One of the greatest ever love stories, life stories... ஐரோப்பாவில், ஓடும் ரயிலில் ஒரு அமெரிக்க இளைஞனும் ஒரு பிரெஞ்சு இளைஞியும் வெவ்வேறு இருக்கைகளில். ஒரு மத்திம வயது தம்பதியின் ஒவ்வாமை (incompatibility) கோபம், உடைந்த உரையாடலில் ஆரம்பித்து சுற்றியிருப்போரின் எண்ணங்களில் பொங்கி வழியுமளவு பெரிதாகவும், இளையவர் இருவரும் இடம் மாறி எதிர் எதிரில் அமர்கின்றனர். அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பிக்கிறார்கள். பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக்கொண்டே இருக்கிறார்கள், இன்று கூட, இப்படம் பார்த்தவர்கள் மனதில்! எந்த டாபிக் என்று இல்லாமல் சகலமும் போலித்தனமின்றி, பொய்யின்றி பேசிக்கொள்ளும் அளவு வேவ் லென்ந்த் செட் ஆகிப்போகிறது. ரயில் வியன்னாவில் (ஆஸ்திரியாவின் தலைநகரம்) நிற்கிறது. அந்த இளைஞன் இறங்கவேண்டிய இடம் அது. அவளிடம் விடைபெற்று இறங்குகையில் ஒரு உந்துதலில் மீண்டும் ரயிலேறி ஒரு வேண்டுகோள் வைக்கிறான், 'இன்று ஒரு நாள் இரவு மட்டும் நான் வியன்னாவில் கழிக்கவேண்டியிருக்கிறது. காலையில் அமெரிக்காவுக்கு விமானம். இன்று இராத்தங்க ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. நகரை நடந்து சுற்றியே இரவைக
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!