முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் விழித்திரையில் - 5 Before Sunrise


One of the greatest ever love stories, life stories...

ஐரோப்பாவில், ஓடும் ரயிலில் ஒரு அமெரிக்க இளைஞனும் ஒரு பிரெஞ்சு இளைஞியும் வெவ்வேறு இருக்கைகளில்.

ஒரு மத்திம வயது தம்பதியின் ஒவ்வாமை (incompatibility) கோபம், உடைந்த உரையாடலில் ஆரம்பித்து சுற்றியிருப்போரின் எண்ணங்களில் பொங்கி வழியுமளவு பெரிதாகவும், இளையவர் இருவரும் இடம் மாறி எதிர் எதிரில் அமர்கின்றனர். அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பிக்கிறார்கள். பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக்கொண்டே இருக்கிறார்கள், இன்று கூட, இப்படம் பார்த்தவர்கள் மனதில்!

எந்த டாபிக் என்று இல்லாமல் சகலமும் போலித்தனமின்றி, பொய்யின்றி பேசிக்கொள்ளும் அளவு வேவ் லென்ந்த் செட் ஆகிப்போகிறது. 

ரயில் வியன்னாவில் (ஆஸ்திரியாவின் தலைநகரம்) நிற்கிறது. அந்த இளைஞன் இறங்கவேண்டிய இடம் அது. அவளிடம் விடைபெற்று இறங்குகையில் ஒரு உந்துதலில் மீண்டும் ரயிலேறி ஒரு வேண்டுகோள் வைக்கிறான், 'இன்று ஒரு நாள் இரவு மட்டும் நான் வியன்னாவில் கழிக்கவேண்டியிருக்கிறது. காலையில் அமெரிக்காவுக்கு விமானம். இன்று இராத்தங்க ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. நகரை நடந்து சுற்றியே இரவைக்கழிக்க உள்ளேன். என்னோடு இறங்கி ஊர்சுற்ற வருகிறாயா?'.

அவள் யோசிப்பதைக்கண்டு மேலும் கூறுகிறான், 'இருபது ஆண்டுகள் கழித்து, இந்த ரயில் தம்பதியினர் போன்று சகிப்பின்றி சண்டையிடும் வாழ்க்கை அமைந்து, அடடா, அன்று அவன் வியன்னா சுற்றிப்பார்க்க அழைத்தபோது இறங்கியிருந்தால் வாழ்வு வேறுமாதி்ரி ஆகியிருக்குமோ? என்ற வருத்தத்துடன் வாழப்போகிறாயா, இப்போது இறங்கப்போகிறாயா?' 

அழைப்பின், வாதத்தின், அவனின் நேர்மையால் ஈர்க்கப்பட்டு இறங்குகிறாள். 
இருவரும் நடக்க ஆரம்பிக்கின்றனர், உரையாடலை தொடர்ந்தவண்ணம்.

நாமும் அவர்களோடு இறங்கி, அவர்களுடனே பயணிக்கிறோம், ஐகானிக் வியன்னாவின் தெருக்களில். மாலை, முன்னிரவு, இரவு, பின்னிரவு, அதிகாலை என நீளும் இந்த யாத்திரையில் இருவருக்கும் இடையில் நிகழும் புரிந்துணர்வு மேஜிக், அவர்கள் சந்திக்கும் நபர்கள், உரையாடல் தளம், கனம்... and the joyful lightness they bring on the viewers!

அவர்கள் உரையாடலின் மையக்கரு 'காதலாகிக்கசிந்துருகி திருமணம் செய்து வாழ்ந்து நொந்து ஒருவரை ஒருவர் சகிக்க இயலாத அளவு முற்றுவதுதான் காதலா?'

அமெரிக்கனான அவன் தன் உள்ளூர் காதலியுடன் ஐரோப்பிய ட்ரிப்பில் ரிரேஷன்ஷிப் ப்ரேக் ஆகி, புக் செய்திருந்த ப்ளைட் டிக்கட்படி ஊர் திரும்ப உள்ள இடைவெளியை இலக்கற்ற பயணத்தில் கழித்துக்கொண்டிருப்பதை அறிகிறாள்.

நம் வாழ்வு என்பது சினிமாவில் வருவது போல் ஒரு ஓபனிங், ஒரு பில்டப், சில பல ட்விஸ்ட், ஒரு க்ளைமேக்ஸ் என script பண்ணி பயணிப்பதில்லை. வாழ்வில் அன்றாடம் நிகழும் சிறு சிறு அற்புதங்களில்தான் வாழ்வும் உறவும் முகிழ்த்து, தழைக்கும் என்பதற்கு க்ளாசிக் உதாரணம் இப்படம்.

இவர்களின் நகர் உலாவில் எதிர்படும் நபர்கள், ரெஸ்டாரென்ட்ஸ், குறிசொல்லும் பாட்டி, காசுக்கு எந்த வார்த்தையையும் கருத்துள்ள கவிதையாக மாற்றும் நதிக்கரை மனிதன், பெயரற்றவர்களின் கல்லறை, பின்னிரவில் இந்தக்கல்லறை அருகே இவர்களின் உரையாடல், கூடல்... அந்தி மற்றும் உதய நேர வியன்னாவின் கல்வேய்ந்த பழைய சந்துகள் என... 

'Remember, We are all Star Dust'! - என்ன ஒரு க்ளாசிக் டயலாக்...

எதை எழுத? எதை விட?

காலையில் விடைபெறும் நேரத்தில், அவளை ரயிலேற்றிவிட்டு இறங்குமுன், உச்ச காதல் மற்றும் தாங்க முடியாத பிரிவுத்துயர உந்துதலில், 'காதல் வாழ்வு தினசரித்தகராறுதான் என்று நாம் பேசியதையெல்லாம் மறந்திடலாம். நாம ஆறு மாசம் கழிச்சி இதே ஸ்டேசன்ல மீட் பண்ணலாமா? நம் காதல் நிஜமென்றால் அதுவரை நோ லெட்டர்ஸ், நோ டெலிபோன் கால்ஸ், ஓகே?' என இருவரும் முடிவு செய்து, இரயில் நகர, நாமும் அவர்களிடமிருந்து அந்த ரயிலடியில் இருந்து கலவையான நெகிழ்ச்சியோடு பிரியாவிடை பெற்றதுபோன்ற உணர்வுடன் படம் முடிகிறது.

Intimate என்பதற்கு இதைவிட மேன்மையான திரைப்படம் ஒன்றை இனம்காண்பது... வாய்ப்பே இல்லை!

Youthful exuberance, abundant optimism, child like enthusiasm, curiosity, Honesty... நேர்மை... உன்னதமான லெவலுக்கு படமாக்கியவர் இயக்குநர் ரிச்சர்ட். லிங்க்லேட்டர். Steven Spielberg, James Cameron, Christopher Nolen அறிந்து வியப்பவர்க்கு ஒரு செய்தி: அவர்கள் நம் கற்பனைபளையும், பயங்களையும் பிரம்மாண்டப்படுத்துபவர்கள். இவரோ நம் வாழ்வின் இயல்பான நிமிடங்களை, வாழ்தலை பிரம்மாண்டமாய் கொண்டாடுபவர். இந்த நூறாண்டின் தலைசிறந்த இயக்குநர்களில் தனி்த்து மிளிர்பவர்.

Ethan Hawke and July Delpy - சான்சே இல்லங்க என்பதாக fantastic performance. இன்று வரை, மோகமுள்ளில் பாபுவும் யமுனாவும் நிசம் என்று நம்பும் மக்கள் போல இவர்களது characters இரண்டும் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்யும் கூட்டம் உலகெங்கும் நிறைந்துள்ளது!

கல்ட் க்ளாசிக் என்பதற்கு முற்றும் பொருந்தும் இப்படம் சென்ற நூறாண்டுகளில் மிகச்சிறந்த பட வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள், படம் வந்த நாளிலிருந்து இந்த நாள் வரை.
Please watch this movie but don't google to find out what happened then. அவர்களுக்குள் பறிமாறிக்கொண்ட ப்ராமிஸ் என்ன ஆச்சி? ஆறுமாதம் கழித்து சந்தித்தார்களா? என்ற கேள்விகளுக்கு விடை அறிய நம் உலகம் பத்து வருடங்கள் காத்திருந்தது! அதை அறிய அடுத்த பதிவு வரை நீங்கள் காத்திருங்களேன்! காத்திருத்தலும் சுகமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்