் என்ன செய்வோம்? பணிந்து போவோம், பெரும்பாலும். இப்படி வடக்கில் தொடங்கிய வன வெளியேற்றம், தேசத்தில் காடுகள் உள்ள இடங்களிலெல்லாம் நடைமுறையில் வந்து, Criminal Tribes Act தேசிய சட்டமானது 1870களில் (சிப்பாய் கலகம் 1857 இல். இதில் உயிரிழந்தோரில் அநேகர் பழங்குடி வழிவந்தவராக இருக்கலாம்...சமூகவாரியான புள்ளி விபரங்கள் இல்லை. ஏன், இறந்த இந்தியர்களின் எண்ணிக்கையில்கூட தகராறு; பத்து லட்சத்திலிருந்நு ஒரு கோடி வரையாம்!). சிப்பாய் கலகத்தின் பாதிப்பு அடுத்த நாற்பது ஆண்டுகள் நீடித்ததாம். இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் என இருப்பவனும் கணக்கு பார்க்க மறந்துபோக, பணம் மற்றும் அதிகார சலுகைகள் உள்ளவர் வசிக்குமிடங்களிலெல்லாம் இந்த தொல்குடி சமூகங்கள் வந்தேறிகளாக (ஆனாலும் அடிமைகளக) ஆக்கப்பட்டனர். அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட வாழ்வு. உணவு, நீர், மருத்துவம், கல்வி எல்லாம் எட்டாக்கனியாகிப்போச்சி. இனப்பெருக்கம் மட்டும் எப்படியோ நடக்க, பட்டிய

பட்டியல் சமூகங்களும் பாழாய்ப்போன அவர்களது தேசமும்" - பகுதி ஒன்று

எச்சரிக்கை 1: இந்த தேசத்தின் இறையாண்மையை நேசிப்பவர்கள் மட்டும் படிக்கவும். எச்சரிக்கை 2 : இது ஒரு குறுந்தொடர். எச்சரிக்கை 3: உங்கள் ஆன்மாவை இத்தொடர் உறுதியாய் புரட்டிப்போடும்! ############ 1800களில் கிழக்கிந்திய கம்பெனி தேயிலை வளர்க்க நம் காடுகளை வெட்டி வீழ்த்தத்தொடங்கியபோது தொடங்கிய யுத்தம் ஒன்று இன்றளவும் தொடர்கிறது... காடு, தொல்குடியினரின் வீடு. காடு, இவர்களது வாழ்வாதாரம். கோண்டு, குஜ்ஜர், என வடக்கில் தொடங்கி இருளர், தோடர் என தெற்குவரை, இவர்களின் வீடுகள் ஏராளம். ஐம்பது ஆண்டுகளில் இவர்கள் அனைவரது வீடுகளிருந்த காடுகளும் தேயிலை தோட்டங்களாக மாறிப்போக, கலவரங்கள் வெடித்து, பரவி, அடங்கி, பரவி...  வீடிழந்த தொல்குடியில், காடு தாண்டி வேறு ஒன்றும் அறியாதவர், பலர் தேயிலை தோட்ட கூலி / அடிமை / கொத்தடிமைகளாக மாற, இன்னும் பலர் காட்டுக்கும் நாட்டுக்கும் இடையிலான வரையப்படாத எல்லைகளில் வழிப்பறிக்கொள்ளை முதல் மூலிகை, தேன், சுள்ளி விற்று வயிறு வளர்க்க, கம்பெனி பறித்த தேயிலைகள் பத்திரமாய் சந்தைக்கு போவது கடினமாச்சி (இவர்கள் வழியே தேயிலை கள்ள சந்தைக்குப்போகிறதாம்).

ஒரு விரல்...

ஒரு விரல். சாமான்யரின் தேவைகள்: ++++++++++++++++++++++ சுத்தமான காத்து, தண்ணி, உணவு குப்பை இல்லாத தெரு மரங்கள் நிக்கிற சாலைகள் நேர்மையான நிர்வாகம்  திறமையான கல்வி சாமான்யரின் கவலைகள்: -------------------------------------------- சாக்கடை நாத்தம் குப்பை மலை நாத்தம் நச்சுக்காத்து நோய் தரும் தண்ணி நிழலில்லா சாலைகள் லஞ்சத்துக்கு காசு விஷ உணவு எட்டாத கல்வி வறண்ட நிலம் கந்துவட்டி ... சாமான்யருக்கு தெரியாத கவலைகள்: ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ குறையும் நோயெதிர்ப்பு சக்தி உடலில் புகும் புதிய நோய்கள் விஷமே உணவு மறைநீர் பருவம் தவறிய மழை காணாமல் போகும் நிலத்தடி நீர் சூழப்போகும் தனிமை ... தேவைகளுக்கும் கவலைகளுக்கும் இடையில் தன்னை நம்பிய வயிறுகளை நிரப்ப இவர் அந்தரத்து கயிற்றில் நித்தமும் கழைக்கூத்து நடத்துகையில் தரையில்  கொடிபிடித்து நித்தம் ஒரு hashtag... ############################ #நடுக்கடலில்_துப்பாக்கி_சூடு #ஆணவக்கொலை #ஸ்டெர்லைட் #கதிராமங்கலம் #எட்டு_வழி #எண்ணூரு #தாதுமணல் #வன்புணர்வு_கொலை #ப

சுஜாதா...

பத்து வருசம் ஆய்டிச்சா வாத்யாரே ! -------------------------------------------------------+--------- சாலு மால் பாஸ் ! அந்த இரானியன் சிவந்த கண்களில் ரேப் தெரிந்தது. மலமூத்ரதாரி! நீயும் குவார்க்கு நானும் குவார்க்கு. அப்ப எங்கிட்ட பணம் இல்லடா. சறுக்கென விழுந்து பழுப்பாய் எழுந்தான். ஒரு விரலைத்தருகிறேன்! ரோமனின் மகன் ரோமன்! மெக்சிகோ தேச சலவைக்காரி ஜோக்குக்கே இப்படின்னா அரிஸ்டோக்ராட்ஸ் ஜோக்... வேண்டாம்! அடிக்க வருவீர்கள். நாகு தெலுகு தெளியேது! தோத்தாங்குளி தோல்புடுங்கி! அதே ற, பெரிய ற! எப்படி அந்த ட்ரிக் என்றேன். வேலை தந்தால் சொல்கிறேன் என்றான்! க்ருஷ்ணா!... நெருடா புருடாக்கள்... இந்த ஆண்டின் சிறந்த தமிழ் பாடல் டைலமோ டைலமோ! மரத்தை சுற்றி டூயட் பாடுவதிலிருந்து வெளியே வந்துவிட்டார். நாம் சப்போர்ட் செய்யவேண்டிய படம் இது. இதெல்லாம் எங்கேந்து உருவி இருக்கேன்னு கண்டுபுடிங்க பாக்கலாம்! வாத்யாருக்கு, சென்ற நூற்றாண்டின் டாப் டென் அறிவியல் மனிதர்கள் பட்டியலில் அவர் பெயர் இல்லை என்ற வருத்தம் இருந்தது. கரையெல்லாம் செ

உயிரே, உயிரின் உயிரே!

மலக்குழி சுத்தம் செய்யும்போது மூச்சு திணறி 4 பேர் பலி. பழுதடைந்த மின்கம்பத்தில் ஊழியர் வேலை செய்யும்போது மின்சாரம் தாக்கி கரியானார். எட்டு அடி உயர சாமி சிலைக்கு அபிஷேகம் செய்கையில் வழுக்கி இறந்தார் அர்ச்சகர். இது மூன்றும் இன்றைய நிகழ்வாக இருந்தால் உங்களை அதிகம் பாதிப்பது எது? அர்ச்சகர் குடும்பத்திற்கு 16 லட்ச ரூபாய் ஊடக வெளிச்சம் காரணமாக சில நாட்களுக்குள் திரட்டப்பட்டுள்ளது... மின்சார ஊழியர், நிரந்தரப்பணியாளராக இருந்தால் மட்டுமே, அரசு இழப்பீடு கிட்டும். கரியானவர் அநேகர் கான்ட்ராக்ட் ஊழியர்கள்! (கஜா புயல் முடிந்து மின் சீரமைப்பு பணிகள் நடந்த இடங்களிலும் இந்த அவலம் நடந்தது...). மலக்குழிக்குள் மரணித்தவர்கள் - அவர்கள் குடும்பம் பற்றி யாருக்கும் கவலையில்லை. இது தினம் தினம் நடப்பதுதானே... ஏன்? நாம் இப்படி சிந்திப்பது எதனால்?? காரணம், மழுங்கிப்போன நம் உணர்வுகளே. பெருஞ்சோகத்திலும் நாவல்டி இருந்தால் மட்டுமே நாம் திகைப்போம். இதுவே வாரா வாரம் ஒருவர் இப்படி வழுக்கி விழுந்து இறந்தால் நாம் பதறமாட்டோம், பழகிப்போவதனால். நம் நாட்டில் புரையோடிப்போன பெ