தோல உரிச்சிருவேன்! மெய்யாலுமே!!
பாம்பு சட்டை உரிக்கும் என சிறு வயதி்லிருந்து கேட்டு வளர்ந்தோம்.
நம்மில் சிலர் பாம்பு சட்டைகள் பார்த்திருப்போம் வீடுகள் அருகில் அல்லது வீடுகளாகிப்போன வயல்வெளிகளில்.
நூல் இழைப்பின்னல் போலவே தோன்றும் இந்த சட்டைகள் காற்றில் பறந்தோ மரங்களில் தொங்கியோ கல்லிடுக்கில் கிடந்தோ நம் கவனத்தை ஈர்த்திருக்கலாம், நிஜ பாம்பு போலவே இருப்பதால்.
ஏன் பாம்புகள் தோலை உரித்துக்கொள்கின்றன? எப்படி அவற்றால் பொத்தானில்லாத, zip இல்லாத சட்டைகளை உருவாக்க, கழற்ற முடிகிறது என்ற இயல்பான கேள்விகள் ஏனோ நமக்கு தோன்றியதே இல்லை...
'பாம்புகள் வளரும் வேகத்தில் அவற்றின் தோல்கள் வளர்வதில்லை. அதனால் அவை தம் தோலைக்கிழித்து வெளியேறும். ஆனால் அதற்குள் இன்னொரு தோல் வளர்ந்திருக்கும்' என மெத்தப்படித்த மகுடி ஊதுபவர்கள் யார் யாரோ சொன்னதாய் இன்டெர்னெட்டில் ஏதேதோ படம் காட்டிக்கொண்டிருப்பதை தள்ளி வைப்போம்.
அவை அளிக்கும் (தவறான) செய்திகள் நம் புரிதலை வளர்ப்பதை விட்டு நம்முள் புதிதாய் ஏராளமாய் கேள்விகள் எழுப்பும்.
உடலை சொறிந்துகொள்ள கரங்கள் ஏதும் இல்லாதவை பாம்புகள். உடலின் அடிப்பகுதி தோல் தேய்ந்துதான் / தேய்த்துதான் இடம்பெயரும். இடுக்குகளில் நுழையும்போது / வெளியேறும்போது மேல்பகுதி தோலிலும் செய்கூலி சேதாரம் நிகழ்ந்தவண்ணமே இருக்கும். இவ்வாறு காயமான பகுதிகளில் பல்லுயிர்கள் குடியேறி நடமாடும். பாம்பின் உயிராற்றல் காயமடைந்த தோலை இறக்கவைத்து அதன் கீழே புதிய தோலை உருவாக்கிக்கொண்டே இருக்கும்.
பாம்புகள் தம் வாழ்வை கடமையாய் செய்யும்போதெல்லாம் இந்த மேல்சட்டை கிழிபடும் வாய்ப்புகள் ஏராளம். நகரும் பாம்புகள் தம் தோல் தம்மோடு நகர இயலாத அளவு இறந்த தோலாய் மாறிப்போனதுகூட அறியாமல் ஊர்ந்து மேற்செல்ல முனைகையில் 'பழையன கழித'லாய் பின்தங்கும் தோல் பாம்பு வடிவிலே கிடந்தது கிடந்தபடி நம்மில் பய அலைகளை கடத்தும் :-)
தைரியத்தை துணைக்கழைத்து கிட்டே போயி குச்சியில தூக்கிப்பாத்தா...
பின்குறிப்பு: 'பாம்பு சட்டை' என்று தமிழில் கூகுளில் தேடிப்பார்த்தால் வருவதெல்லாம் இந்தப்பெயரில் வெளியான சினிமா பற்றிய செய்திகளே;
தமிழன்டா!!!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக